புகார் அளிக்க வந்தவரிடம் லஞ்சம் கேட்ட பழனி முன்னாள் காவல் உதவி ஆய்வாளர் டிஸ்மிஸ் !.
பழனி முன்னாள் காவல் உதவி ஆய்வாளர் லஞ்சம் கேட்ட வழக்கில் சஸ்பெண்ட் செய்து அதிரடி நடவடிக்கை எடுத்த உள் துறைச் செயலாளர்.
தற்போது சேலம் மாநகர சீரியஸ் க்ரைம் ஸ்குவாடு காவல் ஆய்வாளராக இருந்து வருபவர் கணேசன். இவர் கடந்த 2016-ம் ஆண்டு
திண்டுக்கல் மாவட்டம், பழனி டவுன் காவல் நிலையத்தில் சப்- இன்ஸ்பெக்டராகப் பணியாற்றி வந்தார்.
அப்போது நிலப் பிரச்னை ஒன்றில் அப்போதைய பழனி டவுன் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சண்முக சுந்தரமும், கணேசனும் லஞ்சம் கேட்டதாகக் கூறி புகார் எழுந்தது. மேலும், அது தொடர்பான் வீடியோ காட்சிகளும் பரவத் தொடங்கின.
புகாரளிக்க வந்தவரிடம் லஞ்சம் கேட்டதாகக் கூறப்படும் வழக்கு தொடர்பாக, விசாரணை நடைபெற்று வந்தது.
அவ்வப்போது இது தொடர்பான விசாரணைக்கு ஆய்வாளராக உள்ள கணேசன் ஆஜராகி வந்தார். இந்நிலையில் மேற்கண்ட விசாரணையில் புகார் அளிக்க வந்தவரிடம் லஞ்சம் கேட்டது உண்மை என கண்டறியப்பட்டு, அதற்கான அறிக்கையை
தமிழக உள்துறை செயலாளர் அமுதா அவர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இந்த நிலையில், நேற்று முன்தினம் தமிழ்நாடு உள்துறைச் செயலாளர் அமுதா அவர்கள்
காவலா ஆய்வாளராக உள்ள கணேசனை டிஸ்மிஸ் செய்யக் கூறி உத்தரவு பிறப்பித்திருந்தார். அதனடிப்படையில்
சேலம் மாநகரக் காவல் ஆணையர் விஜயகுமாரி, காவல் ஆய்வாளர் கணேசனை டிஸ்மிஸ் செய்யப்பட்டதற்கான ஆணையை அவரிடம் வழங்கினார்.
2016-ம் ஆண்டு லஞ்சம் கேட்ட வழக்கில் விசாரணை முடிவில், சேலம் சீரியஸ் க்ரைம் ஸ்குவாடு இன்ஸ்பெக்டர் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ள சம்பவம், காவல்துறை வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.