பிரபல வழிப்பறிக் கொள்ளையன் மற்றும் கஞ்சா விற்ற கும்பலை சுற்றி வளைத்து கைது செய்த பழனி காவல்துறை!அதிரடி காட்டி வரும் பழனி டிஎஸ்பி! பொதுமக்கள் பாராட்டு!
திண்டுக்கல் மாவட்டம் பழனி நகர் மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில் வழிப்பறிக் கொள்ளை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதாக காவல்துறையினருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இதனை அடுத்து பழனி டிஎஸ்பி தன ஜெயன் தலைமையிலான அடிப்படை காவல்துறையினர் சில மாதங்களாக சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வரும் சமூக விரோதிகளை அடையாளம் கண்டு அவர்களை அதிரடியாக கைது செய்து வந்தனர்.
அதைத்தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு முன்பு பழனி மலைக்கோவில் சுற்றி கஞ்சா விற்பனை மற்றும் வழிப்பறி கொள்ளை போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு சமூக விரோதிகள் நடமாட்டம் இருப்பதாக பழனி டிஎஸ்பிக்கு ரகசிய தகவல் வந்ததன் அடிப்படையில் கடந்த சில நாட்களாக பழனி காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் பழனி அடிவாரம் பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக சுற்றி திரிந்த நான்கு பேரை பிடித்து போலீசார் விசாரணை செய்ததில் 1.துரைமுருகன் வேதாரண்யம் 2.மாதேஷ் குமார் பெரியகுளம் 3.ரவி பாரதி மற்றும் கார்த்திக் ராஜா பழனியைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது. மேலும் இவர்களிடம் விசாரணை மேற்கொண்ட போது இந்த கும்பலுக்கு மூளையாக செயல்பட்டு வந்த பழனியைச் சேர்ந்த பிரபல வழிப்பறிக் கொள்ளையன் மற்றும் கஞ்சா வியாபாரியான முகமது பிதா என்பது தெரியவந்தது . உடனே தலைமறைவாக இருந்த முகமது பிதாவை சுற்றி வளைத்து பழனி தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர். முகமது பிதா மீது வழிப்பறிக் கொள்ளை திருட்டு மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் இவன் மீது பல்வேறு வழக்குகள் காவல் நிலையங்களில் உள்ளதும் தெரிய வந்தது. இவர்களிடமிருந்து அரை கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் பழனி துணை காவல் கண்காணிப்பாளர் தெரிவிக்கையில் பழனி உட்கோட்ட காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் நபர்களை அருகிலுள்ள காவல் நிலையத்தில் உடனடியாக பொதுமக்கள் தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டார்.