பறந்து வந்த ஆம்புலன்ஸ்! குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்த கோவை ராமகிருஷ்ணா மருத்துவமனை மருத்துவர்கள்.
கோவை ராமகிருஷ்ணா மருத்துவமனை அறுவை சிகிச்சைக்கான அரசு மருத்துவமனை உயர் அலுவலரிடம் அனுமதி பெற்று, பிறந்த குழந்தையின் தாய் தந்தை சம்மதத்துடன், அறுவை சிகிச்சை .
திருச்சி அரசு மருத்துவமனையில் பிறந்த 7 நாட்கள் ஆன பிஞ்சு குழந்தைக்கு இருதய கோளாறு, கோவையில் அறுவை சிகிச்சை செய்ய ஆம்புலன்ஸில் பாதுகாப்புடன் வந்தது. குழந்தை வரம் இறைவன் தந்த அருட்க்கொடை, அதனை பெற்ற இளம் தம்பதியான திருச்சி மருங்காபுரிதாலுகா,
நவகுடியை சேர்ந்த திருமுருகன்-துர்காதேவி க்கு பெண் குழந்தை தேவதையாக, மணப்பாறை அரசு மருத்துவமனையில் ஏழு நாட்களுக்கு முன் பிறந்தது அசைவின்றி இருந்த குழந்தை கண்ட மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்கு , திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்களுக்கு அதிர்ச்சியானது ஆமாம், பிஞ்சு குழந்தை பிறக்கும் போதே இருதய சுவாச கோளாறு ஏற்பட்டு குழந்தை மிகுந்த சிரமம் அடைந்து வருவதை இளம் தம்பதிக்கு எடுத்து கூறிய மருத்துவர்கள்,
உடனடியாக அறுவை சிகிச்சை மேற்க்கொள்ள வேணடும் எனறனர் இதனை தம்பதி மற்றும் உறவினருக்கு கண்ணீர் மல்க அழத்தொடங்கினர், தொடர்ந்து அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மேல் சிகிச்சை செய்து வந்தனர், இந்த நிலையில் விபரம் அறிந்த கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையான ராமகிருஷ்ணா மருத்துவமனை குழந்தையின் உயர் இருதய அறுவை சிகிச்சை செய்ய சம்மதத்தினர், மேலும் அறுவை சிகிச்சைக்கான ஏற்பாடுகளை செய்தனர், அதற்கான அரசு மருத்துவமனை உயர் அலுவலரிடம் அனுமதி பெற்று, குழந்தையுடன் தாய் தந்தை சம்மதத்துடன், அறுவை சிகிச்சை செய்வதற்கு, திருச்சியில் இருந்து கோவைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்ல முடிவு செய்தனர், காவல் துறை அனுமதி பெற்று போக்குவரத்து போலீசார் உதவியுடன் தனியார் ஆம்புலன்ஸில் சுவாச கருவி ,அவசர சிகிச்சை உதவிக்கு , டாக்டர், நர்சு, மற்றும் குழந்தையின் தாய் தந்தையுடன் திருச்சியில் இருந்து ,பிறந்து 7 நாட்களே ஆன பெண் குழந்தைக்கு இருதய அறுவை சிகிச்சை செய்வதற்காக, (புதன்) பகல் 2.30 மணிக்கு ஆம்புலன்ஸ் வேன் கிளம்பியது இதனை கோவை சேர்ந்த ஓட்டுனர் பிரவின் ஆம்புலன்ஸை திருச்சி சாலை கடந்து மிக கவனமாக வாகனத்தை ஒட்டி வந்தார், சாலை வழி நெடுகிலும் போக்குவரத்து போலீஸ் பாதுகாப்புடன் கிரீன் சிக்னல் சாலையான, சரியாக இரண்டரை மணி நேரத்தில் அதாவது மாலை ஐந்து மணிக்கு, ஆம்புலன்ஸ் கோவை,அவினாசி சாலையில் உள்ள ராம கிருஷ்ணா மருத்துவ மனைக்கு வந்தடைந்தது. ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுனர் சாமர்த்தியமாக வாகனத்தில் குறைந்த நேரத்தில் கொண்டு வந்ததை அங்கு கூடியிருந்தவர்கள் கைதட்டி பாராட்டினார்கள்,தொடர்ந்து குழந்தைக்கான இருதய அறுவை சிகிச்சையை மேற்க்கொள்ள டாக்டர்கள், அவசர சிகிச்சை அறைக்கு கொண்டு சென்று, அங்கு செயற்கை சுவாச கருவி பொறுத்தபட்டு ,அறுவை சிகிச்சை இரவில் செய்யபடும் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தனர், குழந்தைக்கு அறுவை சிகிச்சை நல்ல படியாக நடக்கவும், பூர்ண குணம் பெற மருத்துவமனையில் இருந்த நோயாளிகள் பிராத்தனை செய்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது, குழந்தையை எடுத்துக்கொண்டு பறந்து வந்த ஆம்புலன்ஸ். தயாராக இருந்த கோவை ராமகிருஷ்ணா மருத்துவமனை மருத்துவர்கள் வெற்றிகரமாக முடிந்த அறுவை சிகிச்சை!