Uncategorized

பணியிட மாற்றம் உத்தரவை ரத்து செய்ய பல லட்சம் லஞ்சம்!? சந்தோஷத்தின் உச்சத்தில் கேக் வெட்டி கொண்டாடிய தேவதானப்பட்டி பேரூராட்சி தூய்மை பணி மேற்பார்வையாளர்! தேனி மாவட்ட ஆட்சி நிர்வாகத்தில் நடக்கும் சீர்கேட்டை சீர் செய்வாரா தமிழக முதல்வர்!?

அரசு வேலையில் பொதுவாக 3 வருடங்களுக்கு ஒரு முறை பணியிட மாறுதல் செய்ய வேண்டும் என்பது விதி.. அது போக நிர்வாக காரணங்களுக்காக எப்போது வேண்டுமானாலும் பணியிட மாற்றம் செய்யும் அதிகாரம் துறை தலைமைக்கு மற்றும் அந்தந்த மாவட்ட ஆட்சியருக்கு உண்டு. ஆனால் சட்ட விதிகளை எல்லாம் காற்றில் பறக்க விட்டு தேனி மாவட்டத்தில் உள்ள பேரூராட்சி தூய்மை பணி மேற்பார்வையாளர்கள் பணியிட மாற்றத்தை ஒரே மாதத்தில் ரத்து செய்து உத்தரவிட்ட தேனி மாவட்ட ஆட்சியரின் வினோத  உத்தரவு தேனி மாவட்ட ஆட்சி நிர்வாகத்தில் சீர்கேடு என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டி

போ. மீனாட்சிபுரம்

பூதிப்புரம்

தேவதானப்பட்டி

கெங்குவார்பட்டி

அனுமந்தன்பட்டி

ஹைவேவிஸ்

காமயக்கவுண்டன்பட்டி

கோம்பை

குச்சனூர்

மார்க்கையன்கோட்டை

மேலச்சொக்கநாதபுரம்

ஓடைப்பட்டி

பழனிசெட்டிபட்டி

பண்ணைப்புரம்

புதுப்பட்டி

தாமரைக்குளம்

தென்கரை

தேவாரம்

உத்தமபாளையம்

வடுகபட்டி

வீரபாண்டி என மொத்தம் 22 பேரூராட்சிகள் உள்ளன. இதில் வடுகபட்டி தேவதானப்பட்டி தேவாரம் 3 பேரூராட்சிகளில் தூய்மை பணி மேற்பார்வையாளர்களாக இருக்கும் முத்துராஜ் பால்பாண்டி சுப்புராஜ் ஆகிய மூன்று பேரையும் ஜூலை மாதம் 2 ஆம் தேதி தேனி மாவட்ட ஆட்சியர் பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டார்.  ஆனால் தேவதானப்பட்டி பேரூராட்சியில் தூய்மை பணி மேற்பார்வையாளராக இருந்த பால்பாண்டி வடுகப்பட்டிக்கு செல்லாமல் காலம் தாழ்த்தியுள்ளார். அதுமட்டுமில்லாமல் தேவாரத்தில் இருந்து  தேவதானப்பட்டிக்கு பணியிடமாற்ற செய்த முத்துராஜையும் தேவதானப்பட்டியில் சேர வேண்டாம் எனவும் பால் பாண்டி கூறியதாகவும் அதனால் சில நாட்களாக பால்பாண்டியும் முத்துராஜாவும் பணியிட மாறுதல் உத்தரவுப்படி சேரவில்லை எனவும் அதன் பின்பு பால்பாண்டியிடம் வடுகபட்டி பேரூராட்சி பணியில் சேருங்கள் அதன் பின்பு பேசிக் கொள்ளலாம் என பேரூராட்சி உதவி இயக்குனர் கூறியதாகவும் அதன் அடிப்படையில் பால்பாண்டி வடுகபட்டி பேரூராட்சி தூய்மை பணி மேற்பார்வையாளராக சேர்ந்துள்ளார். அதேபோல் வடுகபட்டி பேரூராட்சி தூய்மை பணி மேற்பார்வையாளர் சுப்புராஜ்  தேவாரம் பேரூராட்சி தூய்மை பணி மேற்பார்வையாளராக பணியில் சேர்ந்துள்ளார். அதேபோல் தேவாரம் பேரூராட்சி தூய்மை பணி மேற்பார்வையாளர் முத்துராஜ் தேவதானப்பட்டி பேரூராட்சி தூய்மை பணி மேற்பார்வையாளராக பணியில் சேர்ந்துள்ளார். இந்த பணியிட மாற்ற உத்தரவுப்படி மூன்று பேரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள பேரூராட்சிகளில் பணியில் சேர்ந்தனர். ஆனால் தேவதானப்பட்டியில் இருந்து வடுகபட்டிக்குச் சென்ற துப்புரவு பணி மேற்பார்வையாளர் பால்பாண்டி  எத்தனை லட்சம் செலவானாலும் மீண்டும் தேவதானப்பட்டிக்கு பணியிட மாற்றம் பெற்று வந்துவிடுவேன் என தேவதானப்பட்டி பேரூராட்சி அதிகாரிகளிடம் கூறியுள்ளார். அதேபோல்  பேரூராட்சி உதவி இயக்குனரிடம் மீண்டும் தேவதானப்பட்டி பேரூராட்சிக்கு பணியிடம் மாறுதல் செய்து கொடுத்தால் எத்தனை லட்சம் வேண்டுமானாலும் தருகிறேன் என பேரூராட்சி உதவி இயக்குனரிடம் கூறியதாகவும் அதற்கு பேரூராட்சி உதவி இயக்குனர் தேனி மாவட்ட ஆட்சியரிடம் பேசி தேவதானப்பட்டி பேரூராட்சிக்கு பணியிட மாறுதல் பெற்றுத் தருகிறேன் என பால்பாண்டியிடம் உறுதி கூறியுள்ளார்.  அதன் பின்பு தேனி மாவட்ட பேரூராட்சி உதவி இயக்குனர் மற்றும் தேனி மாவட்ட ஆட்சியர் இரண்டு பேரும் என்ன ஒப்பந்தம் போட்டுக் கொண்டார்கள் என்று தெரியவில்லை . ஆனால் ஒரே மாதத்தில் 28/08/2024 அன்று வடுகபட்டி பேரூராட்சியில் இருந்து மீண்டும் தேவதானப்பட்டி பேரூராட்சி தூய்மைப்பணி மேற்பார்வையாளராக பால்பாண்டியை பணியிட மாற்றம் செய்து தேனி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டது தற்போது  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மீண்டும் தேவதானப்பட்டிக்கு பணி மாறுதலை பெற்று வந்த பால்பாண்டி தேவதானப்பட்டி பேரூராட்சியில் ஊழியர்களுடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். எது எப்படியோ அரசியல் பலம், பண பலம், அதிகார பலம் இருக்கும் ஒருவர் என்ன வேண்டுமானாலும் சாதிக்கலாம் என்பதற்கு உதாரணமாக தற்போது  தேனி மாவட்ட ஆட்சியர் வழங்கிய பணி மாறுதல் உத்தரவை ஒரே மாதத்தில் ரத்து செய்து மீண்டும் அதே இடத்துக்கு பணியிட மாற்றுதல் வழங்கி உத்தரவிடும்படி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் நிர்வாக சீர்கேடு இருப்பதாகவும் பணி மாறுதல் ரத்து செய்வதற்கு காரணம் என்ன என்றும்!? மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது என்ன என்று  தேனி மாவட்ட ஆட்சியர் பார்வைக்கு விட்டு விடுவோம். ஆனால் ஒரே மாதத்தில் பணியிட மாற்றத்தை ரத்து செய்த நிகழ்வு தேனி மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் உள்ள நேர்மையான அதிகாரிகளின் மத்தியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. ஆகவே தேனி மாவட்ட ஆட்சி நிர்வாகத்தில் நடக்கும் சீர்கேட்டை சீர் செய்ய தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

Related Articles

Back to top button