தொழில் போட்டியால் கூலிப்படையை வைத்து தொழிலதிபரை கொலை செய்த அதிர்ச்சி வீடியோ!

சென்னை ரெட்ஹில்ஸ் அருகே பாடியநல்லூரில் திருவள்ளூர் மாவட்ட அதிமுக அம்மா பேரவை இணை செயலாளர் பார்த்திபன் காலையில் நடை பயிற்சி செய்யும் போது கூலிப்படை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூரை சேர்ந்தவர் பார்த்திபன். இவர் 35 வருடங்களுக்கு மேலாக ரெடிஹில்ஸ் பாடியநல்லூரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் பிரபல தொழிலதிபர் மோரை சேகர் அவருடைய மனைவியின் சகோதரியை திருமணம் செய்துள்ளார்.இவர் தற்போது திருவள்ளூர் மாவட்ட அதிமுக அம்மா பேரவை இணை செயலாளராக இருகிறா்.17/08/2023 அன்று
காலை 6.30 ரெட்டில்ஸ் பாடிய நல்லூர் அங்காள பரமேஸ்வரி கோவில் வளாகத்தில் நண்பர்களுடன் நடை பயிற்சி முடித்துவிட்டு வீடு திரும்பிய போது இருசக்கர வாகனத்தில் வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் ஓட ஓட வெட்டி கொலை செய்துள்ளனர்.
இவர் செம்மரக்கட்டை வியாபாரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஜாமீனில் வெளி வந்தது குறிப்பிடத் தக்கது. அதுமட்டும் இல்லாமல் தற்போது ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இந்த ரியல் எஸ்டேட் தொழிலில் இடங்கள் வாங்குவதில் விற்பதில் பார்த்திபனுக்கும் மற்றொரு குழுவுக்கும் போட்டியில் மோதல் போக்கால் முன் விரோதம் உருவாகியுள்ளது என்றும் அந்த மோதல் போக்கால் உருவாகிய முன் விரோதத்தால் பார்த்திபனை கொலை செய்ய கடந்த ஒரு மாதமாக கொளத்தூர் அகரம் பகுதியில் உள்ள கூலிப்படையை வைத்து திட்டம் தீட்டி உள்ளனர். இந்தக் கூலிப்படையினர் ஏற்கனவே ராகேஷ் என்ற ரவுடியை பெரம்பூரில் இரண்டு வருடத்திற்கு முன்பு சாலையில் ஓட ஓட வெட்டியது குறிப்பிடத்தக்கது.
பாடியநல்லூரில் பார்த்திபன் எப்போதுமே பத்து பேர் கொண்ட கும்பலுடன் தான் இருப்பார் . அதே போல் தான் நடை பயிற்சி மேற்கொள்ளும் போதும் 10 பேர் கொண்ட கும்பலுடன் தான் நடை பயிற்சி செய்வார்.
இதை
கடந்த சில நாட்களாக கூலிப்படையினர் பாடியநல்லூர் அங்காள பரமேஸ்வரி கோவில் வளாகத்தில் நடை பயிற்சியில் இருக்கும் பார்த்திபனை நோட்டமிட்ட வந்துள்ளதாகவும்
17/08/2023 அன்று நடை பயிற்சியிலிருந்த பார்த்திபன் தனியாக செல்லும் நேரத்தை சரியாக பார்த்து அந்த நேரத்தில் இந்த கூலிப்படையினர் வீட்டின் மிக அருகில் நான்கு பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வந்துள்ளது. கொலை செய்த போது அருகில் இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவு செய்துள்ளதை வைத்து திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜகுமார் 6 தனிப்படை அமைத்து காவல்துறையினர் கொலையாளிகளை தேடி வருவதாகவும் நாளை நாளை மறுநாள் கொலையாளிகளை பிடித்து விடுவதாக தெரிவித்த நிலையில்

காவல்துறையினர் கொலையாளிகளை பிடிப்பதற்கு முன்பு .

இக்கொலை வழக்கு தொடர்பாக, சென்னை- மகாகவி பாரதி நகரை சேர்ந்த முருகன், செங்குன்றத்தைச் சேர்ந்த சக்திவேல் ஆகிய இருவர் சேலம் ஜே.எம்- 2 நீதிமன்றத்திலும் சென்னை- போரூரை சேர்ந்த சக்திவேல், காசிமேட்டை சேர்ந்த மோகன், மணலியை சேர்ந்த கவுரிசங்கர் ஆகிய 3 பேர் ஆற்காடு ஜே.எம். நீதிமன்றத்திலும் சரணடைந்தனர். இவர்கள் 5 பேரையும் காவலில் எடுத்து விசாரணை நடத்தியதில்

ரெட்டில்ஸ் பகுதியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் ஜாபர் என்ற தொழிலதிபரிடம் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ரெட்டில்ஸ் நல்லூரில் வாசித்து வரும் ரவுடி முத்து சரவணன் பணம் கேட்டு மிரட்டியதாகவும் இந்த விஷயத்தை ரெட்டில்ஸ் பாடியநல்லூர் கொலை செய்யப்படும் முன் பார்த்திபனிடம் ஜாபர் தெரிவித்ததாகவும் உடனே பார்த்திபன் முத்து சரவணன் தொடர்பு கொண்டு பணம் கேட்டு ஏன் மிரட்டுகிறாய் சொந்த ஊரிலிருந்து பிழைக்க வந்த இடத்தில் ஒழுங்கா இரு என்று மிரட்டியதாக கூறியுள்ளார்.. அதற்கு முத்து சரவணன் நான் யார் என்று உனக்கு காண்பிக்கிறேன் என்று கூறியுள்ளார். அதன் பின்பு பத்து நாட்களாக பார்த்திபனை கொலை செய்ய திட்டம் தீட்டி வந்ததாகவும் 17/08/2023 அன்று காலையில் 6:00 மணிக்கு நடை பயிற்சி முடித்து வீட்டிற்கு திரும்பிய பார்த்திபனை ரவுடி முத்து சரவணன் மற்றும் கூட்டாளிகள் 5பேர் சேர்ந்து அறிவாளால் வெட்டி கொலை செய்துள்ளனர். இதில் ஐந்து பேர் சரணடைந்த நிலையில் ரவுடி முத்து சரவணன் தற்போது தலை மறைவாக இருப்பதால் காவல்துறை கொலையாளி ரவுடி முத்து சரவணனை தேடி வருவதாகவும் அவருடைய செல்போன் இருக்கும் இடத்திற்கு காவல்துறை சென்றால் அங்கு கொலையாளி ரவுடி முத்து சரவணன் இல்லை என்றும் இதனால் கொலையாளியை கண்டுபிடிக்க காவல்துறைக்கு பெரும் சவாலாக இருப்பதாகவும் அதிர்ச்சி தகவல் வந்துள்ளது. கொலையாளி முத்து சரவணன் கல்லூரி வரை படித்துள்ள இளைஞர் என்றும் தற்போதுள்ள தொழில் நுட்பத்தை பயன்படுத்தி தான் இருக்கும் இடத்தை மாற்றி வேறொரு இடத்தை தன் செல் போனில் இருப்பதாக தொழில்நுட்பத்தை பயன்படுத்தி காவல்துறை இடம் தப்பித்து வருவதாகவும் தகவல் வந்துள்ளது. இதுவரை ஏழு கொலை வழக்கு அவர் மீது உள்ளது . ஆகையால் என்கவுண்டர் பட்டியலில் அவர் பெயர் இருப்பதாகவும் காவல்துறை வட்டாரம் தெரிவித்துள்ளது.

ரெட்டில்ஸ் காந்திநகர்
அதுமட்டுமில்லாமல் ரெட்டில்ஸ் காந்தி நகரைச் சேர்ந்த ரவுடி சேது கூட்டாளியான சரத்தின் தங்கையை முத்து சரவணனுக்கு நெருங்கிய கூட்டாளியான லாரி ஓட்டுனராக இருந்த கார்த்திக் என்பவர் 2014 இல் பாலியல் தொந்தரவு செய்து வந்ததாக கார்த்திக் என்பவரை கொலை செய்ததிலிருந்து ரவுடி சேதுவுக்கும் ரவுடி முத்து சரவணனுக்கும் இடையே தற்போது வரை ஒன்பது வருடங்களாக இரண்டு பேரும் மாறி மாறி தங்களது பகையை தீர்த்துக்கொள்ள பல கொலைகள் செய்துள்ளதாக பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டு பலமுறை குண்டாஸ் போடப்பட்டு சிறையில் இருந்ததாகவும் தற்போது ரவுடி சேதுவும் ரவுடி முத்து சரவணன் இரண்டு பேரும் தலைமறைவாக இருப்பதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.
எது எப்படியோ தொழில் போட்டி காரணமாக கூலிப்படைகளை ஏவி கொலை செய்வது தற்போது பெருகி வருவதால் சென்னை மாநகரத்தில் இருக்கும் கூலிப்படைகளை சென்னை மாநகர காவல் ஆணையர் மற்றும் தமிழ்நாடு டிஜிபி அவர்களும் கூலிப்படை வைத்து கொலை செய்யும் ரவுடிகளை முற்றிலும் ஒழிக்க துரித நடவடிக்கை எடுத்து கூலிப்படைகளை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.