பழனியில் பிறந்தநாள் அன்று சாமி தரிசனம் செய்து திரும்பிய 8 வயது சிறுவன் திடீர் மரணத்தால் சோகத்தில் மூழ்கிய சிறுவனின் குடும்பம் !
பழனியில் 8 வது பிறந்த நாள் அன்று குடும்பத்துடன் முருகனை தரிசனம் செய்துவிட்டு கீழே இறங்கிய சிறுவன் திடீர் மரணம்.
பழனி ஏப்ரல். 11
ஈரோடு மாவட்டம்
சாக் கவுண்டன் பாளையத்தைச் சேர்ந்த நேச லிங்கத்தின் மகன் விஸ் வஜித் (வயது 8) பிறந்த நாளான 10/04/2024 அன்று பழனி முருகனை தரிசனம் செய்வதற்காக குடும்பத்துடன் பழனி வந்துள்ளனர்.மேலும் குடும்பத்துடன் மலைக் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு சன்னதி ரோடு வழியாக திரு ஆவின் குடி சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு தனது சொந்த ஊரான ஈரோட்டுக்கு செல்வதற்காக கார் நிறுத்தும் இடத்திலிருந்து காரை எடுத்து வருவதற்குள் தாயின் மடியில் மயங்கி விழுந்தவுடன்
சிறுவனின் தந்தை பழனி தலைமை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார் .
டாக்டர் பரிசோதனை செய்ததில் சிறுவன் இறந்து விட்டார் என்று கூறியுள்ளனர்.அதன் பின்பு
பழனி அடிவார காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு சிறுவனின் உடலை உடற்கூறு ஆய்வு பிரேத பரிசோதனைக்காக. பழனி அரசு மருத்துவமனையில் வைத்துள்ளனர்.
பிறந்த நாளன்று சிறுவன் இறந்ததால். சிறுவனின் உறவினர்கள் பெரும் சோகத்தில் ஆழ்த்தியது இது சம்பவம் குறித்து பழனி அடிவார காவல் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.