நானும் ரவுடிதான் என்று பேசிய காவல் உதவி ஆய்வாளர் இசக்கி ராஜாவின் சம்பளத்தில் ஒரு லட்சம் பிடித்தம் செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு மனித உரிமை ஆணையம் உத்தரவு.
நானும் ரவுடிதான் என்று சொன்ன காவல் உதவி ஆய்வாளர் இசக்கி ராஜாவின் சம்பளத்தில் ஒரு லட்சம் பிடித்தம் செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு மனித உரிமை ஆணையம் உத்தரவு.
2019 ஆம் ஆண்டு மே 15 ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி காவல் நிலையத்தில் பணியில் இருந்த உதவி காவல் ஆய்வாளர் இசக்கி ராஜாவை பணியிட நீக்கம் செய்ய வேண்டும் அவர்களுக்கு காவல்துறையில் வழங்கப்பட்ட கை துப்பாக்கியை கையில் வைத்துக் கொண்டு சீருடை அணிந்தும் சீருடை இல்லாமல் சினிமா ஹீரோ போல போட்டோ சூட் எடுத்து அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருந்தார்.
அது மட்டும் இல்லாமல் மட்டை மாடசாமி என்ற ரவுடியிடம் பேசும்போது என்னுடைய குடும்பமே ரவுடி குடும்பம் தான் காக்கிச்சட்டையை கழட்டி வைத்து விட்டு வருகிறேன் நேருக்கு நேராக ஒத்தைக்கு ஒத்தை மோதிக் கொள்ள தயார் என்று பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இதை பார்த்த சமூக ஆர்வலர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்த வந்த நிலையில் சமூக வலைதளங்களில் சட்டவிரோதமாக உதவி காவல் ஆய்வாளர் இசக்கி ராஜா அதிகாரத்தை மீறி காவல்துறையை களங்கப்படுத்தும் வகையில் புகைப்படங்கள் ஆடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருவதால் அவரை பணியிட நீக்கம் செய்ய வேண்டும் என்று மதுரை பழங்காநத்தை சேர்ந்த முரளி கிருஷ்ணா என்பவர் தான் வைத்திருக்கும் வில்லங்கச் செய்தி யூடியூப் சேனலில் பதிவிட்டிருந்தார். இந்தப் பதிவை பார்த்துவிட்டு இசக்கி ராஜா அவர்கள் முரளி கிருஷ்ணா அவர்களுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு நான் யார் தெரியுமா என்னைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும் எனக்கு தமிழகத்தில் உள்ள எல்லா வழக்கறிஞர்களும் தெரியும் உடனே அந்த பதிவை எடுத்து விடுமாறு கூறியதற்கு முரளி கிருஷ்ணன் அவர்கள் நான் தவறாக எதுவும் பதிவிடவில்லை அப்படி நான் தவறாக அதில் பதிவு செய்திருந்தால் நீங்கள் சட்டப்படி என்னை அணுகலாம் என்றும் கூறியுள்ளார் .அதற்கு அப்படியா நான் என்ன செய்கிறேன் என்று பாருங்கள் என்று youtube சேனலையே முடக்கி விட்டுள்ளார் இசக்கி ராஜா. அது மட்டும் இல்லாமல் அவர்களுக்கு தெரிந்த ரௌடிகளை வைத்து முரளி கிருஷ்ணாவை தொலைபேசி மூலம் மிரட்டியும் உள்ளார். ஆகவே இசைக்கு ராஜா தான் பிரபலம் ஆக வேண்டும் என அராஜகத்தை கட்டவிழ்த்து விட்டு ரவுடிகள் போல சட்டத்துக்கு புறம்பாக செயல்பட்டு மனித உரிமை மீறலில் ஈடுபட்டு வருகிறார் என்றும். இதனால் எனக்கும் என் குடும்பத்தில் இருப்பவர்களுக்கும் உயிருக்கு பாதுகாப்பு இல்லாத நிலையில் இருப்பதால் எனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் மனித உரிமை மீறலில் ஈடுபட்ட இசக்கி ராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனித உரிமை ஆணையத்தில் வில்லங்க செய்தி யூடியூப் சேனல் முரளி கிருஷ்ணா புகார் கொடுத்து இருந்தார்.
மக்களை திசை திருப்பி தற்போது நேர்மையான காவல் அதிகாரியாக திண்டுக்கல் மாவட்டம் பழனியில் வலம் வந்து கொண்டிருக்கும் காவல் உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா மனித உரிமை மீறலில் ஈடுபட்டது உண்மை என்றும் அதற்காக உதவி காவல் ஆய்வாளர் இசக்கி ராஜா சம்பளத்தில் 1,00,000 லட்சம் ரூபாய் பிடித்தம் செய்து
காவல் உதவி ஆய்வாளர் இசக்கி ராஜாவை பற்றி
செய்தி வெளியிட்ட வில்லங்க செய்தி ஆசிரியருக்கு வழங்க திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் திண்டுக்கல் காவல்துறை வங்கிக் கணக்கில் இருந்து ஒரு லட்ச ரூபாய்க்கான காசோலையை திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலிருந்து வில்லங்கச் செய்து முரளி கிருஷ்ணாவுக்கு வழங்கியுள்ளனர்.இந்த தீர்ப்பு எதிரொலியால் திண்டுக்கல் மாவட்டம் காவல் அதிகாரிகளிடம் ஒரு வித அச்சம் ஏற்பட்டுள்ளதாக தகவல்! இந்த உத்தரவை எதிர்த்து காவல் உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா இடைக்கால தடை பெற்றிருப்பதாக திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் அவர்கள் தெரிவித்திருந்தார். ஆனால் காசோலை வாங்கிய முரளி கிருஷ்ணா அவர்களிடம் கேட்டபோது நான் காசோலையை வங்கியில் செலுத்தி பணத்தை பெற்று விட்டேன் என்றும் இசக்கி ராஜாவின் வழக்கு நிலுவையில் இருப்பதாகவும் இன்னும் இடைக்கால தடை விதிக்கவில்லை என்றும் தெரிவித்தார்.
(13.04.2023) அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு “சமத்துவ நாள்” உறுதிமொழி மாண்புமிகு முதலமைச்சர் M. K. Stalin அவர்கள் தலைமையில் ஏற்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளர் V.பாஸ்கரன் அவர்கள் தலைமையில் “சமத்துவ நாள்” உறுதிமொழி” ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் காவல் அலுவலக அமைச்சு பணியாளர்கள் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர்.
“சமத்துவ நாள்” உறுதிமொழி எடுத்துக்கொண்ட காவலர்கள் அதேபோல் கண்ணியத்துடன் அனைத்து சமுதாய பொதுமக்களிடமும் பாகுபாடின்றி சமத்துவமாக நடந்து கொள்ள வேண்டும் என்பதுதான் அனைத்து சமூக ஆர்வலர்கள் கோரிக்கையாகும்.
எது எப்படியோ காவல்துறையில் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டு காவல்துறையில் பணி செய்யும் அதிகாரிகள் ஒரு சில நேரங்களில் தங்கள் ஜாதி பெயரைச் சொல்லி தொலைபேசியில் தேவையில்லாமல் பேசி மிரட்டி வருவதும் அவர்கள் மீது நீதிமன்றம் மற்றும் மனித உரிமை ஆணையம் நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்வதும் வழக்கமாக இருந்து கொண்டிருக்கிறது. இதிலிருந்து காவல்துறை அதிகாரிகள் மீண்டு வர வேண்டும் என்றால் மாதம் ஒருமுறை அவர்களுக்கு உயர் அதிகாரிகள் அழைத்து கவுன்சிலிங் நடத்தி ஆலோசனை வழங்கினால் மட்டுமே சிக்கலில் சிக்காமல் தவிர்க்க முடியும் என்பது தான் நிதர்சனம். ஆகவே காவல்துறையில் இருக்கும் அதிகாரிகள் கடமை கண்ணியம் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதுதான் அனைத்து சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.