பல மாதங்களாக திறந்தவெளி கழிவுநீர் கால்வாய்கள் சேதம் அடைந்து கழிவுநீர் தேங்கி சுகாதாரமற்ற நிலையில் இருப்பதால் தொற்று நோய் பரவும் அபாயம்! கண்டுகொள்ளாத அருப்புக்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் !விருதுநகர் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பாரா!?

பல மாதங்களாக கழிவுநீர் கால்வாயில் சேதம் அடைந்து கழிவுநீர் தேங்கி நிற்பதால் தொற்று நோய் பரவும் அபாயம்! விருதுநகர் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பாரா!?


தமிழக அரசின் திட்டங்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் கிராமங்கள் , நகரங்கள் என அனைத்து பகுதிகளுக்கும் சென்றடைய உழைத்திட வேண்டும் என உத்தரவிட்டார். அதற்கான பல்வேறு ஆலோசனைகளை வழங்கி உள்ளார் தமிழக முதல்வர் ஸ்டாலின்.
ஆனால் மாவட்ட ஆட்சியாளராக புதிதாக பொறுப்பேற்றவுடன் ஆட்சியாளர்கள் சொல்வது மாவட்டத்தில் அனைத்துப் பகுதிகளுக்கும் வளர்ச்சித் திட்டங்கள் சென்றடைய மாவட்டத்தில் உள்ள அமைச்சர்கள் , மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகளின் ஒத்துழைப்போடு பணியாற்றுவேன்’ மாவட்டத்தில் உள்ள மக்கள் குறைகளை உடனடியாக தீர்த்து வைத்தேன் என்று பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேட்டி அளிப்பது நிதர்சனம்.
ஆனால் நடைமுறையில் அந்த மாவட்ட ஆட்சியாளர்கள் அரசின் மக்கள் நலத்திட்ட பணிகளை முழுமையாக சென்றடைய நடவடிக்கை எடுப்பார்களா என்றால் இல்லை என்பதுதான் நிதர்சனம்! இதற்கு மாவட்ட ஆட்சியாளர்கள் பொறுப்பு கிடையாது. மாவட்டத்தில் உள்ள அதிகாரிகள் தான் பொறுப்பு.
2023 பிப்ரவரி மாதம் விருதுநகர் மாவட்ட 24 வது ஆட்சியாளராக ஜெயசீலன் ஐஏஎஸ் அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியாளராக ஜெயசீலன் பொறுப்பேற்று சில மாதங்களே ஆனா நிலையில் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றி வரும் நிலையில் குக் கிராமங்களில் பொது மக்களின் அடிப்படை தேவையான கழிவுநீர் கால்வாய்கள் சீரமைப்பது, சீரான குடிநீர் வழங்குவது, தெருக்களில் தரமான சாலைகள் அமைத்து தருவது இந்த மூன்றும் அடிப்படை தேவையான ஒன்றாகும்.
இந்த மூன்றும் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் முழுமையாக சென்றடையவில்லை என்று தான் சொல்ல வேண்டும் . இதற்கு தற்போது ஆட்சியாளராக உள்ள ஜெயசீலன் அவர்கள் பொறுப்பேற்று சில மாதங்கள் ஆன நிலையில் விருதுநகர் மாவட்டத்திலுள்ள அனைத்து குக் கிராமங்களுக்கு சென்று ஆய்வு மேற்கொள்ளவில்லை என்பதை விட அனைத்து கிராமங்களுக்கும் பொறுப்பேற்ற பின் இந்தக் குறுகிய காலத்தில் ஆய்வு மேற்கொள்ள முடியாது என்பதுதான் நிதர்சனம்.


ஆனால் பல வருடங்களாக பணியில் இருக்கும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் (BDO )ஆய்வு மேற்கொள்ளவில்லை என்பதுதான் நிதர்சனம் .அதற்கு சாட்சியாக
தற்போது விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட டி .மீனாட்சிபுரம் ஊராட்சி கிராமத்தில் பேருந்து நிறுத்தம் அருகே திறந்தவெளி கழிவுநீர் கால்வாய்கள் சேதம் அடைந்து குப்பை கழிவுகள் கால்வாயில் கிடப்பதால் கால்வாய்களில் கழிவுநீர் செல்லாமல் ஆங்காங்கே தேங்கி இன்று சுகாதாரமற்ற நிலையில் இருப்பதால்

இதனால் துர்நாற்றம் வீசுவதாகவும் அருகில் உள்ள பள்ளிக்குச் செல்லும் மாணவர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்படுவதாகவும் மாணவர்களுக்கு தொற்று நோய் ஏற்படுமா அபாயம் இருப்பதாகவும் கழிவு நீர் கால்வாய்களை சீர் செய்து கழிவு நீரை உடனே அகற்ற வேண்டி பொதுமக்கள் பலமுறை ஊராட்சி மன்ற தலைவரிடம் புகார் கொடுத்ததாகவும் ஆனால் இதுவரை கால்வாய்கள் சரி செய்யாமல் கழிவு நீர் கால்வாயில் தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் தேங்கி நிற்கும் கழிவு நீரால் பேருந்திற்காக காத்திருக்கும் பயணிகள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் அருகில் இருக்கும் குடியிருப்புகளில் வசிக்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்படுவதாகவும் இதனால் இரவு நேரங்களில் கொசு அதிகமாக இருப்பதாகவும் இதனால் பல தொற்று நோய்கள் ஏற்பட அபாயம் உள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஆகவே விருதுநகர் மாவட்ட ஆட்சியாளர் அவர்கள் உடனடியாக பல மாதங்களாக தேங்கி நிற்கும் கழிவு நீரை அகற்றி கழிவுநீர் கால்வாய்களை சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கையாகும்.
மக்கள் நலத்தைப் பேணுகின்ற மாநிலமான தமிழகத்தில்,
ஊரக வளர்ச்சி, ஊராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியங்கள்
பல்வேறு ஊரக வளர்ச்சி மற்றும் நலத்திட்டங்களை செயல்படுத்துதல் மற்றும் உள்ளாட்சி நிர்வாகத்தின் நோக்கங்களை எய்திடும் வகையில் ஊரக உள்ளாட்சி அமைப்புகள் தங்கள் கடமைகளை திறம்பட நிறைவேற்றிட வழி வகை செய்தல் ஆகிய பொறுப்பு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையை சார்ந்தாகும். குக்கிராம அளவில் அனைத்து அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்தி, சுகாதாரத்தினை மேம்படுத்தி, இயற்கை வளங்களைக் காத்து, கிராமங்களுக்கும், நகரங்களுக்கும் உள்ள இடைவெளியைக் குறைத்து, வறுமையை அகற்றி வளமான தமிழகத்தை உருவாக்க மத்திய மாநில அரசுகள் உறுதி பூண்டுள்ளது. ஆனால் இந்த உறுதிகளை எல்லாம் நிறைவேற்ற வேண்டிய அதிகாரிகள் காற்றில் பறக்கவிட்டு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதுதான் நிதர்சனம்.