பாதுகாக்க வேண்டிய அரசு அதிகாரிகள் பனை மரங்களை வெட்டி எடுத்துச் செல்லும் அவல நிலை! மதுரை மாவட்ட ஆட்சியரின் நடவடிக்கை என்ன!?
அழியும் நிலையிலுள்ள அரிய வகை மரமாக பனை மரத்தை அறிவித்து இந்த பனை மரத்தை வெட்டக்கூடாது !வெட்டுவதற்கு தடை விதித்துள்ளது நீதிமன்றம் ! இதற்கான அரசாணை விரைவில் தமிழக அரசு வெளியிட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.தமிழக சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் பனை மரத்தை வெட்டக்கூடாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அப்படி பனை மரம் வெட்ட வேண்டும் என்றால் கலெக்டர் அனுமதி பெற்று தான் வெட்ட வேண்டும்.பனை மரத்தை வெட்டினால் கடுமையான தண்டனை’ -வழங்கப்படும் என்று மதுரை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது. நீதிபதிகள் கூறிய போது இயற்கை வளங்களைப் பாதுகாப்பது தமிழக அரசின் கடமை. மேலும், எதிர்காலச் சந்ததியினரை மனதில் கொண்டு அன்றாட வாழ்க்கைக்கு அதிக அளவில் பயன்படும் பனை களை அதிக அளவில் நட வேண்டியதும் தமிழக அரசின் கடமை” என்று கூறி அதிகப் பனை மரங்களை நட உத்தரவிட்ட தோடு, கூடுதலாகப் பனையை அரிய வகை மரமாக அறிவித்து, அதை வெட்டவும் கூடாதென்று தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த 50 ஆண்டுகளில் அளவுக்கு அதிகமான சேதங்களைச் சந்தித்து விட்டது. கணக்கிட முடியாத அளவுக்கு அழிந்துவிட்டது. இப்போது அழிவின் விளிம்பில் நிற்கிறது.
ஒரு பனை மரத்திலிருந்து ஒரு வருடத்திற்கு பதநீர் 180 லிட்டர், பனை வெல்லம் 25 கிலோ, பனஞ்சீனி 16 கிலோ, தும்பு (மிதியடி பிரஸ் தயாரிக்கப் பயன்படுகிறது) 11.4 கிலோ, ஈக்கு 2.25 கிலோ, விறகு 10 கிலோ, ஓலை 10 கிலோ, நார் 20 கிலோ அளவுக்கு கிடைக்கும் விஞ்ஞானிகள் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் நீதிமன்றம் உத்தரவு அரசு ஆணை சட்ட விதிகள் அனைத்தையும் காற்றில் பறக்கவிட்டு தற்போது பனை மரங்களை வெட்டி சாய்த்து வரும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
அரசு அதிகாரிகளின் பாக்கெட் நிறைய வேண்டும் என்றால் எந்த ஒரு காரியம் செய்யும் முன்பு அதனால் பின் விளைவுகள் பற்றி கவலைப்படாமல் ஈவு இரக்கமின்றி இயற்கை வளங்களை அழிப்பதற்கு தயங்குவதில்லை என்பதுதான் நிதர்சனம். அதுவும் குறிப்பாக நெடுஞ்சாலைத்துறை மற்றும் பொதுப்பணித்துறை பணிகள் நடக்கும்போது அந்தப் பணிகளை மேற்கொள்ளும் அதிகாரிகள் கண் மூடித்தனமாக இயற்கை வளங்களை அழித்து செயல்படுகிறார்கள் .
இதற்கு உதாரணமாக தற்போது
மதுரை நகர் மக்கள் பயன்பாட்டிற்கு சோழவந்தான் அருகே தச்சம்பத்து திரு வேடகம் தேனூர் வழியாக மூன்றாம் கட்டமாக பெரியாறு அணையிலிருந்து குடிநீர் கொண்டு செல்ல சாலையோரம் இராட்சத குழாய்கள் பதிக்கும் பணிகள் தற்போது நடந்து வருகிறது. திரு வேடம் தர்ஹா பகுதியில் சாலையோரம் நின்றிருந்த சுமார் நூறு ஆண்டு பழமையான நூற்றுக்கணக்கான பனை மரங்களை நெடுஞ்சாலைத்துறை வருவாய்த் துறை மாநகராட்சி உள்ளிட்ட அரசு அதிகாரிகளின் ஒத்துழைப்போடு நூற்றுக்கும் மேற்பட்ட பனைமரங்கள் மற்றும் தென்னை மரங்கள் வேம்பு உள்ளிட்ட இயற்கை வளங்களை இயந்திர உதவியோடு கண்மூடித்தனமாக வெட்டி சாய்த்து துண்டு துண்டாக லாரியில் ஏற்றி கடத்திச் சென்றுள்ளனர்.
ஆனால் இதையெல்லாம் மதுரை மாவட்ட நிர்வாகம் கண்ணை மூடிக்கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதாக சமூக அறிவியல் குற்றம் சாட்டுகின்றனர்
மக்களின் தோழனாக நிலத்தடி நீரை பாதுகாக்கும் பனை மரங்களை வெட்ட கூடாது என. தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளநிலையில் அரசு உத்தரவுகளை அரசு அதிகாரிகளே மீறி அதிகார துஷ்பிரயோகம் செய்து வருகின்றனர். இந்த சட்டவிரோத போக்கை தடுத்து நிறுத்த பூனைக்கு யார் மணி கட்டுவது என்ற பழமொழி தான் தற்போது உள்ளது என சமூக ஆர்வலர்கள்
மனக்குமுறலுடன் கேள்வி எழுப்பி உள்ளனர். பனைமரம் பாதுகாப்பு குழுவினர் காலம் தாழ்த்தாமல் உடனடியாக மாவட்ட நிர்வாக அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்க வேண்டும்.
2018-ம் ஆண்டுக் கணக்குப்படி, இந்தியாவில் உள்ள பனைமரங்களின் எண்ணிக்கை 8.59 கோடி. அதில் 5.10 கோடி மரங்கள் தமிழகத்தில்தான் இருப்பதாகச் சொல்கிறது தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம். ஆனால், அதிகமாக வெட்டப் பட்டதால் இப்போது 2.50 கோடியாகக்குறைந்து விட்டதென குற்றஞ்ச் சாட்டுகிறார்கள் சூழலியல் ஆர்வலர்கள்.
தொடர்ந்து வெட்டப் படுவதாலும், அழிவை ஈடுகட்டும் வகையில் வளர்க்கப் படாததாலும், பனையைப்பாதுகாக்க மதுரை உயர்நீதிமன்றம் ஓர் உத்தரவைப் பிறப்பித்துள்ளது. பனை மரத்தை அரிய வகை மரமாக அறிவித்துள்ள மதுரை உயர்நீதிமன்றம், அழியும் நிலையிலுள்ள இந்த மரத்தை வெட்டக் கூடாது என உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.