மாவட்டச் செய்திகள்

பள்ளி வளாகம் அருகே கொட்டப்படும் இறைச்சி கழிவுகளால் மாணவர்களுக்கு சுவாசக் கோளாறு தொற்றுநோய் பரவும் அபாயம்! நடவடிக்கை எடுக்காமல் கோமாவில் இருக்கும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சி நிர்வாகம்!

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி ஒன்றியம் வேம்பார் பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கோபால் பட்டியில் சுமார் 1500 குழந்தைகள் பயில கூடிய அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது.


அதன் அருகே பெண் குழந்தைகளுக்கான தங்கும் விடுதியும் பள்ளி அருகே அமைந்துள்ளது அதன் அருகே கோபால் பட்டியில் மொத்த கழிவுகளும் கொட்டப் படுவதால் பள்ளியில் பயிலக் கூடிய மாணவிகளுக்கும் தங்கும் விடுதியில் தங்கியுள்ள குழந்தைகளுக்கும், குப்பை கழிவிலிருந்து துர்நாற்றம் மற்றும் விஷ வாயுக்களால் வெளியேறுவதால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கோபால் பட்டியில் இருந்து பாறைப்பட்டி செல்லும் பிரதான சாலையின் அருகே இந்தப் பள்ளியும் விடுதியும் அமைந்துள்ளது. அவ்வழியே இருசக்கர வாகனத்தில் செல்லக்கூடிய
பொதுமக்கள் அந்த இடத்தைக் கடக்கும் பொழுது மூக்கை பொத்திக் கொண்டு செல்லும் அவல நிலையும் உள்ளது. மேலும் இங்கு கொட்டப்பட்டு கிடக்கும் குப்பைகள் உணவக கழிவுகள் மற்றும் இறைச்சி கழிவுகள் ஆகியவற்றை அப்பகுதியில் திரியும் பன்றிகள் மற்றும் தெருவில் சுற்றி தெரியும் நாய்கள் கழிவுகளை உண்பதற்காக நாய்கள் சண்டையிட்டுக் கொண்டு சாலையில் துரத்தி கொண்டு ஓடுவதால் அவ்வழியே செல்லும் இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் மோதி விபத்துக்கள் ஏற்படுகிறது. இந்த விபத்துக்களால் நாய்கள் இறப்பது மட்டுமல்லாமல் வாகன ஓட்டிகளும் படுகாயம் அடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. பள்ளிக் குழந்தைகள் மற்றும் அவ்வழியே செல்லக்கூடிய பொது மக்களின் நலன் கருதி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது

Related Articles

Back to top button