பழனி ரயில் நிலைய காவல் நிலையத்தில்
பணியில் இருக்கும் பெண் காவலர்களிடம் அநாகரிகமாக நடந்து கொள்ளும் திண்டுக்கல் வட்ட ரயில்வே காவல் ஆய்வாளர் ! மன உளைச்சலால் விருப்ப ஓய்வு கேட்கும் பெண் காவலர்! நடவடிக்கை எடுப்பாரா திருச்சி ரயில்வே காவல் கண்காணிப்பாளர்!

திண்டுக்கல் மாவட்டம் பழனி ரயில்வே நிலைய காவல் நிலையத்தில் கடந்த ஏழு வருடங்களாக பணிபுரிந்து வந்த

முதுநிலைப் பெண் காவலர் தமிழ்ச்செல்வி (1590) பணியின் போது திண்டுக்கல் வட்ட காவல் ஆய்வாளர் அநாகரிமாக நடந்து கொள்வதால் விருப்ப பணி ஓய்வு கேட்டு திருச்சி காவல் கண்காணிப்பாளருக்கு மனு கொடுத்துள்ளார்.

விருப்ப ஓய்வு கேட்டு விண்ணப்பித்த மனுவில் இருப்பது என்னவென்றால்
தமிழ்ச்செல்வியின் சொந்த ஊர் நிலக்கோட்டை என்றும் ( பழனியில் தன்னுடைய இரண்டு பெண் குழந்தைகளுடன் வாடகை வீடு எடுத்து வசித்து வருவதாகவும் கணவர் கொடைக்கானலில் கூட்டுறவுத் துறையில் பணியில் இருப்பதாகவும்

பழனி ரயில்வே நிலைய காவல் நிலையத்தில் பணிபுரிந்த போது காவல் நிலையத்திற்கு அருகே வீட்டில் வசித்து வந்ததால் காவல் நிலையத்தில் இருந்து எந்த நேரமும் தொலைபேசியில் அழைத்தால் உடனடியாக அந்தப் பணிக்கு சென்று விடுவேன் என்றும் கடந்த ஏழு வருடங்களாக பணியை சிறப்பாக செய்து வந்ததாகவும் அது மட்டுமல்லாமல் காவல் நிலையத்தில் நீதிமன்ற பணி காவலராக பணியில் இருந்த போது

பழனியில் அயல் பணியாக ஆய்வாளராக இருந்த தூய மணி வெள்ளைச்சாமி திண்டுக்கல் வட்ட காவல் ஆய்வாளராக பொறுப்பேற்றுக் கொண்ட பின்பு நீதிமன்ற அலுவல் பணி தாண்டியும்
தனிப்பட்ட முறையில் தொலைபேசியில் பேசுமாறு வற்புறுத்தி வந்ததாகவும் அப்படிப் பேசவில்லை என்றால் நீதிமன்ற அலுவல் பணியில் இருந்து தூக்கி விடுவேன் என்று மிரட்டியதற்கு அணிபபடியாகதால் நீதிமன்ற அலுவல் பணியில் இருந்து விக்கி விட்டதாகவும் அதன் பின்பு பொது அலுவல் பணியில் பார்த்து வந்ததாகவும்
புதிதாக பெண் காவலர்கள் பணிக்கு வந்தால் அவர்களை
ஆய்வாளர் தூய மணி வெள்ளைச்சாமி நேரில் வந்து சந்திக்குமாறு கட்டாயப்படுத்தி வந்ததாகவும் இதைப் பற்றி சக காவலர்கள் இடம் எடுத்துக் கூறிய போது ஆய்வாளர்கள் அப்படித்தான் சொல்வார்கள் என அதையெல்லாம் கண்டுகொள்ளக் கூடாது எனவும் கூறினார்கள். அதன்பின்பு

பழனி ரயில் நிலைய காவல் நிலையத்திற்கு சிறப்பு சார்பாய்வாளராக மணிகண்டன் பொறுப்பேற்றுக் கொண்ட மறுநாள் திண்டுக்கல் வட்ட ஆய்வாளர் தூய மணி வெள்ளைச்சாமி பழனி ரயில்வே காவல் நிலையத்திற்கு வந்து அனைத்து காவலர்களையும் அழைத்து இனிமேல் சிறப்பு சார்பு ஆய்வாளர் மணிகண்டன் தான் பழனி ரயில்வே காவல் நிலையத்தை கவனித்துக் கொள்வார் இனிமேல் அனைவருக்கும் அவர்தான் பணிகளை ஒதுக்குவார் அது மட்டும் இல்லாமல் விடுமுறை வேண்டுமென்றாலும் அவர்தான் முடிவு செய்வார் என்றும் சார்பு ஆய்வாளர் நாற்காலியில் சிறப்பு சார்பு ஆய்வாளர் மணிகண்டனை அமர வைத்த நாளிலிருந்து சார்பு ஆய்வாளர் அறையில் இருக்கும் நாற்காலியில் சார்பு ஆய்வாளர் மணிகண்டன் தான் அமர்ந்திருப்பார்.

காவல் நிலைய சார்பாக பொன்னுச்சாமியை வரவேற்பு அறையில் உள்ள இருக்கையில் அமர வைத்துள்ளார்.

இதற்குக் காரணம் திருச்சி ரயில்வே காவல் கண்காணிப்பாளர் தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் ஷீலா மற்றும் திண்டுக்கல் வட்ட ஆய்வாளர் தூய மணி வெள்ளைச்சாமி ஆகியோர் பணியிட மாற்றம் வழங்கக் கூடாது என கூட்டாக சதி வேலை செய்து வருவதால் வேறு வழி தெரியாததால் பலமுறை தற்கொலை முயற்சியையும் எடுத்து குழந்தைகளுக்காக அந்த முயற்சியை கைவிட்டு அதிலிருந்து மீண்டு வந்துள்ளதாகவும் குழந்தைகள் கல்வி நலன் கருதி ராஜினாமா கடிதத்தை ஏற்றுக் கொண்டு பணியில் இருந்து விடுவிக்குமாறு மாவட்ட திருச்சி ரயில்வே காவல் கண்காணிப்பாளருக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு சார்பு ஆய்வாளர் மணிகண்டன் பழனி ரயில் நிலைய காவல் நிலையத்திலிருந்து மூன்று மாதங்களுக்கு முன்பு பணியிடம் மாற்றம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது! எது எப்படியோ பெண் காவலர்கள் பணியில் இருக்கும் போது அவர்களுக்கு ஏற்படும் அநீதிகளை உயர் காவல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கும்போது உடனடியாக விசாரணை மேற்கொண்டு தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் அனைத்து பெண் காவலர்களின் கோரிக்கையாக ஒருத்தர் இருந்து பார்ப்போம் திருச்சி ரயில்வே காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கையை!
சார்பு ஆய்வாளர் அறையில் பணியில் இருக்கும் அனைத்து காவலர்களின் பெயர் மற்றும் ஜாதிப் பெயரை எழுதி தொங்கவிட்டு இருந்ததாகவும் இது சம்பந்தமாக

திருச்சி எஸ்பி தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் ஷீலா அவர்களிடம் தகவல் கொடுத்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் யார் எந்த ஜாதி எனப் பார்த்துதான் பேசுவார் என்றும் ஒரு நாள் மதுரை டிஎஸ்பி பழனி ரயில் நிலையத்திற்கு ஆய்வு மேற்கொண்ட காவல் நிலையத்தில் இருந்த பெயர் பட்டியலை பார்த்து இதுபோன்று ஜாதி பெயர் உடன் வைப்பது சட்டவிரோதமானது என்று சார்பாக மணிகண்டனை அழைத்து கண்டித்து உடனே அந்தப் பதாகையை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளார் அதன் பின்பு அந்த பதாகையை எடுத்துவிட்டு வேறு பதாகை வைத்தனர் என்றும் அதுமட்டுமில்லாமல் திண்டுக்கல் கொடைரோடு ரயில்வே நிலைய காவல் நிலையத்தில் இருந்து பழனி ரயில்வே நிலையத்தில் உள்ள காவல் நிலையத்திற்கு வருபவர்களிடம் மிகவும் மோசமாக நடந்து கொள்வார் என்றும் அது மட்டும் இல்லாமல் அணிவகுப்பில் வேண்டுமென்றே ஒரு மணி நேரம் நிற்க வைப்பார் என்றும் வெளியூரிலிருந்து வரும் காவலர்களுக்கு ரோல் கால் அனுமதி கூட வழங்க மாட்டார் என்றும்
நான் சொல்வதை செய்யவில்லை என்றால் காவல் ஆய்வாளரிடம் சொல்லி உங்களுக்கு மெமோ கொடுத்து விடுவேன் என்றும் மிரட்டும் தோணியில் பேசி வந்ததாகவும் இதற்குக் காரணம் சிறப்பு சார்பு ஆய்வாளர் மணிகண்டனும் ஆய்வாளர் தூய மணி வெள்ளைச்சாமியின் ஒரே சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்றும் பணியில் இருக்கும் போது பெண்ணென்றும் பாராமல் இரட்டை அர்த்தத்தில் பேசி வந்ததாகவும் அது மட்டும் இல்லாமல் ஆய்வாளர் சிறப்பு சார்பு ஆய்வாளர் இவர்களுக்குத் தெரிந்த நபர்கள் பழனி கோவிலுக்கு தரிசனம் செய்ய வந்தால் காவல் நிலைய பணியையும் செய்துவிட்டு அவர்களை கோவிலுக்கு அழைத்துச் சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு திருப்பி அழைத்து வரும் வரை அவர்களுடன் இருக்க வேண்டும் எனவும் கட்டாயப்படுத்தி வந்ததாகவும் கோர்ட் அலுவல் பணி முடிந்து வந்த பின்பு வீட்டுக்கு அனுப்பாமல் வேண்டுமென்றே பல மணி நேரம் காக்க வைத்தார் என்றும்
2/08/2024 அன்று வாராந்திர விடுமுறை ஆனால் வீட்டிற்கு அனுப்பாமல் காவல் நிலையத்தில் உள்ள சிடி ஆவணங்களை அடுக்கி வைக்குமாறு வேண்டுமென்று இரவு வரை வேலை செய்யச் சொல்லி நிர்பந்தம் செய்ததாகவும்
அதுமட்டுமில்லாமல் 10/08/2024 அன்று பழனி ரயில்வே நிலையம் நடைமேடையில் பணியில் இருந்த பெண் காவலர் நாகலட்சுமியை

போதையில் வந்த ஒரு நபர் கன்னத்தில் அறைந்து விட்டு கீழே தள்ளி விட்டதில் அவருக்கு உடம்பில் காயம் ஏற்பட்டுடன் அவருடைய சீருடை கிழிந்த நிலையில் பொதுமக்கள் பெண் காவலர் நாகலட்சுமி மற்றும் மது போதையில் இருந்த நபரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர் உடனே பெண் காவலர் நாகலட்சுமி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாகவும் செல்லும் வழியிலேயே மணிகண்டன் தொலைபேசியில் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டாம் அங்கு சென்றாள் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் இது சம்பந்தமாக எந்த வழக்கும் பதிவு செய்ய வேண்டாம் என்றும் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படி ஆய்வாளர் கூறியதாக சிறப்பு சார்பு ஆய்வாளர் மணிகண்டன் கூறியதாகவும் இவன் பின்னர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று காவல் நிலையத்திற்கு வந்த போது மது போதையில் இருந்த அவர் மீது எந்த வழக்கு பதிவு செய்யாமலும் அவரை அனுப்பி விட்டதாகவும் ஆனால் மது போதையில் பெண் காவலரை தாக்கிய நபர் மீது ஏற்கனவே சென்னை காவல் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது ஆகையால் இரவு நேரங்களில் பெண் காவலர்கள் பணியில் இருக்கும் போது ஏதாவது ஒரு அசம்பாவிதம் நடந்தால் யார் எங்களைக் காப்பாற்றுவார்கள் என காவல் நிலையத்தில் இருந்த அனைவரும் கேட்டதற்கு சிறப்பு சார்பு ஆய்வாளர் மணிகண்டன் கண்டுகொள்ளாமல் அதை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை என்றும் தாக்கப்பட்ட பெண் காவலருக்கு விடுப்பு கொடுத்து அனுப்பி விட்டதாகவும் பாதிக்கப்பட்ட பெண் காவலரை காவல் ஆய்வாளர் தொலைபேசியில் கூட அழைத்து விசாரிக்கவில்லை என்றும் அடுத்த நாள் அணிவகுப்பில் அனைத்துப் பெண் காவலர்களும் இது சம்பந்தமாக கேட்டுள்ளனர் . 28/08/2024 அன்று விடுப்பில் சென்றபோது சிறப்பு சார்பு ஆய்வாளர் மணிகண்டன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கோவிலுக்கு செல்வதற்கு ஆட்கள் வந்துள்ளனர் ஆகையால் உடனே வரவேண்டும் என கட்டாயப்படுத்தியதால் மீண்டும் திரும்பச் சென்று கோவில் பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு மறுநாள் வந்தபோது கணவர் சண்டை போட்டதாகவும் இதனால் 10 நாட்கள் மருத்துவ விடுப்பு எடுத்துக் கொண்டதாகவும் மருத்துவ விடுப்பில் இருந்த போது கோவிலுக்கு செல்ல வேண்டும் என்று அழைத்ததாகவும் விடுப்பில் இருக்கும் போது என்னை அழைக்க வேண்டாம் என் கணவருக்கும் எனக்கும் பிரச்சனை வருகிறது ஆகையால் வர முடியாது என்று கூறியதால் மருத்துவ விடுப்பு முடிந்த மறுநாளில் இருந்து தொடர்ந்து சிறப்பு ஆய்வாளர் மணிகண்டன் மிக மோசமாக நடந்து கொண்டதாகவும்
சிறப்பு சார்பு ஆய்வாளர் மணிகண்டன் வேண்டுமென்றே என் மீது பழிவாங்கும் கால் புணர்ச்சி தொடர்ந்து காட்டி வருவதாக 3/10/2024 அன்று காவல் ஆய்வாளருக்கு புகார் மனு ஒன்று எழுதி பொறுப்பு சார்பு ஆய்வாளர் பொன்னுச்சாமி இடம் கொடுத்ததாகவும் உடனே அந்த புகார் மனுவை செல்போனில் புகார் எடுத்து ஆய்வாளரின் எழுத்தருக்கு அனுப்பிவிட்டு இது சம்பந்தமாக தகவல் தெரிவித்ததாகவும் 04/10 அன்று துப்பாக்கிச் சூடு பயிற்சி முடிந்து இரவு அலுவல் பணிக்கு வந்தபோது இரவு பணி அலுவலில் இருந்த பெண் காவலர் மீனா குமாரி (909) பெண் தலைமை காவலர் சிவமணி (525) ஆகிய இருவரையும் உடுமலைப்பேட்டை ரயில் நிலையத்திற்கு சென்று நாளை காலை வாருங்கள் என திட்டமிட்டு அவர்களை அனுப்பி வைத்ததாகவும் அதன் பின்னர் பாராவில் தனியாக இருந்த போது இரவு 12 மணிக்கு அழைத்து ஆய்வாளரையும் என்னையும் எதிர்த்து எங்கும் வேலை செய்ய முடியாது என்று கூறியதாகவும்
07/10 2025 அன்று காவல் ஆய்வாளர் தூய மணி வெள்ளைச்சாமி பழனி ரயில் நிலைய காவல் நிலையத்திற்கு வந்ததாகவும் அப்போது புகார் மனு எழுதிக் கொடுப்பதை இனிமேல் விட்டுவிட வேண்டும் என்றும் ஏழு வருடமாக தொடர்ந்து பணி செய்து வந்ததாக ரிப்போர்ட் எழுதி அனுப்பினால் வேறு எங்கேயாவது பணியிட மாற்றம் செய்து விடுவார்கள் என மிரட்டியதாகவும் அதன் பின்னர் உடுமலை காவல் நிலையத்திற்கு பணிக்கு சென்று திரும்பி உடன் திருச்சிக்கு துப்பாக்கி துடைக்கும் பணிக்கு ஒரு வாரம் செல்ல வேண்டும் என பணிக்கான உத்தரவு கொடுத்ததாகவும் ஆனால் இதற்கு முன்பும் திருச்சிக்கு பணிக்கு சென்று வந்ததாகவும் திருச்சி பணிக்கு செல்லாத காவலர்கள் இருக்கும்போது அவர்கள் யாரையும் அனுப்பவில்லை என்றும் துப்பாக்கி துடைக்கும் பணிக்கு மூன்று நாட்கள் தான் அனுப்புவார்கள் ஆனால் பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஏழு நாட்கள் பணி கொடுக்கப்பட்டதாகவும் இதனால் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் மிகவும் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்து கொள்ளும் முயற்சிக்கு சென்றதாகவும் இது சம்பந்தமாக கணவருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு பழிவாங்கப்படுவதை கூறியதாகவும் இது சம்பந்தமாக கணவர் காவல் ஆய்வாளரிடம் பேசியதாகவும் கணவரை நேரில் அழைத்த காவல் ஆய்வாளர் மூன்று நாள் விடுப்பு கொடுத்ததாகவும்
திருச்சிக்கு ஒரு நாள் டூட்டி போட்டால்தான் போக மாட்டீர்கள் பணிமாற்றம் செய்தால் அங்கு போய் பணி செய்துதானே ஆக வேண்டும் என சிரித்துக் கொண்டே கூறியதாகவும் அதன் பின்னர் பழனி ரயில்வே நிலைய காவல் நிலையத்திற்கு மதுரை உட்கோட்ட காவல் கண்காணிப்பாளர் வந்தபோது நடந்த சம்பவத்தை தெரிவித்ததாகவும் இனிமேல் ஏதாவது பிரச்சனை என்றால் எனக்கு தொடர்பு கொள்ளவும் என்றும் கூறியதாகவும் இதை மனதில் கொண்டு பழிவாங்கும் நோக்கத்தில் சிறப்பு சார்பு ஆய்வாளர் மணிகண்டன் ஆய்வாளர் தூய மணி வெள்ளைச்சாமி ஆகிய இருவரும் ரிப்போர்ட் எழுதி அனுப்பி திருச்சிக்கு பணி மாற்றம் செய்யப்பட்டதாகவும் ஏழு வருடம் தொடர்ந்து தனிப்பிரிவு ஆய்வாளராக பணியில் இருக்கும் தூய மணி வெள்ளைச்சாமி இவருக்கு வேண்டப்பட்டவர்களுக்கு மட்டுமே தேவையானதை நிறைவேற்றி நினைத்ததை சாதித்து வருவதாகவும் பெண் காவலர்கள் என்று கூட பாராமல் காது கொடுத்து கேட்பது கூட கிடையாது என்றும் தற்போது குழந்தைகளைப் பிரிந்து தனித்தனியாக இருப்பதால் கடந்த நான்கு ஆண்டுகளாக திண்டுக்கல் கொடைரோடு ஆகிய இடங்களுக்கு விருப்ப பணியிடம் மாற்றம் கேட்டு இருபது முறை முறையிட்டும் இதுவரை எனக்கு பணியிட மாற்றம்
கிடைக்கவில்லை.
