மாவட்டச் செய்திகள்

நீர்நிலைகளை  பட்டா போட்டு விற்பனை செய்து கோடிகளில் புரளும்
வேலூர் மாவட்டம் கே வி குப்பம் வருவாய் துறை தில்லாலங்கடி அதிகாரிகள் மீது
வேலூர் மாவட்ட ஆட்சியரின் நடவடிக்கை எப்போது!?

வேலூர் மாவட்டம் கே வி குப்பம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பல லட்சம் லஞ்சம் வாங்கிக் கொண்டு நீர் நிலைகளை பட்டா போட்டு கொடுத்த அதிர்ச்சி சம்பவம்!


2000 ஆம் ஆண்டுக்கு பிறகு நீர் நிலைப்பகுதிகளில் வழங்கிய பட்டாக்களை ரத்து செய்ய உத்தரவிட்டுள்ள சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை
மக்கள் நலன் என்ற பெயரில் நீர்நிலைகளை அழிக்க முடியாது.
நீர்நிலைகளின் முழு விவரங்கள் அடங்கிய இணையதளத்தை 6 மாதத்தில் கொண்டு வர வேண்டும் என்றும் 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  .
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நீர்நிலைகளின் முழு விவரங்களைக்கொண்ட இணையதளத்தை 6 மாதத்தில் தமிழக அரசு தொடங்க வேண்டும்.
இந்த இணையதளத்தில், ஒவ்வொரு நீர்நிலையையும் (குளங்கள், ஏரிகள், ஆறுகள், கண்மாய்கள் போன்றவை உள்பட) தொடர்புடைய சர்வே எண், பகுதி, கிராமம், தாலுகா, மாவட்டம் என அனைத்து விவரங்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும். அந்த இணையதளத்தில் உள்ள விவரங்கள் தவறானவை என்பது தெரிந்தால், தனிநபர் யார் வேண்டுமானாலும் இந்த கோர்ட்டின் கவனத்துக்கு கொண்டு வரலாம். அதன்பேரில் தவறான தரவுகளை பதிவேற்றம் செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.


ஆனால் நீதிமன்ற உத்தரவை காற்றில் பறக்க விட்ட வேலூர் மாவட்டம், கே வி குப்பம் வட்டாட்சியர்க்குட்பட்ட

பசுமத்தூர் கிராம நிர்வாக  அலுவலர் மணிவாசகம்
வேலூர் மாவட்டம் கே வி குப்பம்  கிராமத்திற்குட்பட்ட நீர்நிலை புறம்போக்கு குட்டை இடத்தை 24 பேருக்கு நத்தம் புறம்போக்காக மாற்றி பட்டா போட்டு தருவதாக கூறி 20 பேரிடம் 14 லட்சம் ரூபாய் லஞ்சமாக பெற்றுள்ளார்.


பசுமத்தூர் கிராம சர்வே எண் : (893 )(890) ஆகிய கொண்ட நீர்நிலை புறம்போக்கு குட்டையை கிராம நிர்வாக அலுவலகத்திலுள்ள வருவாய் துறை கணக்கு புத்தகத்தில் A- ரெஜிஸ்டரில் பல்வேறு தில்லாலங்கடி வேலை பார்த்ததும் இதற்கு உறுதுணையாக கீழ்ஆலத்தூர் கிராம நிர்வாக அலுவலக அதிகாரி லோகேஷ் , பணி ஓய்வு நில அளவையர் கலை உடந்தையாக செயல்பட்டதாகவும். இதனைத் தொடர்ந்து கே.வி. குப்பம் வட்டாட்சியர்,நில அளவையர், வருவாய் ஆய்வாளர் திருமலை , மண்டலத் துணை தாசில்தார்கள் இந்துமதி, மணிமேகலை ஆகியோர்கள் நேரில் சென்று 24 பெயருக்கு நத்தம் பட்டா வழங்கக்கூடிய இடத்தை நேரில் பார்க்காமலே பொதுமக்கள் பயன்படுத்தக்கூடிய நீர்நிலை புறம்போக்கு ஏரி குட்டை இடத்தை பட்டா போட்டுக் கொடுக்க விஏஓ மணிவாசகன்  காட்டிய ஆவணங்களில் கையப்பமிட்டு  லஞ்சம் பெற்றுக்கொண்டு

கே வி குப்பம் வட்டாட்சியர் சந்தோஷ்

கே வி குப்பம் தாசில்தார் சந்தோஷுக்கு பரிந்துரை செய்துள்ளார். இந்த நிலையில்தான் தாசில்தார் சந்தோஷ்  ஒரு குறிப்பிட்ட தொகையை கையூட்டு பெற்றுக் கொண்டு நீர்நிலை புறம்போக்கு ஏரி குட்டை என்றும் பாராமல் 24 பேருக்கு தலா இரண்டு சென்ட் இடத்தை நத்தம் பட்டாவாக வழங்க கையொப்பமிட்டு 

வேலூர் மாவட்ட ஆட்சியர்

வேலூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடந்த அரசு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரையே  பட்டா கொடுக்க வைத்துள்ளனர்.
இந்த விஷயம் எப்படியோ  வேலூர் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதிக்கு தெரிய வர இதுகுறித்து விசாரணை நடத்தியதில் பசுமத்தூர் கிராம நிர்வாக அலுவலர்  விஏஓ மணி வாசகன் முறைகேடு செய்துள்ளதை உறுதிப்படுத்திய பின்னர் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் நடத்தை விதிகள் மற்றும் தமிழ்நாடு சிவில் சர்வீசஸ் (ஒழுங்குமுறை … நடவடிக்கை உத்தரவு) விதி 17(இ)-ஐப் பயன்படுத்தி கடந்த 22.02.2025 சனிக்கிழமையன்று குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் சுபலட்சுமி மணிவாசகனை சஸ்பெண்ட் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இச்சம்பவம் வேலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீர் நிலை புறம்போக்கு குளம் குட்டை என்றும் பாராமல் பலருக்கும் நத்தம் பட்டா போட்டு வழங்கி வரும் கே.வி.குப்பம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் தாசில்தார் சந்தோஷுக்கும் , இவருக்கு கீழ் பணிபுரியும் மண்டல துணை தாசில்தார் , வருவாய் ஆய்வாளர் ஆகிய நான்கு பேரையும் உடனடியாக பணி நீக்கம் செய்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
அது மட்டுமில்லாமல்
கே.வி.குப்பம் வட்டாட்சியர் அலுவலகத்திற்குட்பட்ட பட்டா மாறுதல் செய்ய, பட்டா வழங்க, வாரிசு சான்றிதழ் , ஒருங்கிணைந்த சான்றிதழ், புதிய மனை பிரிவுகளுக்கு என்ஓசி வழங்க, புறம்போக்கு குடியிருப்புப் பகுதிகளில் மின் இணைப்புக்கு சான்றிதழ் வழங்க என சான்றிதழுக்கு ஏற்றவாறு ஒவ்வொரு சான்றிதழும் புரோக்கர்கள் அல்லது கிராம நிர்வாக அதிகாரி முதல் வருவாய் ஆய்வாளர்கள், சர்வேர்கள் வரை தாசில்தார் சந்தோஷுக்கு லஞ்சம் வாங்கி வருவதாக கூறப்படுகிறது.

இங்கு தாசில்தாராக பணிபுரிந்து வருபவர் வேலூர் சத்துவாச்சாரி பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர் 2012 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையத்தின் மூலம் குரூப் 2 வில் தேர்ச்சி பெற்று 2013 ஆம் ஆண்டில் வேலூர் மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணிருக்குச் சேர்ந்தார் பின்னர். காட்பாடி வட்டாட்சியர் அலுவலகத்திற்குட்பட்ட தாராபடவேடு பிற்கா வருவாய் அலுவலராக பணிக்கு சேர்ந்த முதலே லஞ்சம் போன்ற விஷயங்களில் கைத் தேர்ந்தவராம் சந்தோஷ் என்கின்றனர் காட்பாடியிலுள்ள இடைத்தரவர்கள். லஞ்சம் கொடுத்தால் எப்படிப்பட்ட வருவாய்த் துறையின் வேலையாக இருந்தாலும் முடித்துக் கொடுப்பாராம் சந்தோஷ் என்று கூறிவரும் புரோக்கர் சரவணன் என்பவர் காட்பாடி பகுதியில் புலம்பி வருவதை பலர் காதால் கேட்டு திட்டி வருகின்றனர். அதுமட்டுமின்றி வேலூர் மாவட்ட ஆட்சியாளராக மூன்று வருடம் பணிபுரிந்து பதவி உயர்வு பெற்று சென்ற குமரவேல் பாண்டியன், ஐஏஎஸ்., அதிகாரியிடம் PC -யாக பணியாற்றியதும் அதன் தொடர்ச்சியாகவே இவர் யாரையும் மதிப்பதில்லை என்றும் பலரது மத்தியில் பரவலாக பேசப்படுகிறது.
இவர் இதன் பின் 2023 ஆம் ஆண்டில் இதே கே.வி.குப்பம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மண்டல துணை தாசில்தாராகவும் , குடியாத்தம் வட்டத்தில் சமூக பாதுகாப்பு திட்டத் தாசில்தாராகவும் , அதன் பிறகு மேஜிஸ்திரேட் ட்ரைனிங் முடித்துவிட்டு கே.வி. குப்பம் ரெகுலர் தாசில்தாராக பதவி உயர்வு பெற்று வந்து 6 மாதங்கள் கூட நிறைவடையவில்லை அதற்குள் நீர்நிலை குட்டை ஆகிய இடங்களை நத்தம் புறம்போக்கு என வகை மாற்றம் செய்து பட்டா போட்டு விற்பனை செய்து உள்ளார்.
அதுமட்டுமின்றி தவறு இழைத்த விஏஓ மணிவாசகனை கடந்த சனிக்கிழமையன்று சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டதோடு இந்த அனைத்து தவறிலும் தன்னை பலிக்கடாவாக ஆக்கிய தன்னைக் குற்றவாளி என்று உண்மையை ஒப்புக் கொண்டால் மூன்று மாதத்தில் மீண்டும் விஏஓ பதவி வழங்குவதாக தாசில்தார் சந்தோஷ் , விஏஓ அனீஸ் தலைமையில் வருவாய் துறை சங்கத்தினர் வற்புறுத்தி வருவதாகவும் ஒரு புறம் தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமில்லாமல் இந்த ஊழல் முறைகேடுக்கு மூளையாக  கீழ ஆலத்தூர் கிராம நிர்வாக அலுவலர் லோகேஷ் செயல்பட்டதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
எது எப்படியோ நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டிய வருவாய்த்துறை அதிகாரிகள்   செய்த ஊழல் முறைகேடு வெளிச்சத்திற்கு வந்ததால் லஞ்சம் கொடுத்து வாங்கிய பட்டாக்கள் ரத்து செய்தது மட்டுமல்லாமல் லட்சக்கணக்கில் வஞ்சமாக கொடுத்த பணமும் ஸ்வாகா செய்துள்ளனர்கே.வி.குப்பம் வட்ட வருவாய்த் துறையில் உள்ளவர்கள்.


நீர்நிலை புறம்போக்கு குட்டை இடத்தை விற்பனை செய்து நத்தம் புறம்போக்கு என பட்டா வழங்குவதற்கு உறுதுணையாக இருந்த தாசில்தார் சந்தோஷ் மீது வேலூர் மாவட்ட ஆட்சியர் துறை ரீதியாக எப்போது நடவடிக்கை எடுக்கப் போகிறார் என்பதை  பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் .

Related Articles

Back to top button