பணியிடம் மாற்றம் செய்யப்பட்ட தேனி மாவட்ட திட்ட இயக்குனர் தேனி மாவட்டத்தில் பல கோடி ரூபாய் கமிஷன் தொகையை வசூல் செய்து வருவதாக அதிர்ச்சி தகவல்!

விருதுநகர் மாவட்டத்திற்கு பணியிடம் மாற்றம் செய்யப்பட்ட தேனி மாவட்ட திட்ட இயக்குனர் தேனி மாவட்டத்தில் வசூல் வேட்டை செய்து வருவதாக அதிர்ச்சி தகவல்!

தேனி மாவட்ட நிழல் ஆட்சியாளராக சில வருடங்களாக வலம் வந்த திட்ட இயக்குனர் தண்டபாணி ஒரு சில நாட்களுக்கு முன்பு விருதுநகர் மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்ற தகவல் வந்தது.
நிழல் ஆட்சியாளராக இருந்த திட்ட இயக்குனர் தண்டபாணி மீது கடந்த ஆட்சியாளர் முரளிதரன் இருக்கும்போதே பல குற்றச்சாட்டுகள் புகார்கள் வைக்கப்பட்டது. ஆனால் கடந்த மாவட்ட தேனி மாவட்ட ஆட்சியாளராக இருந்த முரளிதரன் திட்ட இயக்குனர் தண்டபாணி இடம் ஏதோ ஒரு விஷயத்தில் சிக்கி தண்டபாணி கட்டுப்பாட்டுக்குள் இருந்து வந்தார் என்பதை யாராலும் மறுக்க முடியாது. அப்படி திட்ட இயக்குனர் தண்டபாணி நிழல் தேனி மாவட்டத்தின் நிழல் ஆட்சியாளராகவே வலம் வந்தார் அவர் நீட்டும் எந்த ஆவணங்களாக இருந்தாலும் சரி அதை என்ன என்று பார்க்காமல் கையெழுத்து போட்டு கொடுத்து வந்தார் கடந்த ஆட்சியாளர் முரளிதரன் என்ற குற்றச்சாட்டும் இருந்தது. கடந்த தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரன் இடம் இருந்த விக்னேஷ் பயன்படுத்தி திட்ட இயக்குனர் தண்டபாணி மாவட்ட ஆட்சியர் முரளிதரனை தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு தேனி மாவட்டத்தில் அதிகார துஷ்பிரயோகம் செய்து வந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி தேனி மாவட்ட ஆட்சியாளராக இருந்த முரளிதரன் மாற்றப்பட்டார். பிப்ரவரி மாதம் புதிய தேனி மாவட்ட ஆட்சியாளராக சஜிவனா பொறுப்பேற்றுக் கொண்டார். பொறுப்பேற்றுக்கொண்ட முதல் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொல்ல தாமதமாக வந்தார் ஆனால் அதற்கு முன்பே நிழல் ஆட்சியாளராக இருந்த திட்ட இயக்குனர் தண்டபாணி மக்கள் குறைதீர்க்கும் கூட்டரங்கில் மாவட்ட மாவட்ட ஆட்சியாளருக்கு போடப்பட்ட இருக்கையில் அமர்ந்து கொண்டிருந்தது விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்டது. ஏனென்றால் இதற்கு முன்பு இருந்த மாவட்ட ஆட்சியாளர் முரளிதரன் இருக்கையிலேயே திட்ட இயக்குனர் தண்டபாணி அமர்ந்து கொண்டு வரும் அதிகாரிகளிடம் பேசிக் கொண்டிருப்பார் என்ற குற்றச்சாட்டும் அப்போது வைக்கப்பட்டது. சில நாட்களுக்கு முன்பு திட்ட இயக்குனர் தண்டபாணி ஒரு சில பஞ்சாயத்து தலைவர்களை தன் கைக்குள் வைத்துக் கொண்டு கடந்த அதிமுக ஆட்சியில் அரசுத் திட்டங்களை ஒப்பந்தம் எடுத்த ஒப்பந்ததாரர்களிடம் திமுக ஆட்சி வந்த பின்பும் அவர்களுடன் உறவு வைத்துக் கொண்டு அவர்களுக்கு ஒப்பந்தம் கொடுத்து குறிப்பிட்ட தொகையை சன்மானமாக பெற்றுக்கொண்டு வலம் வந்துள்ளதாக தகவல் வந்ததாக பத்திரிகைகளில் செய்தி வந்தது. ஆனால் தற்போது பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள திட்ட இயக்குனர் தண்டபாணி கடந்த இரண்டு நாட்களாக தேனி மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தலைவர்கள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் நகராட்சி பேரூராட்சி தலைவர்கள் அனைவரிடமும் இதுவரை அரசு நலத்திட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருப்பதற்கு தனக்கு சேர வேண்டிய கமிசன் தொகையை கொடுத்தால் மட்டுமே கையெழுத்து போடுவேன் என்று மிரட்டி இரண்டு நாட்களாக வசூல் வேட்டையில் இருப்பதாக அதிர்ச்சி தகவல் வந்துள்ளது. இது சம்பந்தமாக ஒரு சிலர் விஜிலன்ஸ் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்ததாகவும் விஜிலன்ஸ் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்திற்கு செல்லும் போது தகவல் தெரிந்த திட்ட இயக்குனர் தண்டபாணி அங்கிருந்து வெளியேறிவிட்டார் என்றும் தகவல்கள் வந்தது. இது சம்பந்தமாக தற்போது உள்ள தேனி மாவட்ட ஆட்சியாளர் அவர்களிடம் திட்ட இயக்குனர் பணியிட மாற்றம் செய்த பின்பு தேனி மாவட்டத்தில் உள்ள ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊராட்சி ஒன்றிய தலைவர்களை சந்தித்து பணம் கேட்பதாக தகவல் வந்துள்ளது ஆகவே தங்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுள்ளனர். அதற்கு தேனி மாவட்ட ஆட்சியாளர் இது சம்பந்தமாக நான் விசாரணை செய்கிறேன் என்றும் கூறியிருக்கிறார் .ஆனால் பணியிட மாற்றம் செய்யப்பட்ட திட்ட இயக்குனர் தண்டபாணி இரண்டு நாட்களில் பல கோடி ரூபாய் பெற்றுக் கொண்டு முன் தேதியிட்டு ஆவணங்களில் கையெழுத்து போட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது இது சம்பந்தமாக ஊரக வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளர்கள் உரிய விசாரணை நடத்தி சட்டவிரோதமாக அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்ட திட்ட இயக்குனர் தண்டபாணி மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.