பழிக்கு பழி! பிரபல ரவுடி ஜானை காரில் வைத்து சரமாரியாக வெட்டி சாய்த்த அதிர்ச்சி வீடியோ! பிடிக்கச் சென்ற காவல்துறையினரை தாக்கி விட்டு தப்பி சென்ற கொலையாளிகளை துப்பாக்கியால் சுட்டு பிடித்த காவல்துறை!

சேலம் கிச்சி பாளையத்தைச் சேர்ந்தவர்

பிரபல ரவுடி ஜான் சாணக்யா.
இவர் மீது பிரபல ரவுடிகள் நெப்போலியன் மற்றும் சின்னதுரை கொலை வழக்குகள்,பல்வேறு கொலை கொள்ளை வழிப்பறி ஆகிய வழக்குகள் உள்ளது.
ஒரு வழக்கில் காவல் நிலையத்தில் கையெழுத்து போட வேண்டும் என நிபந்தனை ஜாமின் வழங்கிய

நீதிமன்ற உத்தரவை அடுத்து சேலத்தில் இருந்து ஈரோட்டை நோக்கி தனது மனைவி மனைவி சரண்யா ஆதிரையுடன் காரில் அதாவது ,சேலம்-கோவை நெடுஞ்சாலையில் பெருந்துறை நோக்கி வந்து கொண்டிருந்த போது
நசியனூர் அருகே கார் வந்தபோது பின் தொடர்ந்து வந்த 2 கார்களில் வந்த மர்ம கும்பல் காரை வழிமறித்து கேட்டுக்குள் இருந்த ரவுடி ஜானை சரமாரியாக வெட்டியதில்

ரவுடி ஜான் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்தக் கொலை வெறி தாக்குதலில் அவரது மனைவி ஆதிரை உயிர் தப்பினார்.
ரவுடியில் யார் பெரியவர் என்பதிலும் மற்றும் பழிக்கு பழியாகவும் இந்த கொலை நடந்திருக்கலாம் என்றும் கொலை செய்யப்பட்ட சம்பவம் காவல்துறைக்கு தெரிய வர கொலைகும்பலை பிடிக்க தனிப்படை காவல்துறையினர் ஈரோடு மாவட்டம் முழுவதும்
சித்தோடு காவல் துறையினர் தேடி வந்த நிலையில், சம்பவத்தில் தொடர்புடைய கார்த்திகேயன் என்பவர் நசியனூர் அருகே வெட்டுக் காயங்களுடன் காவல் துறையினரிடம் பிடிபட்டார்.
அவர் அளித்த தகவலின்பேரில் பவானி பச்சப்பாளி என்ற இடத்தில் பதுங்கியிருந்த 3 பேரை பவானி டி.எஸ்.பி.ரத்தினகுமார் தலைமையிலான காவல் துறையினர் பிடிக்க முற்பட்டனர். அப்போது மூவரும் காவல் துறையினரை தாக்கி தப்பி ஓட முயற்சித்தனர். இதையடுத்து, மூவரையும் காவல் துறையினர் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்து விசாரணை நடத்தினர்.
இதில் சேலம் கிச்சிபாளையம் பகுதியை சேர்ந்த

சதீஷ், சரவணன், பூபாலன் எனத் தெரியவந்தது.
காவல் துறையினர் சுட்டதில் காலில் காயமடைந்த 3 பேரும் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதனிடையே, ரவுடிகள் தாக்கியதில் காயமடைந்த

காவல் ஆய்வாளர் ரவி, முதல் நிலை காவலர் லோகநாதன் ஆகிய இருவரும் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்களை கோவை சரக டிஐஜி சசிமோகன் நேரில் சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்தார்.