Uncategorized


பச்சிளம் குழந்தைகளுக்கு நியுமோகோக்கல் தடுப்பூசி (23.07.2021) முதல் தொடக்கம்

உலகளாவிய நோய்த்தடுப்பு திட்டத்தின்கீழ் நியுமோகோக்கல் கான்ஜீகேட் தடுப்பூசியை (பி.சி.வி) மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. ஊட்டச்சத்து பற்றாக்குறை, குறைமாத பிரசவம் உள்பட பல்வேறு காரணங்களால் சராசரி எடையைவிட குறைந்த எடையில் குழந்தைகள் பிறக்கின்றன.

இதில் 1.5 கிலோ, அதற்கும் குறைவான எடையில் பிறக்கும் குழந்தைகளுக்கு நுரையீரல் உள்பட பல்வேறு உடல் உறுப்புகள் போதிய வளர்ச்சி இல்லாமல் இருக்கும். இதனால், அக்குழந்தைகளுக்கு சுவாசிப்பதில் சிக்கல் ஏற்பட்டு நோய் தொற்றுகள் ஏற்படும். நோய் எதிர்ப்பு சக்தியும் போதிய அளவுக்கு இருக்காது.


இதில் நுரையீரலில் நோய் தொற்று ஏற்படாமல் தடுக்க நியுமோகோக்கல் தடுப்பூசி (பி.சி.வி) போடப்படுகிறது. குழந்தை பிறந்ததில் இருந்து முறையே 11 வதுமாதம், 31 வதுமாதம் மற்றும் 9 வது மாதம் என மூன்று முறை இந்த தடுப்பூசி குழந்தைகளுக்கு போடப்பட வேண்டும்.


தேசிய மருத்துவ ஆணையம் சார்பில் மாவட்ட சுகாதாரத் துறைக்கு தடுப்பூசி வழங்கப்படுகிறது.

அதன் மூலம் நிமோனியா மற்றும் மூளைக்காய்ச்சல் காரணமாக ஏற்படும் இறப்புகளைக் குறைக்க இது உதவும்.
எடை குறைவாக பிறந்த குழந்தைகளுக்கு வழங்க நியுமோகோக்கல் தடுப்பூசி மருந்துகள் (பி.சி.வி)  விருதுநகர் மாவட்டத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.  

இந்த தடுப்பூசி குழந்தைகளுக்கு இன்று முதல் விருதுநகர் மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் இலவசமாக போடப்படும். இன்று (23.07.2021) விருதுநகர் மாவட்டம் பாலவநத்தம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நியுமோகோக்கல் தடுப்பூசி (பி.சி.வி) போடும் பணியை மாவட்ட ஆட்சியர்.ஜெ.மேகநாதரெட்டி அவர்கள தொடங்கி வைத்தார்


விருதுநகர் மாவட்டத்திலுள்ள அனைத்து பிரசவித்த தாய்மார்கள் பிறந்த குழந்தைகளுக்கு இந்த வாய்ப்பை பயன்படுத்தி நியுமோகோக்கல் தடுப்பூசி போட்டுக் குழந்தைகளை நோய்த்தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சியர்  ஜெ.மேகநாதரெட்டி அவர்கள கேட்டுக்கொள்கிறார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button