பட்டு வளர்ச்சித் துறை இயக்குனரின் அலட்சியப் போக்கால் நோயால் இறந்து போன பல கோடி ரூபாய் மதிப்புள்ள பட்டுப் புழுக்களை விவசாயிகள் எரிக்கும் அதிர்ச்சி வீடியோ!இயக்குனர் மீது நடவடிக்கை எடுப்பாரா தமிழக முதல்வர்!

சேலம் பட்டு வளர்ச்சித் துறை இயக்குனரின் அலட்சியப் போக்கால் நோயால் இறந்து போன பல கோடி ரூபாய் மதிப்புள்ள பட்டுப் புழுக்களை விவசாயிகள் எரித்து வரும் அதிர்ச்சி வீடியோ
விவசாயிகள் கூறும்போது
தமிழ்நாட்டில் 25 இளம் பட்டு புழு வளர்ப்பு மையங்கள் செயல்படுகின்றன.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் சுமார் 25,500 பட்டுப்புழு வளர்ப்பு விவசாயிகள் உள்ளனர்.

சேலம் மண்டல பட்டு வளர்ப்பு ஆராய்ச்சி நிலையம்
மத்திய அரசின் கீழ் செயல்படும் பட்டுப் புழு வளர்ப்பு மையம், மத்திய பட்டு வாரியம் (Central Silk Board) ஆகும். மாநில அரசுகளின் கீழ், பட்டு வளர்ச்சித் துறை (Department of Sericulture) பட்டுப் புழு வளர்ப்பு மையங்களை இயக்குகிறது.
பட்டுப் புழு வளர்ப்புத் துறையை மாநில அளவில் நிர்வகித்து,

பட்டுப் புழு வளர்ப்பில் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களுக்கு தேவையான உதவிகளை வழங்குகிறது. பட்டு தொழில் வளர்ச்சிக்காக நிதிநிலை அறிக்கையில் ரூ. 10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பட்டு வளர்ப்பு தொழிலில் ஈடுபடும் விவசாயிகளுக்கு குறுகிய காலத்தில் நல்ல வருமானம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில்
தமிழகத்தில் பட்டு வளர்ப்பு தொழில் பரவலாக மேற்கொள்ள பட்ட மாவட்டங்களில்
திண்டுக்கல் மாவட்டம் பழனியை சுற்றிலும் ஏராளமான விவசாயிகள் பட்டுப்புழு வளர்ப்பில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக பழனி, ஒட்டன்சத்திரம், சத்திரப்பட்டி, கணக்கன்பட்டி, தொப்பம்பட்டி உள்ளிட்ட 80க்கும் மேற்பட்ட கிராமங்களில்

பட்டுப்புழு வளர்ப்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். கோவை, உடுமலை திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மத்திய மாநில அரசுகளுக்கு சொந்தமான இளம் புழு வளர்ப்பு மையத்தில் இருந்து, விஞ்ஞானிகளால் முட்டையின் தரம் ஆய்வு செய்யப்பட்டு, புழுக்கள் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு புழுக்களாக வழங்கப்படுகிறது.

100 எண்ணிக்கை கொண்ட புழுக்களை விவசாயிகளுக்கு நாலாயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் பழனி பகுதியில் பட்டுப் புழு வளர்ப்பில் ஈடுபட்ட விவசாயிகளுக்கு இளம் புழு வளர்ப்பு மையத்தால் வழங்கப்பட்ட பட்ட புழுக்கள் அனைத்தும் நோய்வாய்ப்பட்டு உயிரிழந்த நிலையில் பட்டுப் புழுக்களை விவசாயிகள் தீயிட்டு எரித்து வருவதாகவும் இதனால் பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டு விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து

விவசாயிகள் கூறும்போது, மத்திய மாநில அரசுகளின் கீழ் செயல்படும் இளம் புழு வளர்ப்பு மையத்தில் இருந்து கொடுக்கப்பட்ட பட்டுப்புழுக்கள் தரமற்றதாக உள்ளது என்றும், முட்டையை ஆய்வு செய்து கொடுக்கவேண்டிய நிலையில் ஆய்வு செய்தார்களா என்பதே தெரியவில்லை என்றும், இளம்பலூர் வளர்ப்பில் ஈடுபட்ட 15நாட்களுக்குள் பட்டுப்புழுக்கள் அனைத்தும் கூடு கட்டவேண்டும். ஆனால் தற்போது 13நாட்கள் ஆகியும் புழுக்கள் இலையை எடுத்துக்கொள்ளவும் இல்லை, கூடு கட்டவும் இல்லை. மேலும் புழுக்கள் அனைத்தும் உயிரிழந்து கீழே விழுவதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர். இதனால் ஒவ்வொரு விவசாயிக்கு தலா 1 லட்சம் ரூபாய் முதல் ஒன்றரை லட்சம் வரை இழப்பீடு ஏற்பட்டு உள்ளதாக தெரிவித்தனர். பட்டுபுழுக்களுக்கான காப்பீடு கடந்த ஆண்டு 9 வது மாதமே முடிந்து விட்ட நிலையில் இதுவரை புதுப்பிக்க வில்லை என்றும், முறையாக காப்பீடு புதுப்பிக்கப்பட்டு இருந்தால் இது போன்ற சூழ்நிலையில் விவசாயிகள் பாதிக்கப்பட்டிருக்க வாய்ப்பு இல்லை என்றும், அதிகாரிகளின் அலட்சியப் போக்கே இதற்கு காரணம் என்றும் தெரிவிக்கின்றனர். பட்டு புழுக்கள் இறப்பு குறித்து அதிகாரிகளிடம் தெரிவித்த போது மீண்டும் தரமான முட்டைகள் இலவசமாக வழங்குவதாக தெரிவித்துள்ளதாக விவசாயிகள் கூறியுள்ளனர். தரமற்ற பட்டு புழுமுட்டையால் பட்டு புழு பல மாவட்ட விவசாயிகளுக்கு இதேபோன்று நிலை ஏற்பட்டுள்ளதால் தமிழக முழுவதும் பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு இருக்கலாம் எனவும் விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்துள்ளன.
தற்போதைய நிலையில தமிழகத்தில் ஒரு வருடத்திற்கு 3 ஆயிரம் மெட்ரிக் டன் கச்சாபட்டு தேவை படுகிறது. ஆனால் 1200 மெட்ரிக் டன் கச்சா பட்டு மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. 1800 மெட்ரிக் டன் கச்சா பட்டு வெளியில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டியது உள்ளது. இந்திய அளவில் கச்சா பட்டு உற்பத்தியில் தமிழகம் 4–வது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடப்பட்டது.
