பணியிட மாறுதலுக்கு 50லட்ச்சம் வரை லஞ்சம் பேரம்!? RTO அலுவலகத்திற்கு மாதத்திற்கு சுமார் 20லட்சம் வரை கப்பம் கட்டும் வாகன உரிமையாளர்கள்!

முதல்வர் அவர்களுக்கு புகார்!
கடந்த மாதம் 6 வட்டார போக்குவரத்து அதிகாரிகள் பணியிட மாற்றம் மற்றும் அவர்களுக்கு பணி உயர்வு வழங்கி அரசு உத்தரவு போட்ட நிலையில்

தற்போது தமிழகம் முழுவதும் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பணியில் இருக்கும் RTO வாக பணியில் இருப்பவர்கள் பணியிட மாற்றம் செய்வதற்கான பணி நடைபெற்று வருகிறது.

இதற்காக தமிழகத்தில் வருமானம் வரும் மாவட்டங்களில ஆர்டிஓ அதிகாரிகள் தங்களுக்கு தெரிந்த ஆளுங்கட்சியினர் மூலம் சிபாரிசு செய்து வருவதாக தகவல்!
அப்படி சிபாரிசின் மூலம் பேச்சுவார்த்தையில் 50 லட்சம் வரை குதிரை பேரம் நடப்பதாக அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது!இந்த குதிரை பேரம் எங்கு நடந்து கொண்டிருக்கிறது என்பதுதான் வியப்பாக உள்ளது எப்போதுமே ஒரு துறையில் பணி இடமாற்றம் அதிகாரிகளுக்கு வேண்டும் என்றால் சம்பந்தப்பட்ட துறை அமைச்சரிடம் சிபாரிசு கேட்டு அதற்கான சன்மானம் கொடுத்து பணியிட மாற்றம் வாங்குபவர்கள் என்பது நிதர்சனம் .
ஸ்டாலின் குடுபத்திலிலுள்ள முக்கிய நபர் சொன்னால் மட்டுமே நடக்கும்!??
இந்த குதிரை பேரம் எங்கு நடந்து கொண்டிருக்கிறது என்பதுதான் வியப்பாக உள்ளது எப்போதுமே ஒரு துறையில் பணி இடமாற்றம் அதிகாரிகளுக்கு வேண்டும் என்றால் சம்பந்தப்பட்ட துறை அமைச்சரிடம் சிபாரிசு கேட்டு அதற்கான சன்மானம் கொடுத்து பணியிட மாற்றம் வாங்குபவர்கள் என்பது நிதர்சனம் .
ஆனால் தற்போது தமிழகத்தில் வெளிப்படைத்தன்மை வேண்டுமென்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் இந்த ஆர்டிஓ பணியிடமாற்றம் குதிரை பேரங்கள் வெளிப்படைத்தன்மையாக நடக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது .
ஏனென்றால் இந்த பணியிட மாற்றம் சம்பந்தமாக குதிரை பேரம் திமுக கட்சியில் முக்கிய பொறுப்பில் உள்ள ஒருவரிடம் மட்டுமே பொறுப்பை ஒப்படைத்து உள்ளதாகவும் தகவல்கள் வந்தநிலையில் ஆனால் அது உண்மையில்லை என்றும் முதல்வர் குடும்பத்திலுள்ள முக்கியமான நபர்தான் இந்த முடிவை எடுப்பதாகவும் அவர் தலையசைத்தாள் மட்டுமே பணியிட மாறுதல் கேட்கும் இடத்திற்கு கிடைக்கும் என்றும் பரவலாக தகவல் கசிந்துள்ளது!
உள்ளாட்சி தேர்தல்; 100% வெற்றி பெற வேண்டும்” – மாவட்ட செயலாளர்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!
எது எப்படியோ ஒவ்வொரு துறையிலும் உள்ள உயர் அதிகாரிகளின் பணியிடம் மாற்றங்களில் ஒரு கோடி வரை குதிரை பேரம் நடக்கிறது என்ற தகவல்களை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் நேரடிப் பார்வையில் விசாரித்து இந்த குற்றச்சாட்டுகளை எல்லாம் வரும் உள்ளாட்சி மற்றும் நகராட்சித் தேர்தலுக்கு முன் அவர் நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாகவும் அரசியல் முக்கிய புள்ளிகள் பேசிவருகின்றனர் .
எது எப்படியோ ஜெயலலிதா ஆட்சியில் எந்த ஒரு அரசு ஒப்பந்தம் எடுக்க வேண்டும் என்றாலும், உயர் அதிகாரிகள் தங்களுக்கு தேவைப்பட்ட மாவட்டங்களில் பணி செய்ய வேண்டும் என்றாலும், புதிதாக அரசு வேலைகள் போடுவதாக இருந்தாலும் அந்த பைல்கள் எல்லாமே சசிகலா அவர்கள் பார்த்து முடிவு எடுப்பார் என்று ஒரு முத்திரை பதித்து வந்ததை நாம் அனைவரும் மறக்க முடியாது. ஜெயலலிதா அவர்கள் மறைவுக்குப்பின் எடப்பாடி அவர்கள் முதல்வராக நான்கு வருடமாக எந்த ஒரு பெரிய ஒப்பந்தங்களும் அவருடைய நேரடி பார்வையில் அவருடைய உறவினர்களுக்கு ஒதுக்கப்பட்டதாக பல குற்றச்சாட்டுகள் எழுந்தது அரசு வேலைகள் புதிதாக நான்கு வருடமாக எந்த துறையையும் எடுக்க வில்லை. என்ன காரணம் என்றால் ஒவ்வொரு மாவட்டத்தில் இருப்பவர்களும் எங்களைக் கேட்காமல் வேலை நியமனத்தை போடக்கூடாது என்று அந்தந்த மாவட்ட செயலாளர்கள் அமைச்சர்கள் அழுத்தத்தின் பெயரில் எந்த ஒரு அரசு வேலைகளையும் கடந்த 4 ஆண்டுகளாக போட வில்லை அதனால் அரசு வேலைகளுக்கு லஞ்சம் கொடுத்து யாரும் வேலைக்கு சேர்ந்தார்கள் என்ற குற்றச்சாட்டை வரவில்லை மற்ற ஒப்பந்தங்கள் அனைத்திலும் ஊழல் நடந்ததாக நீதிமன்றம் வரை சென்றது அனைவருக்கும் தெரியும் இதையெல்லாம் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தற்போது முதல்வர் பதவியில் இருக்கும் ஸ்டாலின் அவர்கள் கலெக்சன் கரப்ஷன் என்று அதிமுக அமைச்சர்கள் மீது விமர்சனம் செய்து பிரச்சாரம் செய்து வந்தார் அதை யாரும் மறுக்கவும் முடியாது. மறைக்கவும் முடியாது. இந்த சூழ்நிலையில் பத்து வருடமாக அரசு வேலை எதுவும் இல்லாமல் எந்த ஒரு வருமானமும் இல்லாமல் மக்கள் இருந்த நிலையில் தற்போது திமுக ஆட்சி வந்தவுடன் முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்ற ஒரு மாதத்தில் அந்தந்த மாவட்ட ஆட்சியாளர்கள் அழைத்து அனைத்திலும் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்று உத்தரவு போடப்பட்டது. அதற்கு காரணம் தலைமைச் செயலாளராக பொறுப்பேற்றுள்ள இறையன்பு கொடுத்த ஆலோசனையின் பெயரில் முதல்வர் ஸ்டாலின் இதைத் தெரிவித்தார் .இந்த உத்தரவு அனைவரும் மகிழ்ச்சியாக இருந்தது ஆனால் தற்போது நடப்பதோ அது இல்லை என்றும் அந்தந்த மாவட்டங்களில் பணியிட மாற்றங்கள் வேண்டுமென்றால் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சொன்னால்கூட நடந்து விடுகிறது ஆனால் திமுக நிர்வாகிகள் யார் சொன்னாலும் எந்த வேலையும் மாவட்டத்தில் உள்ள உயர் அதிகாரிகள் செய்வதில்லை என்ற குற்றச்சாட்டு வருகிறது. இதற்கு காரணம் தலைமைச் செயலாளர் மாவட்ட ஆட்சியாளர்கள் தான் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்ற ஒரே உத்தரவு தான் இதற்கு காரணம். அதனால் திமுக நிர்வாகிகள் எந்த மாவட்ட ஆட்சியாளர் துணை ஆட்சியர் வட்டாட்சியர் யாரிடம் சென்று எந்த உதவியும் கட்சி சார்பாக கேட்க முடியாத நிலையில் புலம்பிக்கொண்டு உள்ளதாகவும் தகவல் வந்துள்ளது .
இப்படி இருக்கும் நிலையில் தற்போது தமிழகத்தில் போக்குவரத்து துறையில் வருவாய் ஈட்டித்தரும் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் உள்ள உயர் அதிகாரிகளின் RTO பணியிடம் மாற்றம் தான் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது .

ஏனென்றால் ஒவ்வொரு மாவட்டத்திலும் இருக்கும் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் குறைந்தது ஆயிரம் வாகனங்கள் குறையாமல் தற்போது சட்ட விதிகளை மீறி சரக்குகளை எடுத்துச் செல்வது அனைவருக்கும் தெரியும் அப்படி எடுத்துச் செல்லும்போது ஒவ்வொரு வாகனத்திற்கும் வட்டார அலுவலகத்திற்கு மாதம் எவ்வளவு செலுத்த வேண்டும் என்ற ஒரு ஒப்பந்தம் போடப்பட்டு இருக்கும். சரக்கு வாகனங்கள் இல்லாத மண் மணல் எடுத்துச் செல்லும் டிப்பர் லாரிகள் மாதம் எவ்வளவு தரவேண்டும் என்று ஒரு ஒப்பந்தம் போடப் பட்டிருக்கும் இதையெல்லாம் விட தமிழகத்திற்கு அருகில் உள்ள மூன்று மாநிலங்கள் கேரளா ,கர்நாடகா, ஆந்திரா இந்த மூன்று மாநிலங்களுக்கு உள்ளே நுழையும் இடத்தில் தமிழ்நாட்டு வாகன சோதனை சாவடி அலுவலகம் (செக்போஸ்ட் )இருக்கும். இந்த செக் போஸ்டை தாண்டி செல்ல வேண்டுமென்றால் அந்த வாகனத்தில் எவ்வளவு எடை எடுத்து செல்லவேண்டும் என்ற ஒரு நிபந்தனை உள்ளது அப்படி நிபந்தனையை மீறி பல மடங்குகள் அதாவது 10 டன் என்றால் 30 டன் எடுத்துச் செல்லும் வாகனங்களுக்கு அந்த சோதனைச் சாவடிகளில் பல ஆயிரங்கள் லஞ்சமாக கொடுத்த பிறகு அந்த வாகனங்கள் அருகில் உள்ள மாநிலங்களுக்கு செல்ல அனுமதிப்பார்கள் என்ற குற்றச்சாட்டு உள்ளது. இப்படி பல ஆயிரங்கள் பல லட்சங்கள் லஞ்சம் கிடைக்கும் இடங்களுக்கு தற்போது ஆர்டிஓ பணியிடமாற்றம் கேட்டு கடும் போட்டி நடந்துக் கொண்டிருப்பதாக தகவல் வந்துள்ளது.