நள்ளிரவில் லாரிகளில் நூதன முறையில் தொடர் டீசல் திருட்டு! உடந்தையாக செயல்படும் கப்பலூர் ஆஸ்டின் பட்டி காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர் !?
நடவடிக்கை எடுப்பாரா மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்!?
நள்ளிரவில் லாரிகளில் நூதன முறையில் தொடர் டீசல் திருட்டு !
வழக்கு பதிவு செய்யாமல் குற்றவாளிகளுக்கு துணை போகும் கப்பலூர் ஆஸ்டின் பட்டி உதவி காவல் ஆய்வாளர் !?
நடவடிக்கை எடுப்பாரா மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்!?
திருமங்கலம் காவல் உட்கோட்டத்திற்குட்பட்ட ஆஸ்டின்பட்டி புதிய காவல் நிலையத்தை
தமிழக முதல்வர் காணொளி காட்சி மூலமாக இரண்டு வருடங்களுக்கு முன்பு 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் காலை 10.30 க்கு திறந்து வைத்தார்.அப்போது மாவட்ட ஆட்சியராக இருந்த அனீஸ் சேகர் மற்றும் அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த பாஸ்கரன் முன்னிலையில் அமைச்சர் மூர்த்தி குத்துவிளக்கு ஏற்றி காவல் நிலையத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தது குறிப்பிடத்தக்கது.
இந்த புதிய காவல் நிலையம் தோப்பூர் தமிழ்நாடு வீட்டு வசதி குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ளது.
இதற்கு முன்பு ஆஸ்டின் பட்டி காவல் நிலையம் ஆஸ்டின் பட்டி மருத்துவமனை அருகே இயங்கி வந்தது குறிப்பிடத்தக்கது.
திருநெல்வேலி கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலைக்கு மிக அருகே இந்த காவல் நிலையம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மதுரை புறநகர் பகுதிகளில் அதிக அளவு நடைபெறும் வழிப்பறி கொலை கொள்ளை திருட்டு கடத்தல் ஆகியவற்றை தடுப்பதற்கு மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவப்பிரசாத் உத்தரவின் பேரில் வாகன சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு வந்தது.
மதுரை சுற்றியுள்ள புறவழிச் சாலையில் உள்ள கூத்தியார் குண்டு ,விரகனூர் ,
ஒத்தக்கடை ,ஆகிய முக்கிய இடங்களில் அதிக அளவு குற்ற சம்பவங்களை தடுப்பதற்கு 24 மணி நேரமும் சோலார் மின் வசீக 360 டிகிரி சுழலும் அதிநவீன கேமராக்களுடன் மொத்தம் 21 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு பாதிக்கப்பட்டு அந்த கண்காணிப்பு மையங்களை மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவ பிரசாத்
2023 செப்டம்பர் மாதம் 12 ஆம் தேதி வைத்தார் அப்போது பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவ பிரசாத் இந்த கண்காணிப்பு மையங்களில் இருந்து செல்போன் மூலம் கண்காணிப்பு கேமரா எம்மை பார்ப்பதற்கான வசதிகள் செய்யப்பட்டு எங்கெங்கு கேமராக்கள் பயனில்லாமல் உள்ளதோ அதை உடனடியாக சரி செய்வதற்கான ஏற்பாடுகளும் செல்போன் செயலின் மூலம் கண்டறிந்து அவற்றை சரி செய்யப்படும் எனவும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆனால் அதன் பின்பு கூத்தியார் குண்டு பகுதிகளில் நடக்கும் குற்ற சம்பவங்களை கண்டுபிடிக்க
கண்காணிப்பு மையத்தில் உள்ள நவீனன கண்காணிப்பு 360 கேமராக்கள் தற்போது உபயோகத்தில் இருக்கிறதா !? அப்படி உபயோகத்தில் இருந்தால் அந்தப் பகுதியில் லாரிகளில் டீசல் திருடும் திருட்டு கும்பல்களை ஏன் கண்டுபிடிக்க முடியவில்லை ! கண்காணிப்பு கேமராக்கள் பயன்பாட்டில் உள்ளதா!? பழுதடைந்துள்ளதா!?
இதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய ஆஸ்டன் பட்டி காவல் நிலைய
உதவி காவல் ஆய்வாளர்கள் திருட்டு சம்பவங்கள் குறித்து புகார் கொடுத்தால் புகாரையே வாங்காமல் மறுத்து புகாரை திருப்பிக் கொடுத்து புகார் கொடுக்க அவர்களையே திருட்டு பட்டம் கட்டி மிரட்டி வருவதாகவும் சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர்.
தற்போது கப்பலூர், கூத்தியார் குண்டு ,தனக்கன்குளம் ,தோப்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் திருட்டு சம்பவங்கள் அதிகமாக நடைபெற்று வருவதாகவும் தற்போது அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
முக்கியமாக வெளி மாநிலம் வெளி மாவட்டங்களில் இருந்து சரக்கு ஏற்றி கொண்டு செல்லும் கனரக லாரி ஓட்டுனர்கள் இரவு நேரங்களில் தூக்கத்தை கட்டுப்படுத்த லாரியை நிறுத்தி ஓய்வெடுக்க கப்பலூர் சர்வீஸ் சாலையில் நிறுத்தி தூங்குவது வழக்கம்.
இதை சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் சமூக விரோதிகள் சர்வீஸ் சாலைகளில் நின்றிருக்கும் லாரிகளில்
டீசல் டேங்கில் இருக்கும் டீசலை நூதன முறையில் திருடிச் சென்று விற்று வரும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருவதாக அப்பகுதி சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
இது சம்பந்தமாக அப்பகுதி மக்களிடம் விசாரித்த போது லாரிகளில் உள்ள டீசல் டேங்கரில் உள்ள 200 லிட்டர் டீசலைக் கூட சில நிமிடங்களில் திருடி எடுக்கும் அளவிற்கு நூதன முறையை பயன்படுத்தி வருவதாகவும் லாரியில் இருக்கும் டீசல் டேங்கில் டீசல் திருடும் திருட்டு கும்பல்கள் கொண்டு வரும் வாகனத்தில் பிருத்தியோகமான முறையில் மோட்டார் இயந்திரத்துடன் இணைத்து டேங்கர் பொருத்தப்பட்டு இருப்பதாகவும் திருடர்கள் சாலையில் நின்றிருக்கும் லாரி டேங்கரில் உள்ளே விட்டு சில நிமிடங்களில் 200 லிட்டர் டீசல் வரை எடுத்து கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பிச் சென்று விடுவார்களாம் .
சமீப காலமாக கப்பலூர் சர்வீஸ் சாலையில் நின்றிருந்த இருபதுக்கு மேற்பட்ட லாரிகளில் டீசல் திருட்டு நடைபெற்று இருப்பதாகவும் மக்கள் அதிர்ச்சி தகவலை தெரிவிக்கின்றனர்.
28/12/2013 அன்று சென்னையை அடுத்த கும்மிடிப் பூண்டியில் இருந்து சரக்கு ஏற்றிக்கொண்டு நாகர்கோவில் செல்லும் வழியில் 29/ 12/2023 அன்று அதிகாலை 12.30 மணிக்கு தூக்கம் வந்ததால் ஓய்வெடுப்பதற்காக தனக்கன்குளம் பைப் பாஸில் லாரியை நிறுத்திவிட்டு( லாரி என்
TN.40.AC 0279) தூங்கிவிட்டு 30/12 2023 விடியற்காலை 5.30 மணிக்கு எழுந்து லாரியை சுற்றி பார்த்த போது டீசல் டேங்க் மூடியை உடைத்து லாரியில் இருந்த 250 லிட்டர் டீசலை திருடி சென்றுள்ளனர். உடனே லாரி ஓட்டுநர் லாரி உரிமையாளருக்கு நடந்த சம்பவத்தை தெரிவித்துள்ளார். லாரி உரிமையாளர் ஓட்டுநரை காவல் நிலையத்தில் புகார் கொடுக்கும்படி கூறியுள்ளார். உடனே
30 /12 /2023 ஆஸ்ட்டின்பட்டி காவல் நிலையத்தில் டீசல் திருடு போனது சம்பந்தமாக புகார் கொடுத்துள்ளார் ஓட்டுநர்.
புகாரை பெற்றுக் கொண்ட ஆஸ்டின் பேட்டி காவல் சார்பு ஆய்வாளர் மகேந்திரன் என்ன நடந்தது என்று விசாரித்துள்ளார். பின்னர் லாரி நிறுத்தப்பட்டிருந்த இடத்தில் உள்ள மரம் அறுக்கும் மில்லில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். லாரி அருகே ஒரு நபர் சென்று வருவது மட்டுமே பதிவாகி அந்த நபரின் முழு உருவம் இதில் அடையாளம் தெரியவில்லை .
டீசல் திருடி எல்லாரும் முன்பும் பின்பும் தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்வதாக ஆஸ்டின்பட்டி உதவி காவல் ஆய்வாவாளர் மகேந்திரன் கூறியுள்ளார். அதை நம்பி
லாரி ஓட்டுநர் லாரி உரிமையாளருக்கு தகவல் கொடுத்துள்ளார் லாரி உரிமையாளர் தன்னுடைய செல்போனில் இருந்து லாரியில் டீசல் எவ்வளவு இருக்கிறது என்று சென்சார் மூலம் பார்த்ததில் நான்கு கிலோ மீட்டர் செல்லும் அளவுக்கு டீசல் இருப்பதாக காண்பித்துள்ளது உடனே கப்பலூர் இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்கிற்கு ஓட்டுனர் லாரியை எடுத்துச் சென்று டீசல் போட்டுள்ளார்.
அதன் பின்பு
லாரியில் இருந்த சரக்கை நாகர்கோவிலுக்கு எடுத்துச் சென்று அங்கு இறக்கிவிட்டு
அதன் பின்பு 01/01/2024 அன்று மீண்டும் ஆஸ்டின் பட்டி காவல் நிலையத்துக்கு ஓட்டுநர் வந்து உதவி காவல் ஆய்வாளர் மகேந்திரனை பார்த்துள்ளார். புகார் கொடுத்த அன்று விசாரிப்பதாக கூறிய உதவி காவல் ஆய்வாளர் விசாரணை என்ற பெயரில் லாரியில் டீசலை திருடியது நீதான் என்று ஓட்டுநரை மிரட்டியதாகவும் ஓட்டுனருக்கு ஆதரவாக சமூக ஆர்வலர்கள் காவல் நிலையத்திற்கு தொலைபேசியிலும் நேரிலும் சென்று உதவி காவல் ஆய்வாளர் மகேந்திரனிடம் விளக்கம் கேட்பதற்கு புகார் கொடுத்ததற்கு வழக்கு பதிவு செய்ய முடியாது லாரியில் டீசலை நீயே திருடிவிட்டு புகார் கொடுக்க வந்துள்ளதாக ஓட்டுனரை விசாரணை என்ற பெயரில் மிரட்டும் தோணியில் பேசியதாகவும்
புகார் மீது சி எஸ் ஆர் பதிவு செய்ய முடியாது என்றும் புகார் கொடுக்க வந்தவர்களையும் திருட்டு பட்டம் சூட்டிப்அஸ்தம்பட்டி உதவி காவல் ஆய்வாளர் மகேந்திரன் அநாகரிகமாக நடந்து கொண்டதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
அதுமட்டுமில்லாமல் கப்பலூர் தோப்பூர் சுற்றுவட்டார பகுதியில் முழுவதுமே தொழிற்சாலைகள் நிறைந்த பகுதியாகும். இங்கு நூற்றுக்கணக்கான லாரிகள் சரக்குகளை ஏற்றுவதற்கும் இறக்குவதற்கும் வந்து செல்லும் இடமாக இருப்பதால் இதை சாதமாக பயன்படுத்திக் கொள்ளும் டீசல் திருடர்கள் இந்த இடத்தை தேர்வு செய்து நூதன முறையில் டீசலை திருடிச் செல்வதாகவும் சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர்.
கப்பலூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சர்வீஸ் சாலைகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் உள்ள பதிவுகளை பார்த்தாலே டீசல் திருடும் நபர்களை சுலபமாக பிடித்து விடலாம் என்றும் ஆனால் அதற்கான முயற்சியை ஆஸ்டின்பட்டி காவல் நிலைய காவலர்கள் முயற்சி செய்யாமல் அலட்சியப் போக்கை கடைபிடித்து வருவதாகவும் அது மட்டும் இல்லாமல் புகார் கொடுத்தவர்கள் மீது குற்றச்சாட்டை சுமத்தி வழக்கு பதிவு செய்ய மறுத்து வருவதால் ஆஸ்டின் பட்டி காவல் நிலையத்தின் இருக்கும் காவலர்களுக்கும் டீசல் திருடும் கும்பலுக்கும் தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகத்தை சமூக ஆர்வலர்கள் எழுப்பி உள்ளனர். மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தொடர் டீசல் திருட்டை செய்து வரும் கும்பல்களை கண்காணித்து பிடிக்க தனிப்படை அமைத்து லாரிகளில் நூதன முறையில் டீசல் திருடி எங்கு விற்கிறார்கள் அதை யார் வாங்குகிறார்கள் டீசல் திருடுபவர்களுக்கு பின்புலமாக யார் செயல்படுகிறார்கள் என்று கண்டுபிடிக்க முடியும். அப்படி கண்டுபிடித்து டீசல் திருட்டில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்து சிறையில் அடைத்தால் மட்டுமே தொடர் டீசல்
திருட்டை தடுத்து நிறுத்த முடியும் . டீசல் திருத்திற்க்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் .
அதேபோல் தொலைதூரத்தில் இருந்து கனரக வாகனங்களை ஓட்டி வரும் ஓட்டுனர்கள் சிறிது நேரம் நிம்மதியாக ஓய்வெடுத்து செல்வார்கள் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆகவே லாரி ஓட்டுநர்களின் நலன் கருதி புதிதாக பொறுப்பேற்றுள்ள மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுள்ள பிரவீன் உமேஷ் டோங்ரே நடவடிக்கை எடுக்க வேண்டி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
.