நோயாளிக்கு சிகிச்சை அளிக்க மறுப்பு தெரிவித்த நாகர்கோவில்அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள்! நடவடிக்கை எடுக்காத கல்லூரி முதல்வர்!
கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிக்கு சிகிச்சை அளிக்க மறுப்பு தெரிவித்த மருத்துவமனை நிர்வாகம்!
கன்னியாகுமரி மாவட்டம் உழிஞ்சன் விளாகம் ,கீழக்கரை மண்டைக்காடு பகுதியை சேர்ந்தவர் பகவதியப்பன் கடந்த ஒரு வருடமாக முதுகுத்தண்டு பிரச்சனை காரணமாக இடது காலில் அதிக வலி ஏற்பட்டு நடக்க இயலாத நிலையில் தனது நண்பரின் வழிகாட்டுதலின் பெயரில்
கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சில மாதங்களுக்கு முன்பு சிகிச்சை எடுத்து வந்துள்ளார். அப்போது தனக்கு திருப்தியான முறையில் மருத்துவர்கள் சிகிச்சை அளித்ததாகவும் பூரண சுகம் பெற்று வீட்டிற்கு திரும்பியதாகவும் மீண்டும் 10.05. 2024 அன்று மீண்டும் காலில் வலி ஏற்பட்டு சிகிச்சைக்காக உள் நோயாளியாக சேர்ந்ததாகவும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் போது கடந்த 09. 06 2024 தனக்கு அரசு பணியாளர் தேர்வுக்கு எழுத வேண்டும் எனக் கூறி மருத்துவமனையில் இருந்த பயிற்சி மருத்துவரிடம் கூறியதற்கு பயிற்சி மருத்துவர் நீங்கள் எழுதிவிட்டு மீண்டும் மருத்துவமனைக்கு வாருங்கள் நான் தலைமை மருத்துவரிடம் கூறுகிறேன் என்று வாழ்த்துக் கூறி அனுப்பி வைத்துள்ளார்.
பகவதியப்பன் தேர்வு எழுதிவிட்டு மீண்டும் மதியம் ஒரு மணிக்கு மருத்துவமனைக்கு வந்து கசாயம் குடித்துவிட்டு தனது அறையில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் போது இரவு எட்டு மணிக்கு பணிக்கு வந்த செவிலியர்கள் உங்களுக்கு இங்கு தங்குவதற்கு அனுமதி இல்லை நீங்கள் வெளியே செல்லலாம் எனக் கூறியுள்ளதால் அதிர்ச்சி அடைந்த பகவதியப்பன் அங்கிருந்த பணியாளர்களிடம் நிலைமையை எடுத்துக் கூறியுள்ளார். தனக்கு இன்றும் இடது காலில் அதிக வலி இருப்பதாகவும் தன்னால் வெளியே செல்ல முடியாது எனக்கூறி வந்துள்ளார் . ஆனால் மருத்துவமனை ஊழியர்கள் எனக்கூறி பல பேர் தன்னையும் தன்னுடைய பொருள்களையும் வெளியே எடுத்து வீசி மருத்துவமனையை விட்டு வெளியே செல்லும்படி அராஜகத்தில் ஈடுபட்டதாகவும் . இதற்கிடையே அங்கு இருந்தவர் கைப்பேசியில் உறைவிட மருத்துவரை தொடர்பு கொண்டு பேசினர். அதற்க்கு அவனை அங்கிருந்து விரைவில் வெளியேற்றுங்கள் என்று கைப்பேசியில் கூறியதாகவும், பெண் செவிலியரின் தொலைபேசியில் பகவதியப்பனிடம் மருத்துவமனையை விட்டு உடனே வெளியே செல்ல வேண்டும் இல்லையெனில் காவல் துறையில் உன் மேல் புகார் அளிப்பேன் இனிமேல் இந்த மருத்துவமனைக்கு நீ வரக்கூடாது என கடினமான சொற்களால் அவரை உறைவிட மருத்துவர் விமர்சித்துள்ளாதாகவும் இதனால் மனமுடைந்த பகவதியப்பன் தற்கொலை செய்யும் என்னத்தில் மருத்துவமனையின் மொட்டை மாடி பகுதிக்கு சென்று தற்கொலை செய்து கொள்ளலாம் என என்னியதாகவும் ஆனால் இந்த மருத்துவமனையின் அவல நிலையை தமிழக அரசாங்கத்திற்க்கு தெரியப்படுத்த வேண்டும். என்னை போல் எந்த நோயாளிக்கும் இது போன்ற சங்கடமான சூழ்நிலை உருவாக கூடாது என்று எண்ணி தனது தற்கொலை எண்ணத்தை மாற்றிக் கொண்டதாகவும், தனக்கு முறையாக சிகிச்சை அளிக்காமல் மன உளைச்சலை ஏற்படுத்தி மருத்துவமனையை விட்டு அப்புறப்படுத்துவதற்காக தொலைபேசி வாயிலாக அழுத்தம் கொடுத்த உயர் அதிகாரியும் அதன் மூலம் என்னை தற்கொலை செய்யும் எண்ணத்தை தூண்டிய மருத்துவமனையில் உயர் அதிகாரியாகிய உறைவிட மருத்துவர் அன்று பணியில் இருந்த மருத்துவர், பயிற்சி மருத்துவர்கள், மற்றும் செவிலியர், ஆகியோர் மீது விசாரணை செய்து சட்டப்படியாகவும் துறை ரீதியாகவும் நடவடிக்கை எடுக்க கேட்டு கல்லூரி முதல்வரிடம் நேற்று பகவதியப்பன் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளது.