நெடுஞ்சாலைத் துறை

நூற்றுக்கு மேற்பட்ட வீடுகள் இடித்து தரைமட்டம்!இரவு  தங்குவதற்கு இடம் இல்லாமல்  உணவு இல்லாமல்  100 மேற்பட்டோர்  குழந்தைகளுடன் சாலையின் ஓரம் ஆங்காங்கே படுத்து உறங்கிய சோகம் ! கண்டுகொள்ளாத மதுரை மாவட்ட ஆட்சி நிர்வாகம்!

நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் இடித்து தரைமட்டம் ஆக்கியதால் இரவு உணவில்லாமல் தங்குவதற்கு இடம் இல்லாமல்  100 மேற்பட்டோர்  குழந்தைகளுடன் ஆங்காங்கே படுத்து உறங்கிய சோகம் சம்பவம்! கண்டுகொள்ளாத மதுரை மாவட்ட ஆட்சி நிர்வாகம்!

மதுரை மாவட்டம்
சோழவந்தான் அருகே முள்ளிப் பள்ளம் கிராமத்தில் ஐயப்பன் கோவில் முதல் விநாயகபுரம் காலனி வரை சாலையின் இருபுறமும் சுமார் 800  மீட்டர் தூரத்திற்கு ஆக்கிரமிப்பில் வீடு கட்டி உள்ளதாகவும் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி தனிநபர் ஒருவர் நீதிமன்ற வழக்கு தொடர்ந்திருந்த நிலையில்  ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதன்பேரில்  26/07/2024 வெள்ளிக்கிழமை  சமய நல்லூர் காவல் துணை கண்காணிப்பாளர் ஆனந்தராஜ் சோழவந்தான் காவல் ஆய்வாளர் செல்லப்பாண்டி ஆகியோர் தலைமையில் சுமார் 300 காவல்துறையினர் தீயணைப்புத் துறை வீரர்கள் மற்றும் வாடிப்பட்டி வட்டாட்சியர் ராமச்சந்திரன் உட்பட வருவாய்த்துறையினர் நெடுஞ்சாலைத் துறையினர் பொதுப்பணித்துறையினர் மின்சாரத் துறையினர் போக்குவரத்து துறையினர் உட்பட சுமார் 500க்கும் மேற்பட்டவர்கள்

4 ஜேசிபி இயந்திரங்கள்,6 டிராக்டர் ஆகியவை மூலம் ஆக்கிரமிப்பு வீடுகளை இடித்து அகற்றினர். இதனால் சுமார் 50 ஆண்டுகள் குடியிருந்து வந்த மக்கள் தங்களது வீடுகளை இழந்து வீதியில் தவித்தது காண்போரை கண்கலங்க செய்தது . 

சாலையை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட  வீடுகளில் குடியிருந்தவர்கள்  இரவு தங்குவதற்கான இடமும், உணவு வசதியும் மதுரை மாவட்ட ஆட்சி நிர்வாக செய்து தரப்படவில்லை என இது குறித்து வருவாய் துறை மற்றும் காவல்துறை  அதிகாரிகளை அணுகியும் கூட நள்ளிரவு 12 மணி வரை உணவு வழங்கவில்லை எனவும் . இரவு தங்குவதற்கு பாதுகாப்பான இடத்தை ஏற்பாடு செய்து தரவில்லை எனவும்


தங்கும் இடம் உணவு பற்றி ஒலிபெருக்கி மூலம் சம்பந்தப்பட்ட அதிகாரிகள்  வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்களுக்கு  அறிவிக்கவில்லை எனவும் சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டை வைத்துள்ளனர்.
மேலும்,
பதினைந்து நாட்களுக்குள் வீடுகள் இடிக்கப்படுவதற்கு எதிராக 15/ 07/ 24 அன்று உயர்நீதிமன்ற உத்தரவு இருந்த போதும்  நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட வருவாய்த்துறை நிர்வாகம் அதனைக் கண்டுகொள்ளவில்லை எனவும் குற்றம் சாட்டுகின்றனர்.
வருவாய் துறை ஆவணங்களில் குளறுபடிகள் செய்யப்பட்டுள்ளதை குறித்தும், பட்டா உள்ளிட்ட ஆவணங்கள் உள்ள முறையான குடியிருப்புகள் இடிக்கப்படுவது குறித்தும் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் வாடிப்பட்டி தாசில்தார் முதல் மதுரை மாவட்ட ஆட்சியர் வரை கடந்த 01/07/24 அன்று முதல் பல்வேறு நேரடி கோரிக்கை மனுக்களை கொடுத்து முறையீடுகள் செய்யப்பட்டிருந்த போதும், பட்டா நிலத்தில் உள்ள வீடுகள் கூட இடித்துத் தரை மட்டமாக்கப்பட்டுள்ளன என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
தமிழக அரசின் இந்த நடவடிக்கை தனிப்பட்ட நபர் ஒருவர் பெற்ற உயர்நீதிமன்ற உத்தரவு என்ற பெயரில் நடைபெற்றுள்ளது என்றும்
24 கி.மீ நீளம் உள்ள சாலையில் ஒரு குறிப்பிட்ட கிராமத்தில் மட்டும் 800 மீட்டர் நீளத்தில் உள்ள சாலையில் ஆக்கிரமிப்பு அகற்றல் நடந்துள்ளது என்பதும், சாலை விரிவாக்கத் திட்டம் எதுவும் இல்லை என்பதும், வருவாய் துறை ஆவணங்களில் செய்யப்பட்டுள்ள குளறுபடிகளும் உள்நோக்கத்துடன் இந்த வீடுகளை இடித்து அகற்றி  உள்ளனர்.
உயர்நீதிமன்ற உத்தரவு அவமதிப்பு வழக்குத் தொடரவும்,இடிக்கப்பட்ட வீடுகளுக்கு முழு இழப்பீடு மற்றும் மறுவாழ்வு உதவித்தொகை வழங்கவும் வருவாய் துறை ஆவணங்களின் குளறுபடிகளை முற்றிலுமாகத் திருத்தவும்
குற்றம் இழைத்த தனி நபர்கள், அலுவலர்களின் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும் நிவாரண உதவிக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த போதும் கூட இதுவரை நிவாரண உதவிகள் செய்யப்படாததைக் கண்டித்தும்
மக்களின் நிலத்தை மீட்டெடுக்கவும் CPI ML கட்சி அயராது பாடுபடும் என சிபிஐ எம் எல் மாவட்ட செயலாளர் மதிவாணன் பத்திரிகை செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Back to top button