நிமிடத்துக்கு 1000 லிட்டர் தயாரிக்கும் 1.86 கோடி மதிப்பில் வடிவமைக்கப்பட்ட புதிய ஆக்ஸிஜன் உற்பத்தி மையம்

விருதுநகர்; மாவட்டம்
அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில்
அமைக்கப்பட்டுள்ள ஆக்ஸிஜன் உற்பத்தி மையத்தினை பயன்பாட்டிற்காக திறந்து வைத்த அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர்.
அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள ஆக்ஸிஜன் உற்பத்தி மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.மேகநாதரெட்டி , வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் தகே.கே.எஸ்.எஸ்.ஆர்;.ராமச்சந்திரன் அவர்கள் மற்றும் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள்; ஆகியோர்கள் (05.09.2021) நோயாளிகளின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்கள்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் பேசுகையில்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான அரசு வெளிப்படை தன்மையோடு மக்கள் நலன் சார்ந்த அரசாக வளர்ச்சி பாதையில் செயல்பட்டு கொண்டு இருக்கிறது. முதலமைச்சர் அவர்கள் பொறுப்பேற்று 100 நாட்கள் கடந்த நிலையில், ஒரு சிறப்பான நல்லாட்சியை மக்களுக்கு வழங்கி கொண்டிருக்கிறார்கள்.
கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். முதலமைச்சர் அவர்களின் முயற்சியால், தீவிர நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் உயிர்காக்கும் பொருட்டு, உயிர் காக்க தேவையான ஆக்ஸிஜன் புதிய ஆக்ஸிஜன் உற்பத்தி மையங்கள் அமைத்து அதன் மூலம் தங்கு தடையின்றி பெறுவதற்கு தேவையான நடவடிக்கைகளையும் சிறப்பாக செய்து வருகிறார்கள்.
தற்போது கொரோனா மூன்றாம் அலையை எதிர்கொள்வதற்கு வசதியாக, ஆக்ஸிஜன் தேவைக்காக பிறரை சார்ந்து இல்லாமல், அரசு மருத்துவமனையிலே ஆக்ஸிஜன் தேவையை பூர்த்தி செய்து கொள்கிற சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்ற முதலமைச்சர் அவர்களின் எண்ணத்தை நிறைவேற்றுவதன் அடிப்படையில், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், 100 சதவிகிதம் ஆக்ஸிசன் கிடைப்பதை உறுதி செய்வதை இலக்காக கொண்டு விருதுநகர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனை, இராஜபாளையம் அரசு மருத்துவமனை, ராம்கோ சிமெண்;ட்ஸ் தொழிற்சாலை, சிவகாசி ஆணைக்குட்டத்தில் உள்ள ஸ்ரீபதி பேப்பல் மில்ஸ் ஆகிய இடங்களில் ஏற்கனவே ஆக்ஸிசன் உற்பத்தி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
அதனைதொடர்ந்து இன்று அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில், பிரதமரின் குடிமக்களுக்கான அவசர கால உதவி மற்றும் நிவாரண நிதியின்(PM Cares – Prime Minister’s Citizen Assistance and Relief in Emergency Situation Fund) கீழ் ரூ.1.86 கோடி மதிப்பில் வடிவமைக்கப்பட்ட புதிய ஆக்ஸிஜன் உற்பத்தி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த உற்பத்தி மையத்திற்கான கட்டுமான பணிகள் தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் நிமிடத்துக்கு 1000 லிட்டர் ஆக்சிஜன் தயாரிக்க முடியும். மேலும் பொதுப்பணித்துறை கட்டுமானம் மற்றும் எலக்ட்ரிக்கல் சார்பில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 175 படுக்கை வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இங்கு உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜன், மருத்துவமனை வளாகத்தில் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகள் வார்டுகளுக்கு குழாய் மூலம் விநியோகிக்கப்பட உள்ளது. இந்த ஆக்ஸிஜன் உற்பத்தி மையம் மூலம் பிராண வாயு கொரோனா நோயாளிகளுக்கு தங்கு தடையின்றி தொடர்ந்து ஆக்ஸிசன் கிடைப்பதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 150 முதல் 200 நோயாளிகள் பயன்பெறுவார்கள் என மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் தெரிவித்தனர்.
மூன்று குழுக்களுடன் 24 மணி நேரமும் கோவிட் -19 தடுப்பூசி மையம் செயல்பட்டு வருகிறது.
மேலும், அருப்புக்கோட்டை மற்றும் அருப்புக்கோட்டையை சுற்றியுள்ள பொதுமக்கள் பயன்பெறும் விதமாக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் 24 மணி நேரம் கோவிட் -19 தடுப்பூசி செலுத்தும் மையம் செயல்பட்டு வருகிறது. இந்த தடுப்பூசி மையம் 24 மணி நேரமும் செயல்படுவதால் அனைத்து பணிக்கு செல்லும் பணியாளர்கள் தங்களுக்கு உகந்த நேரத்தில் தடுப்பூசி செலுத்தி கொள்ள இந்த தடுப்பூசி மையம் மிகவும் உதவிகரமாக இருக்கும் எனவும், இந்த தடுப்பூசி மையத்தில், 8 மணி நேரம் பணியாற்றும் விதமாக ஒரு மருத்துவர், இரண்டு செவிலியர்கள் அடங்கிய மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டு, 24 மணி நேரமும் இந்த கோவிட் -19 தடுப்பூசி மையம் செயல்பட்டு வருவதாகவும், எனவே, பொதுமக்கள் அனைவரும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி, கோவிட் தடுப்பூசி செலுத்தாதவர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொண்டு பயன்பெறுமாறு அமைச்சர் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் அருப்புக்கோட்டை கோட்டாட்சியர்.கல்யாணகுமார், இணை இயக்குநர்(மருத்துவபணிகள்) மரு.மனோகரன், அருப்புக்கோட்டை வட்டாட்சியர் ரவிச்சந்திரன், அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் மரு.வெங்கடேஷ்வரன் மற்றும் மருத்துவர்கள் உட்பட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.