பல லட்சம் மதிப்பில் நடக்கும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வளர்ச்சி பணிகள் ஆய்வு
விருதுநகர் மாவட்டம்
மாவட்ட ஊரகவளர்ச்சி முகமை சார்பில் நடைபெற்று வரும் திட்ட பணிகள் குறித்து
மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி,நேரில் சென்று ஆய்வு செய்தார்.
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்டப் பல்வேறு பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மூலம் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் தஜெ.மேகநாதரெட்டி, (10.08.2021) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மூலம் வெங்கடாச்சலபுரம் ஊராட்சியில் வெங்கடாசலப்புரம் கிராமத்தில் ரூ.37.80 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பணிகளையும்,
வெங்கடாச்சலபுரம் ஊராட்சியில் ரூ.2.10 லட்சம் மதிப்பீட்டில் முதலமைச்சரின் சூரிய ஒளியுடன் கூடியப் பசுமை வீடுகள் அமைக்கும் பணிகளையும்,
கத்தாளம்பட்டி ஊராட்சி அனைக்கரைப்பட்டி கிராமத்தில் ரூ.6.80 லட்சம் மதிப்பீட்டில்க்கட்டி முடிக்கப்பட்ட பேருந்து நிறுத்தத்தையும்,
மகாத்மா காந்தித் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.1.35 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட 2 மாட்டு தொழுவத்தையும்,
மகாத்மா காந்தி த்தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.2.27 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட 20 ஆட்டுக்கொட்டகைகளையும்
மற்றும் மகாத்மா காந்தித்தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.1.00 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட பண்ணைக்குட்டை அமைக்கும் பணிகளையும், இருக்கன்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்ப் பட்ட இருக்கன்குடி கிராமத்தில் மகாத்மா காந்தித்தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.11.85 லட்சம் மதிப்பில் அமையவுள்ள நர்சரியையும்,
மகாத்மா காந்தி த்தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.1.00 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள மண்புழு தயாரிக்கும் கூடத்தையும், நென்மேனி ஊராட்சியில், பிரதம மந்திரி கிராமச்சாலைகள் இணைப்புத் திட்டத்தின் கீழ், ரூ.14 கோடியே 73 லட்சம் மதிப்பீட்டில்; பாலம் அமையவுள்ள இடத்தினையும் மற்றும் வன்னிமடை கிராமத்தில் பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ், ரூ.1.70 லட்சம் மதிப்பீட்டில் வீடு கட்டும் பணிகளையும்,
முள்ளிசெவல் ஊராட்சியில் சமத்துவபுரம் கிராமத்தில் ரூ.0.33 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான கழிப்பறைகளையும்,
மகாத்மா காந்தி த்தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.5.25 லட்சம் மதிப்பீட்;டில் கட்டி முடிக்கப்பட்ட சமுதாயச் சுகாதார வளாகத்தையும், மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.மேகநாதரெட்டி.,நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, இப்பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்குக்கொண்டுவர வேண்டுமெனச்சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்களுக்கு அறிவுரை மற்றும் ஆலோசனைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்கள்.
இந்த ஆய்வின் போது, திட்ட இயக்குநர் (மா.ஊ.வ.மு) ததிலகவதி, செயற்பொறியாளர் தசக்திமுருகன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.