போலி ஆவணங்களை வைத்து நிலம் அபகரிப்பு செய்யும் கந்துவட்டி கும்பல்!விசாரணை என்ற பெயரில் கட்டப்பஞ்சாயத்து செய்யும் கொடைக்கானல் காவல்துறை!?விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பாரா திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்!?
ஜனவரி 2024 ஆம் ஆண்டு ஏடிஜிபி தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் நிலையத்திற்கும் சுற்றறிக்கை அனுப்பியது குறிப்பிடத்தக்கது. அந்த சுற்றறிக்கையில் பணம் கொடுக்கல் வாங்கல் மற்றும் சொத்து தகராறு, புகார்கள் மீது விசாரணைக்கு எஸ்.பி அல்லது காவல் ஆணையர்களிடம் அனுமதி பெற வேண்டும்.
உரிய ஒப்புதல் இன்றி விசாரணை மேற்கொண்டால் சட்ட விரோதமாக கருதப்படும், ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்படும்.எப்.ஐ.ஆர், சி.எஸ்.ஆர் மற்றும் நீதிமன்ற வழிகாட்டுதல் இல்லாமல் எந்த ஒரு மனுக்கள் மீதும் காவல்துறை விசாரணையும் நடத்தக் கூடாது. பணம் கொடுக்கல் வாங்கல் மற்றும் சொத்து தகராறு, புகார்கள் மீது விசாரணைக்கு தலையிடுவதை காவல் நிலையத்தில் வைத்து பேசுவதை தவிர்க்க வேண்டும்.
சிவில் பிரச்சினைகளில் தேவையில்லாமல் தலையிடக்கூடாது
சிவில் பிரச்சினைகளில் தேவையின்றி போலீசார் தலையிடக் கூடாது என்று போலீசாருக்கு ஏடிஜிபி அருண் உத்தரவிட்டுள்ளார். நிலம், வீடு, வாடகை உள்ளிட்ட சிவில் பிரச்னைகளில் காவல்துறையினர் தலையிடக்கூடாது என நீதிமன்றம் ஏற்கனவே பல முறை அறிவுறுத்தியுள்ளது.
எனினும், காவல்துறையினர் விசாரிப்பதில் மட்டுமே தீர்வு கிடைக்கும் என நம்பும் மக்கள் சிவில் பிரச்சினைகளுக்கும் போலீசாரை அணுகும் நிலை உள்ளது. இதுபோன்ற நேரத்தில் காவல்துறையினரும் இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள். சில நேரங்களில் சட்டத்தை மீறியும் இத்தகைய சிவில் பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்படுவதாகவும் புகார்கள் எழுகின்றன. சிவில் தொடர்பான பிரச்சனைகள் பேசி பார்த்தும் முடியாத புகார்களை, நீதிமன்றத்தில் தீர்த்து கொள்ளும்படி கூறி காவல்துறையினர் அனுப்பி வைக்கின்றனர். எனினும், சிவில் பிரச்சினைகள் போலீசாரிடம் செல்வது தொடர்பாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகின்றன. இந்த நிலையில், சிவில் பிரச்சினைகளில் அவசியம் இன்றி போலீசார் தலையிடக் கூடாது என்று போலீசாருக்கு ஏடிஜிபி அருண் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக ஏடிஜிபி அருண் கூறியதாவது:- எப்.ஐ.ஆர், சி.எஸ்.ஆர் மற்றும் நீதிமன்ற வழிகாட்டுதல் உள்ளிட்டவை இன்றி எந்த ஒரு மனுக்கள் மீதும் காவல்துறை விசாரணையும் நடத்தக் கூடாது.
பணத்தகராறு, சொத்து தகராறு, வழித்தட தகராறு போன்ற சிவில் விவகாரங்களில் தலையிடுவதை போலீசார் தவிர்க்க வேண்டும். சிவில் விவகாரங்களில் தலையிடுவது அவசியம் என கருதினால் மாவட்ட எஸ்.பி அல்லது காவல் ஆணையர்களிடம் அனுமதி பெற வேண்டும். உரிய ஒப்புதல் இன்றி விசாரணை மேற்கொண்டால் சட்ட விரோதமாக கருதப்படும், ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்படும்”என்று அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆனால் ஏடிஜிபி சுற்றறிக்கையை காற்றில் பறக்க விட்டு கொடைக்கானல் காவல்துறையினர்
கந்துவட்டி தொழில் செய்து வரும் கும்பல்கள்
நில அபகரிப்பு செய்யும் கும்பல்கள் கொடுக்கும் புகாரின் மீது விசாரணை என்ற பெயரில் கட்டப்பஞ்சாயத்து செய்து வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வில்பட்டி அருகே உள்ள நாயுடுபுரம் பெரும்பள்ளத்தில் பாண்டியன் (வயது 51 )தகப்பனார் பெயர் செல்லப்பன். பூர்வீக சொத்தான 52 சென்ட் நிலத்தில் (சர்வே நம்பர் 710/2 A )
குடிசை அமைத்து தங்கி குடும்பத்துடன் விவசாயம் செய்து வந்துள்ளார்.
பாண்டியனின் தந்தை ஒரு ஏக்கர் 72 சென்ட் நிலத்தை கந்துவட்டி தொழில் செய்து வரும் ஆர் எம் கணேசனுக்கு கிரயம் செய்து கொடுத்துள்ளார். ஆனால் கணேசன் அருகில் உள்ள இரண்டு ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தின் சேர்த்து விவசாயம் செய்து வருவதாகவும்
கடந்த 2015 ஆம் ஆண்டு திடீரென்று ஆர் எம் கணேசன் மற்றும் மூர்த்தி மற்றும் 20க்கும் மேற்பட்ட அடியாட்களுடன் வந்து பாண்டியன் குடியிருந்த வீட்டை உடைத்து அதில் இருந்த பொருள்களை எல்லாம் எடுத்துச் சென்று விட்டதாக பாண்டியன் கொடைக்கானல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்
அப்போது பாண்டியன் கொடுத்த புகாரின் ஆர் எம் கணேசனை அழைத்து விசாரணை செய்ததில் 2008 ஆம் ஆண்டு பாண்டியன் மற்றும் அவரது தம்பி கணேசன் இருவரும் சேர்ந்து 70 ஆயிரம் பணம் வாங்கிக் கொண்டு
52 செண்டு நிலத்தை
50 ரூபாய் பத்திரத்தில் எழுதிக் கொடுத்து விட்டு நிலத்தை ஒப்படைக்க வில்லை என்றும் காவல் நிலையத்தில் எழுதிக் கொடுத்ததாக கூறப்பட்ட ஐம்பது ரூபாய் ஸ்டாம்ப் பத்திர பேப்பரை காண்பித்துள்ளார். அப்போது கணேசனை அழைத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்ட போது நான் பணம் வாங்கவும் இல்லை 50 ரூபாய் ஸ்டாம்ப் பேப்பரில் எழுதிக் கொடுக்கவும் இல்லை என கூறியுள்ளார். அதற்கு ஸ்டாம்ப் பேப்பரில் கையெழுத்து போட்டது யார் என காவல்துறையினர் பாண்டியனிடம் கேட்டுள்ளனர். அதற்கு நான் ஆங்கிலத்தில்தான் கையெழுத்து போடுவேன் தமிழில் கையெழுத்து போட்டவே மாட்டேன் இந்த பத்திரத்தில் தமிழில் கையெழுத்து போடப்பட்டுள்ளதால் இது போலி ஆவணம் என காவல்துறையிடம் கூறியுள்ளார். ஆனால் அதையெல்லாம் அப்போது இருந்த கொடைக்கானல் துணை காவல் கண்காணிப்பாளர் காவல் ஆய்வாளர்கள் பாண்டியன் கூறியதை ஏற்க மறுத்துவிட்டு கந்து வட்டி கொடுத்து தொழில் செய்து வரும் ஆர் எம் கணேசனிடம் பல லட்ச ரூபாய் பெற்றுக் கொண்டு ஆதரவாக செயல்பட்டு வந்துள்ளனர்.
அதன் பின்னர் பாண்டியன் வருவாய்த்துறை மற்றும் நீதிமன்றம் வரை சென்று நீதிமன்ற உத்தரவுப்படி வருவாய்த் துறையினர் மீண்டும் பாண்டியன் அவர்கள் தந்தை பூர்வீக நிலத்தை சர்வே செய்து அதன் பின்பு சட்டரீதியாக கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு மீண்டும் நிலத்தில் குடிசை போட்டு குடும்பத்துடன் விவசாயம் செய்தது வந்துள்ளார். கடந்த 1/09/2024 அன்று கொடைக்கானல் காவல் ஆய்வாளர் பாஸ்கர் மற்றும் கந்துவட்டி தொழில் செய்து வரும் கணேசன் மற்றும் மூர்த்தி KL 53U9369 என்ற காரிலும் 20 அடியாட்கள் டாட்டா ஏசி குட்டியானையில் வந்து பாண்டியன் மற்றும் அவர் மனைவியை நிலத்திலிருந்து வெளியே செல்லுமாறு கூறியுள்ளனர். மட்டுமில்லாமல் கந்துவட்டி தொழில் செய்யும் கணேசன் மற்றும் மூர்த்தி இருவரும் சேர்ந்து
பாண்டியன் மற்றும் அவர் மனைவியை தகாத வார்த்தையில் கூறி கொலை மிரட்டல் விட்டு பாண்டியன் மற்றும் அவரது மனைவியை காவல்துறை உதவியுடன் நிலத்தை விட்டு வெளியேற்றி உள்ளனர்.
2/09/2024 ஆம் தேதி கொடைக்கானல் காவல் நிலையத்துக்கு சென்ற பாண்டியன் விவசாயம் செய்த நிலத்திற்கான ஆவணங்களை எடுத்துச் சென்று காண்பித்துள்ளார். ஆனால் கொடைக்கானல் காவல் ஆய்வாளர் பாஸ்கர் மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் அந்த ஆவணங்களை சரி பார்க்காமல் விசாரணை என்ற பெயரில்
கந்துவட்டி தொழில் செய்யும் ஆர் எம் கணேசனுக்கு ஆதரவாக
கட்டப்பஞ்சாயத்து செய்து பாண்டியன் மற்றும் அவரது மனைவியிடம் நிலத்திற்குள் நீங்கள் சொல்லக்கூடாது. மீறி நிலத்திற்குள் சென்றால் உங்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து விடுவோம் என கொடைக்கானல் காவல் ஆய்வாளர் மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர் கட்டப்பஞ்சாயத்து செய்து மிரட்டி உள்ளனர். ஏற்கனவே கந்துவட்டி தொழில் செய்து வரும் ஆர் எம் கணேசன் மீது நில அபகரிப்பு புகார் கொடைக்கானல் காவல் நிலையத்தில் இருப்பதாகவும் அந்த புகார் மீதும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் ஆகவே
கொடைக்கானல் காவல்துறையினர் நேர்மையான முறையில் விசாரணை மேற்கொள்ளாத பட்சத்தில் கொடைக்கானல் காவல்துறையினர் மீது நம்பிக்கை இல்லாமல் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் 16/09/2024 அன்று பாதிக்கப்பட்ட பாண்டியன் மற்றும் அவரது மனைவி புகார் மனு கொடுத்துள்ளனர்.
மனு ரசீது
(TN HOMEEXC DGLP/C OLLMGDP/16sep/24/1018305)
இந்த புகார் மனுவில்
போலி ஆவணம் மூலம் நிலத்தை அபகரிக்க முயற்சி செய்யும் கந்து வட்டி தொழில் செய்து வரும் ஆர் எம் கணேசன் மற்றும் அவருக்கு உடந்தையாக செயல்படும் ரவுடி மூர்த்தி ஆகிய இருவரும் கொலை மிரட்டல் விடுவதோடு என்னுடைய மனைவியை தகாத வார்த்தையில் பேசி வருவதாகவும் எங்கள் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் அதேபோல் எங்களுடைய பூர்வீக நிலத்தில் தொடர்ந்து விவசாயம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனுவில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
எது எப்படியோ தற்போது காவல் நிலையங்களில் சிவில் மற்றும் பைனான்ஸ் ஆகிய அவர் மீது விசாரணை செய்ய உயர் அதிகாரிகளிடம் அனுமதி வாங்க வேண்டும் என்ற சட்டத்தை மீறி கொடைக்கானல் காவல்துறையினர் செயல்பட்டு வருகின்றனர் என்ற புகாரின் மீது திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் தென் மண்டல ஐஜி அவர்கள் உண்மைத்தன்மை அறிய நேர்மையான காவல்துறை அதிகாரிகளை நியமித்து விசாரணை செய்து விசாரணையில் சிவில் மற்றும் பைனான்ஸ் கொடுக்கல் வாங்கல் புகாரின் மீது விசாரணை என்ற பெயரில் கட்டப்பஞ்சாயத்து செய்து வருவது தெரியவரும் பட்சத்தில் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் அனைத்து சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும். பொறுத்திருந்து பார்ப்போம் தென்மண்டல ஐஜி மற்றும் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் நடவடிக்கையை!