காவல் செய்திகள்

பல கோடி மதிப்புள்ள நிலம் மோசடியில் கைது செய்யப்பட்ட பிஜேபி கட்சி நிர்வாகி கொடைக்கானல்  ஆடம்பர சொகுசு பங்களாவில் உல்லாசம்!அதிர்ச்சி தகவல்!

அதிமுக கட்சியில் இருந்து விலகி பாஜக மாநில பிற்படுத்தப்பட்டோர் அணி செயலாளராக இருப்பவர்  வெங்கடேசன் (வயது 50.)என்ற மிளகாய் பொடி வெங்கடேசன்.இவர் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர் ஆவார் .

சென்னையையடுத்துள்ள ரெட்டில்ஸ் மார்க்கெட்டில்   வெங்கடேசனின் தாய் ராஜேஸ்வரி  மிளகாய் பொடி விற்று வந்ததால் அப்பகுதி மக்கள் சிறுவயதில் இந்த வெங்கடேசனை மிளகாய் பொடி வெங்கடேசன் என்று கூப்பிட ஆரம்பித்தார்கள். சிறு வயதில் வெங்கடேசன் இருந்தபோது வெங்கடேசன் குடும்பத்தில் மிகவும் வறுமையில் இருந்துள்ளதாகவும் அதனால் தந்தை கந்தசாமிக்கும் தாய் ராஜேஸ்வரிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது காரணமாக தந்தை கந்தசாமி தனியாக வீட்டை விட்டு வெளியே சென்று விட்டதாகவும் வெங்கடேசனும் அவரது தாயும்  தனியாக வாழ்ந்து வந்தனர்என்றும்.அதன் பின்னர் வெங்கடேசன் தாய்  முக்குலத்தோர் சமுதாயத்தைச் சேர்ந்த தென் மாவட்டத்தைச் சேர்ந்த நபரின் துணையால்  வெங்கடேசன் வளர்த்து வந்தார் என்றும் வெங்கடேசன் 25 வயதில்  ரெட்டில்ஸ் சுற்றுவட்டாரத்தில் இருக்கும் செம்மரக்கட்டை வியாபாரிகளுடன் நட்பு பழக்கம் ஏற்பட்டது. அப்படியே அவர்களுடன் சில காலம் இருந்து கொண்டு தொழிலை கற்றுக் கொண்டார். அப்போது ரெட்டில்ஸில் ஏதாவது கோவில் திருவிழா நிகழ்ச்சி என்றால் தன்னுடைய புகைப்படங்களை போட்டு நூற்றுக்கும் மேற்பட்ட விளம்பர பதாகைகளை வைத்து தன்னைச் சுற்றி ஒரு கூட்டம் இருப்பது போல் மாயை உண்டாக்கி  பெரிய தொழிலதிபர் போல் நம்ப வைத்துள்ளார்.இதை நம்பி ஒரு சிலர் இவரிடம் தொழில் செய்வதற்கு பணம் கொடுத்து உதவியுள்ளனர். அதை வைத்து தனியாக செம்மரக்கட்டை வியாபாரம் தொழில் செய்ய தொடங்கினார். அதன் பின்னர் தொழிலதிபர் KRV என்ற பெயரில் வெங்கடேசன் அதிமுக கட்சியில் சேர்ந்து கடந்த பத்து வருடங்களாக இருந்து வந்தார் அதன் பின்பு திமுக ஆட்சி வந்தவுடன் பாஜக கட்சியில் சேர்ந்து தற்போது பிற்படுத்தப்பட்டோர் அணி செயலாளராக பாஜக கட்சியில் உள்ள அனைத்து தலைவர்களுடன் சேர்ந்து நின்று புகைப்படம் எடுத்து அதை முகநூலில் பதிவிடுவார். இதை நம்பி பல தொழிலதிபர்கள் இவரிடம் நிலம் மற்றும் செம்மரக்கட்டை வியாபாரம் செய்ய பல கோடிகள் கொடுத்துள்ளதாகவும் அதை வைத்து

அப்போது சட்டவிரோதமாக செம்மரக்கட்டைகளை கடத்தியதாக  ஆந்திர மாநிலத்தில் 40க்கும் மேற்பட்ட வழக்குகள் இவர் மீது பதிவு செய்யப்பட்டது. அது மட்டும் இல்லாமல் சென்னை சுற்றுவட்டார பகுதியில் உள்ள நிலங்களை வாங்கிக் கொள்வதாக கூறி பவர் வாங்கிக் கொண்டு அவர்களை மிரட்டி அந்த நிலங்களை அபகரித்து வந்ததாகவும் தகவல் தெரிவிக்கின்றனர். இது போன்ற பல புகார்கள் இவர் மீது இருப்பதாகவும் தகவல் வந்துள்ளது .  அப்போது அதிமுக கட்சியில் இருந்த வெங்கடேசன் கொடைக்கானலில் உள்ள சொகுசு பங்களாவில் உல்லாச வாழ்க்கை நடத்தி வந்துள்ளார். அதுமட்டுமில்லாமல் வெங்கடேசன் செய்யும்  சட்ட விரோதமான தொழிலில் எந்த இடையூறும் இல்லாமல் இருக்க அவருக்கு துணையாக இருக்கும்  காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும்  அரசு உயர் அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சியில் உள்ள முக்கிய பிரமுகர்களை அழைத்துக் கொண்டு கொடைக்கானலில் இருக்கும் சொகுசு பங்களாவில் அழகிகள் உடன் உல்லாச விருந்து வைத்து உல்லாசமாக இருந்து வந்துள்ளதாகவும் அதிர்ச்சி தகவலும் வந்துள்ளது.


அது மட்டும் இல்லாமல் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த   நபருடன்  உதவி செய்து வந்த நிலையில் அந்த நபருக்கு தொழில் ரீதியாக பணப் பிரச்சனை வந்த நேரத்தில்  சில ஆண்டுகளுக்கு முன்பு துபாய்க்கு சென்று அங்கேயே   செட்டில் ஆகிவிட்டதாவும் . அதன் பின்பு அவர் பெயரில் உள்ள இடங்களை வெங்கடேசன் கைப்பற்றி இவருடைய கஸ்டடியில் வைத்துள்ளதாகவும் தகவல் வந்துள்ளது.

கடந்த வருடம் கோவில் திருவிழா அனுமதி இல்லாமல் வெங்கடேசன் நடத்துவதாக காவல்துறை விசாரணை செய்த போது!

இந்த நிலையில் தான்  சென்னை சவுகார்பேட்டையை சேர்ந்தவர் சுல்தான்(52). தொழிலதிபரான இவர், ரியல் எஸ்டேட் தொழில் ெசய்து வருகிறார். இவர் ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கடந்த மாதம் இறுதியில் புகார் ஒன்று அளித்தார்.அந்த புகாரில், ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட பாடியநல்லூர் பகுதியில் 23.5 சென்ட் நிலம் உள்ளது. இந்த இடத்தை கடந்த 2017ம் ஆண்டு 10 பேர் நிலத்தை விற்பனை செய்து கொடுக்கும்படி நிலத்திற்கான பவர் கொடுத்தனர். அதன்படி நான் இந்த இடத்தை விற்பனை செய்ய முயற்சி செய்து வருகிறேன என்றும். இதற்கிடையே நிலத்தை விற்பனை செய்ய முயன்ற போது, அந்த இடம் பாடியநல்லூர் பகுதியை சேர்ந்த பாஜக பிரமுகர் கே.ஆர்.வெங்கடேசன் அவரது ஆதரவாளரான திருவள்ளூர் ஆர்.ஜி.என், காலனி பகுதியை சேர்ந்த பாஜக திருவள்ளூர் மாவட்ட செயலாளர் நரேஷ்(38), மற்றும் நரேஷின் தந்தை பிரதீப் குமார்(63) ஆகியோர் பெயரில் இருப்பது தெரியவந்தது. எனவே ரூ.4 கோடி மதிப்புள்ள இடத்தை இந்த மோசடி நபர்களிடம் இருந்து மீட்டுதர வேண்டும் என்று புகார் அளித்தார்.அந்த புகாரின் மீது தொழிலதிபருக்கு சொந்தமான ரூ.4 கோடி மதிப்புள்ள நிலத்தை அபகரித்ததாக வெங்கடேசன் மற்றும் திருவள்ளூர் பாஜக மாவட்ட செயலாளர் நரேஷ் உட்பட 3 பேரை ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்தனர். வெங்கடேசன் வைத்திருந்த கை துப்பாக்கி மற்றும் போலி ஆவணம் தயாரிக்க பயன்படுத்திய பொருட்கள் மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மிளகாய் பொடி வெங்கடேசன் கைது செய்யப்பட்ட தகவல் அறிந்ததும், அவரால் பாதிக்கப்பட்ட பலர் ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார் அளித்து வருகின்றனர். அவரிடம் நடத்திய விசாரணையில் இதுபோல் பலரிடம் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்து இருப்பதும் தெரியவந்துள்ளது. கொடைக்கானலில் இருக்கும் ஆடம்பர சொகுசு பங்களாவை எப்போது எப்படி வாங்கினார் . அந்த ஆடம்பர சொகுசு பங்களாவே வெங்கடேசனுக்கு யார் விற்றது என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணையை ஆரம்பித்துள்ளதாக தகவல் வந்துள்ளது.எனவே, கைது செய்யப்பட்ட கே.ஆர்.வெங்கடேசனை 5 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தவும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button