மாவட்டக் கல்வித் துறை

பள்ளிச் சான்றிதழ் வழங்காமல் கருணையே இல்லாமல் மாணவர்களிடம் கட்டாய கல்வி கட்டணம் வசூல் தனியார் மெட்ரிக் பள்ளி நிர்வாகம்!

பள்ளிச் சான்றிதழ் வழங்காமல் மாணவர்களிடம் கட்டாய கல்வி கட்டணம் வசூல் செய்யும் கருணையே இல்லாத தனியார் மெட்ரிக் பள்ளி நிர்வாகம்!

பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுப்பாரா மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்.!

மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா


மதுரை நாகமலை புதுக்கோட்டை ஜெயராஜ் அன்ன பாக்கியம் தனியார் மெட்ரிக் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்து முடித்த ஆகாஷ் என்ற மாணவன்.

ஆகாஷ் மாணவன்.

தற்போது கல்லூரியில் சேர்ந்து முதலாம் ஆண்டு பயின்று வரும் மாணவருக்கு பள்ளி கல்விச் சான்றிதழ் தர பள்ளி நிர்வாகத்தால் மறுக்கப்பட்டது.
ஏழ்மையான மாணவன் ஆங்கில கல்வி வழியில் படிக்க நினைத்த ஒரே காரணத்தால் படித்த பள்ளியில் கல்விக் கட்டணம் பாக்கி இருந்ததால் பள்ளி நிர்வாகம் ஏழை மாணவன் என்று கூட கருணை காட்டாமல் மனித நேயம் இல்லாமல் கல்வி சான்றிதழ் தராமல் அரசு ஆணை நீதிமன்ற உத்தரவுகளை மதிக்காமல் சட்டவிரோதமாக கல்வி கட்டணம் கட்டினால் மட்டுமே கல்வி சான்றிதழ் தர முடியும் என்று பிடிவாதம் பிடித்துள்ளது கல்வி நிர்வாகம். தற்போது கல்லூரியில் படித்து கொண்டுள்ள மாணவன் கல்வி கட்டணம் கட்ட முடியாத நிலையில் கல்விச் சான்றிதழ் இல்லாமல் கல்லூரியில் இரண்டாவது செமஸ்டர் தேர்வு எழுத முடியாமல் மன உளைச்சலில் இருந்துள்ளார் மாணவன்.


அந்த மாணவனுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற மனித நேயத்துடன் அகில இந்திய மாணவர் கழகம் முன் வந்தது.
பாதிக்கப்பட்ட மாணவனின் கல்வி சான்றிதழை வாங்கி கொடுக்குமாறு வட்டாட்சியர் மற்றும் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. ஆனால் தனியார் கல்வி நிறுவனம் வட்டாட்சியரையும் காவல் நிலையத்தையும் பணத்தால் சரி செய்து விட்டதால் தனியார் கல்வி நிறுவனத்துக்கு ஆதரவாகவும் மாணவனுக்கு எதிராகவும் செயல்பட்டனர்.
இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட கல்வி நிர்வாகம் மாணவனின்
கல்வி சான்றிதழை தர மறுத்துள்ளது. கல்விக் கொள்ளையர்களையும், அவர்களுக்குத் துணையாக இருக்கும் கல்வித்துறையினர், வருவாய், காவல் துறையினரையும் குறிவைத்து, பல கட்ட, பல முனை தாக்குதல் பிரச்சாரத்தை மேற்கொண்டது அகில இந்திய மாணவர் கழகம்.
அதன் பின்பு கல்வி நிர்வாகத்தை கண்டித்து அகில இந்திய மாணவர் கழகம் சார்பாக போஸ்டர்கள் ஓட்டப் பட்டது.
ஆனால், +2 முடியும்போது நிர்வாகம் சொன்ன 60 ஆயிரத்துக்கு மேலான கட்டணத் தொகையைக் கட்டினால் தான் மாணவனின் கல்விச் சான்றிதழை தருவோம் என தனியார் கல்வி நிறுவனம் கண்டிப்புடன் இருந்தது.
அதன் பின்பு மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களிடம் புகார் மனு வழங்கப்பட்டது.
அதன் பின்பு அகில இந்திய மாணவர் கழகம் நிர்வாகிகளை அழைத்து தனியார் மெட்ரிக் பள்ளி நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி மாணவனுக்கு கல்வி சான்றிதழ் கொடுக்குமாறு ஒப்புதல் வழங்கியும் கால தாமதம் செய்து வந்த நிலையில் எப்படியாவது மாணவன் இரண்டாவது செமஸ்டர் தேர்வு எழுத வைக்க வேண்டும் என மாணவனின் நலன் கருதி தொடர்ந்து அகில இந்திய மாணவர் கழகம் கல்வி நிர்வாகத்துடன் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி வந்தது. இது சம்பந்தமாக ரிப்போர்டர் விஷன் அலுவலகத்தில் இருந்து மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா அவர்களிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது உடனடியாக தனியார் பள்ளி நிர்வாகத்துடன் விளக்கம் கேட்டு மாணவனுக்கு கல்வி சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

09/01/2024 அன்று மதியம் மாணவனை அழைத்து கல்விச் சான்றிதழை வழங்கி உள்ளது .
TCயைப் பெற்றுக்கொண்ட மாணவரின் தந்தை
தன் மகன்
படிப்பை தொடர முடியாமல் வாழ்க்கையில் தோற்றுவிட்டேன் என இருந்த போது
அகில இந்திய மாணவர் கழகம் AISA உள்ளே நுழைந்து வெற்றியை வாங்கித் தந்தது என கண்ணீர் மல்க நன்றியை தெரிவித்துள்ளார்.

.
பாதிபட்ட மாணவர்களுக்கு என்றும் துணை நின்று AISA நிச்சயம் அதைச் செய்யும். அதுதான் மாணவர் அமைப்பின் வேலை. என AISA மதுரை மாவட்ட நிர்வாகி தெரிவித்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button