மாவட்டச் செய்திகள்

தொழிலாளர்களிடையே பிரிவினைப் போக்கை ஏற்படுத்தி 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்களின்  12 கோடி ரூபாய் நிலுவைத் தொகையை வழங்காமல் சீலா ராணி டெக்ஸ்டைல் என பெயரை மாற்றி சிவகாமி மில் நிறுவனம் பல வருடங்களாக நூதன மோசடி செய்து வந்தது அம்பலம் !

500க்கும் மேற்பட்ட தொழிலாளர்களின்  12 கோடி ரூபாய் நிலுவைத் தொகையை வழங்காமல் நிர்வாகம் தொழிலாளர்களிடையே பிரிவினைப் போக்கை ஏற்படுத்தி சீலா ராணி டெக்ஸ்டைல் என பெயரை மாற்றி சிவகாமி மில் நிறுவனம் நூதன முறையில் மோசடி செய்து வந்தது தற்போது அம்பலமாகியுள்ளது!


மதுரை சமயநல்லூர் அருகே 6கோடி நிலுவைத் தொகையை  வழங்க கோரி தொழிலாளர்கள் ஆலையை முற்றுகையிற்று போராட்டம் நடத்தியதால் பரபரப்பு

மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே தேனூர் ஊராட்சிக்கு உட்பட்ட  கட்ட புலி நகர் பகுதியில் உள்ள சீலா ராணி டெக்ஸ்டைல் தனியார்  மில்லில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு பணியாற்றிய சுமார் 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய தொகையான 6:45 கோடியை உடனடியாக வழங்க கோரி 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள்ஆலையை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது இங்கு 2006 ஆம் ஆண்டுக்கு முன்பு பணியாற்றிய தொழிலாளர்களுக்கு ஆலை நிர்வாகம் தர வேண்டிய பணத்தை இதுவரை தரவில்லை என கோரி சிஐடியு மதுரை மாவட்ட செயலாளர் அரவிந்தன் தலைமையில் 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இன்று காலை ஆலை முன்பு திரண்டனர் இவர்கள் தங்களுக்கு  நிர்வாகம் தரவேண்டிய தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என கோரி ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டனர்

இதுகுறித்து சிஐடியு மதுரை மாவட்ட செயலாளர் அரவிந்தன் கூறுகையில்
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு சிவகாமி மில் என்ற பெயரில் செயல்பட்டு வந்த இந்த டெக்ஸ்டைல்  நிர்வாக பிரச்சனை காரணமாக 2006 ஆம் ஆண்டு அப்போது பணிபுரிந்த தொழிலாளர்கள் அனைவருக்கும் நிலுவைத் தொகையாக தரவேண்டிய பணம் ரூபாய் 12 கோடிக்கு மேல் இருந்த நிலையில் ஆலையை வேறொருவர் பெயருக்கு மாற்றியது இந்த நிலையில் புதிதாக பொறுப்புக்கு வந்தவர்கள் சிவகாமி மில் என்ற பெயரை சீலா ராணி டெக்ஸ்டைல் என்ற பெயரில் மாற்றி நடத்தி வந்தனர்  இதனால் நிலுவைத் தொகை கிடைக்காத 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சிஐடியு தொழிற்சங்கம் மூலம் நீதிமன்றத்தை அணுகி பின்பு அதன் மூலம் நிர்வாகத்தினர் பேச்சு வார்த்தையில் ஈடுபட்ட நிலையில் தொழிலாளர்களுக்கும் ஆலை நிர்வாகத்திற்கும் நடைபெற்ற சமரச பேச்சு வார்த்தையில் 6:45 கோடி தருவதாக ஆலைநிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது இதனை அடுத்து தொழிலாளர்கள் நீதிமன்ற நடவடிக்கையை சற்று நிறுத்தி வைத்திருந்த நிலையில் ஆலை நிர்வாகம் தொழிலாளர்களிடையே பிரிவினைப் போக்கை ஏற்படுத்தி பணத்தை வழங்குவதில் காலதாமதம் செய்வதாகவும் இதனால் தொழிலாளர்களுக்கு சேர வேண்டிய பணம் தற்போது வரை வழங்கப்படவில்லை எனவும் இதுகுறித்து  நிர்வாகத்திடமும் முறையான பதில் இல்லை என்றும் கூறி  200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க கோரி தொழிற்சாலைக்கு வந்துள்ளோம் என்று கூறினார்

அதனைத் தொடர்ந்து 11 மணிக்கு மேல் ஆலை நிர்வாகம்  சார்பாக பேச்சு வார்த்தைக்கு வந்தவர்கள் சிஐடியு தொழிற்சங்கத்துடன்  பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர் முடிவில்  19/ 8/ 2024  ஞாயிற்றுக்கிழமை சீனியாரிட்டி அடிப்படையில் முதல் 52 நபர்களுக்கு அவர்களின் நிலுவைத் தொகையை தருவதாகவும் அடுத்த சில வாரங்களில் தொடர்ச்சியாக மீதி உள்ளவர்களுக்கும் நிலுவைத் தொகையை வழங்குவதாகவும் கூறியுள்ளதாக கூறினார். இதன் காரணமாக தொழிற்சாலைமுன்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தற்காலிகமாக போராட்டத்தை வாபஸ் பெற்று கலைந்து சென்றனர்

Related Articles

Back to top button