Uncategorizedநகராட்சி

பல கோடி செலவில் கட்டப்பட்ட படகு இல்லம் கழிவு நீர் சூழ்ந்து சுகாதாரமற்ற நிலையில் மாசடைந்து காணப்படுவதால் சுற்றுலாப் பயணிகள் அவதி!நடவடிக்கை எடுக்காத வால்பாறை நகராட்சி நிர்வாகம்! கோவை மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பாரா!?

கோவை மாவட்டம் வால்பாறைக்கு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்கோவை மாவட்டம் வால்பாறை முக்கிய சுற்றுலா தலமாக உள்ளது. இங்கு கண்கொள்ள காட்சியளிக்கும் தேயிலை தோட்டங்கள், நல்ல முடி பூஞ்சோலை, சோலையாறு அணை, கூழாங்கல் ஆறு, சின்னக்கல்லாறு நீர்வீழ்ச்சி உள்ளிட்ட இடங்களுக்கு உள்ளூர் மட்டுமின்றி பிறமாவட்டங்கள் மற்றும் கேரள, கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்களை சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.இந்த நிலையில் வால்பாறையில் போதிய பொழுதுபோக்கு அம்சங்கள் இல்லாததால் வாழைத்தோட்டம் புதிய பஸ் நிலையம் அருகே . சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில்,

ரூ.4.75 கோடி மதிப்பீட்டில் படகு இல்லம் அமைக்கும் பணி கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கியது.படகு இல்லம், பி.ஏ.பி.காலனி பகுதியில் தாவரவியல் பூங்கா அமைக்கப்பட்டுள்ளன. இந்த படகு இல்லம் நகராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. தொடர் விடுமுறை நாட்களில் வால்பாறைக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.படகு சவாரியில் சுற்றுலா பயணியர் பயணம் செய்ய கட்டணமாக, 40 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.பொங்கல் தொடர் விடுமுறையில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வால்பாறையில் குவிந்த வண்ணம் இருந்தனர்.அப்படி வந்த ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் படகு சவாரி செய்தனர்.

ஆனால் படகு இல்லத்தில் கழிவுநீர் மற்றும் தேங்கி நிற்கும் குப்பைகளால் நிறைந்து சுகாதாரமற்ற நிலையில் காணப்பட்டதால் படகு இல்லம் முழுவதும் துர்நாற்றம் வீசி வந்ததால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்படுமோ என சுற்றுலாப் பயணிகள் அச்சத்துடன் படகு சவாரி செய்து திரும்பினார்.இதனால் இனிவரும் காலங்களில் வால்பாறைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி செய்வதை முற்றிலும் தவிர்க்க நேரிடும் .இதனால் வால்பாறை நகராட்சிக்கு வரும் வருமான இழப்பு ஏற்படும்.ஆகவே சுற்றுலா பயணிகள் நலன் மற்றும் படகு இல்லம் சுற்றி இருக்கும் பொதுமக்கள் கருதி படகு இல்லத்தில் கலந்துள்ள கழிவுநீர் மற்றும் தேங்கி நிற்கும் குப்பை கழிவுகளை உடனடியாக அகற்றி தண்ணீர் மாசுபடாமல் படகு இல்லம் சுத்தமாக இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், படகு இல்லத்திலும், நகராட்சி பூங்காவிலும் சுற்றுலா பயணியருக்கு போதிய அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி கொடுக்க வால்பாறை நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நகராட்சி நிர்வாகத்திற்கு உள்ளூர் மக்களும், சுற்றுலா பயணிகளும் தொடர்ந்து குற்றச்சாட்டையும் கோரிக்கையும் விடுத்துள்ளனர். ஆனால் இந்தக் குற்றச்சாட்டுக்கு வால்பாறை நகராட்சி அதிகாரிகள் கூறுவது என்னவென்றால் ‘வால்பாறை படகு இல்லத்தில் தேங்கி இருக்கும் கழிவுகளை அகற்றும் பணி தொடர்ந்து நடக்கிறது. வால்பாறை நகரில் கால்வாய் கரை பகுதியில் வசிக்கும் மக்கள், தங்கள் வீடுகளில் இருந்து வெளியாகும் கழிவு நீரை மழைநீர் கால்வாயில் விடக்கூடாது.குப்பையை ஆற்றில் வீசுவதை தவிர்த்து, துாய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டும். படகு இல்லத்தில் தேக்கி வைக்கப்படும் தண்ணீர் மாசுபடாமல் இருக்க பொதுமக்களும் நகராட்சிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கூறுகின்றனர். எது எப்படியோ பொதுமக்கள் கூறும் குற்றச்சாட்டிற்கு ஏதாவது காரணங்களை சொல்லி வால்பாறை நகராட்சி நிர்வாகம் கடந்து செல்லாமல் சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதி உடனடியாக படகு இல்லத்தில் கழிவு நீர் மற்றும் குப்பைகள் கலக்காதவாறு துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் அனைத்து சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது. ஒருத்தர் இருந்து பார்ப்போம் வால்பாறை நகராட்சி நிர்வாகத்தின் நடவடிக்கையை!

Related Articles

Back to top button