புகார் கொடுத்த ஓய்வு பெற்ற உதவி காவல் ஆய்வாளர் குடும்பத்தை தொலைபேசியில் மிரட்டும் உதவி காவல் ஆய்வாளரின் அதிர்ச்சி ஆடியோ! நடவடிக்கை எடுப்பாரா தென் மண்டல ஐ ஜி!
ஓய்வு பெற்ற காவல் உதவி காவல் ஆய்வாளருக்கு சொந்தமான பூர்வீகமான 10 ஏக்கர் நிலத்தில் உள்ள தென்னந்தோப்பில் சமூக விரோதிகள் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள மரங்களுக்கு தீ வைத்து விட்டு தப்பி ஓட்டம் !!
மதுரை சோழவந்தான் விக்கிரமங்கலம் அருகே உள்ளது முதலைக்குளம் கிராமம் . ஒத்த வீடு பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர்
துரைசிங்கம் (71),
காவல்துறையில் பணியாற்றிய போது அரசிடம் பல மெடல்கள் விருது வாங்கி ஓய்வு பெற்றது குறிப்பிடத் தக்கது. இவர் பிறந்த கிராமத்தில் பூர்வீக நிலத்தில் பத்து ஏக்கரில் தென்னை,முருங்கை எலுமிச்சை மல்லிகை தோட்டம் அமைத்து பராமரித்து விவசாயம் வந்துள்ளார்,
இவரின் தோட்டம் அருகே அதே ஊரை சார்ந்த உறவினர் ராசுக்கு சொந்த தோட்டம் இருக்கிறது,
ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் துரைசிங்கத்தின் சொந்தமான தோட்டத்தில் ஆக்கிரமிப்பு செய்து விவசாயம் செய்து வந்தாக கூறப்படுகிறது, அது சம்மந்தமாக நீதிமன்றம் மூலம் வழக்கும் நடந்து வரும் நிலையில் நிலம் ஆக்கிரமிப்பு அடிக்கடி வாய் தகராறு நடந்து வந்துள்ளது. இதனை ஊர் பெரியவர்கள் பேசி சமாதானம் செய்தும் வந்தனர், இந்த நிலையில் 71 வயதான துரைசிங்கம் நில பிரச்சனை காரணமாக மன அழுத்தத்துடன் இருந்து வந்துள்ளார். வெளிநாட்டில் தன் பிள்ளைகள் வேலை செய்து கொண்டிருப்பதால் , நிலம் ஆக்கிரமிப்பு சம்பந்தமாக அடிக்கடி தகராறு நடப்பதற்கு பயந்து முன்னாள் காவல்துறை எஸ்ஐ துரைசிங்கம் தன் குடும்பத்துடன் மதுரையில் வாழ்ந்து வருகிறார் .இதனை சாதகமாக பயன்படுத்தி நிலத்தை ஆக்கிரமிப்பு செய்த ராசு மற்றும் அவரது குடும்பத்தினர் ஆக்கிரமிப்பு செய்த நிலத்தில் விவசாயம் செய்து வந்துள்ளனர், இந்த நிலையில் கிராமத்தில் ஒய்வு பெற்ற முன்னாள் காவல்துறை எஸ்ஐ துரைசிங்கம் தாயாரின் சமாதியை கோவிலாக கட்டி நினைவு நாளில் அன்னதானமும் வழங்கி வணங்கி வருவது வழக்கம் இந்த நிலையில் கடந்த ஜூலை 30 /07/2023 தேதி தாயார் சமாதியில் வழிபாடு செய்ய தன் கிராமத்தில் உள்ள வீட்டில் இருந்துள்ளனர், அதே கிராமத்தை சேர்ந்த உறவினர் ஒருவர் தோட்டத்தில் தென்னை மரங்கள் தீ பிடித்து எரிவதாக தகவல் தெரிவிக்க ஓடி வந்து தீயை அணைக்க முயற்சி செய்துள்ளனர் அதன் பின்பு விக்கிரமங்கலம் காவல் நிலையத்திற்கு புகார் கொடுக்க வரும் வழியில் மறுபடியும் தீ பிடித்து தென்னை தோப்பு எரிவதாக தகவல் வந்தவுடன் மறுபடியும் தென்னை தோப்பிற்கு சென்று தீயை அணைக்க முயற்சி செய்துள்ளனர். நிலத்தை ஆக்கிரமித்து விவசாயம் செய்து வரும் ராசுவின் மகன் மணிகண்டன் அவனது கூட்டாளிகள் மூன்று பேர் சேர்ந்து தென்னந்தோப்பில் தீ வைத்ததாகவும் துரை சிங்கத்தை ஆயுதத்தை காட்டி மிரட்டியதாக விக்கிரமங்கலம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க, காவல் உதவி ஆய்வாளர் முருகேசன்,போலீசாருடன் நேரில் வந்து விசாரணை நடத்தியுள்ளார், அப்போது அவரது செல்போனில் பேசிய உதவி காவல் ஆய்வாளர் கருப்பையா தென்னந்தோப்பில் தீ வைத்து ஆயுதங்களை வைத்து ராசு மகன் மற்றும் அவரது கூட்டாளிகளான குற்றவாளிகளை விடுவிக்க சொல்லி உள்ளார். அதற்குள் பக்கத்து தோட்டத்தின் ராசு மகன் மணிகண்டன், அவனது கூட்டாளிகள் கருத்தராஜா,இளையராஜா, பிலிப்முருகன் ,ஒன்றாக நான்கு பேரும் சேர்ந்து நாங்கள் தான் தீ வைத்தோம் விசாரித்த காவலர்களிடம் மிரட்டும் தேனியில் பேசி உள்ளனர். உடனே விக்ரமங்கலம் காவல்துறையினர் அவர்களை பிடிக்க முற்பட்டபோது தப்பி ஓடி விட்டதாகவும் துரை சிங்கத்தின் மனைவியிடம் தீ வைத்து விட்டு தப்பி ஓடிய குற்றவாளிகளின் உறவினரான செக்கானூரணி காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணி செய்து வரும் கருப்பையா,
நானும் ரவுடி என்றும் தகாத வார்த்தைகளால் பேசியதும் இல்லாமல் உன் குடும்பத்தையே அழித்து விடுவேன் என்றும் நிலத்தை விட்டு விட்டு எங்காவது தலைமறைவாக ஓடி விடுங்கள் அதை விட்டுவிட்டு காவல் நிலையங்களில் என் மீது புகார் கொடுத்தீர்கள் என்றால் அதன்பின் உங்கள் குடும்பத்தில் யாரும் உயிரோடு இருக்க மாட்டிங்க என போனில் மிரட்டி உள்ளதாகவும், இதனால் பயந்து பாதிக்கப்பட்ட துரை சிங்கம் மனைவியுடன்,காவல் துறையில் தான் நேர்மையாக பணி செய்து ஒய்வு பெற்ற, எனக்கே இந்த நிலைமை என்றால் அப்பாவி மக்கள் நிலை என்னவாகும் என்றார், தோட்டத்தில் தீயில் எரிந்து நாசமான தென்னை மரங்களை எங்கள் பிள்ளைகளை போல வளர்த்தோம் எனக்கூறி கண்ணீர் மல்க தோப்பில் நின்றார்கள், இதனை கண்ட நமக்கு மனம் வருத்தமாக இருந்தது, காவல்துறை உண்மை குற்றவாளிகள் பிடித்து கைது செய்து சிறையில் அடைத்து, நீதிமன்றம் மூலம் உரிய தண்டனை பெற்று தர வேண்டுமென கோரிக்கையாக முன் வைத்தாலும் இனி இது போன்ற தவறுகள் குற்றங்கள் நடைபெறாமல் இருக்க சட்டம் ஒழுங்கை காக்க வேண்டும் என அப்பகுதி கமக்கள் பேசிக் கொண்டனர்,
விக்கிரமங்கலம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் தரப்பில், கூறுகையில் தகவல் கிடைத்தவுடன் விரைந்து சென்று விசாரணை செய்தோம், தீயணைப்பு வாகனம் மூலம் தீயை கட்டுபடுத்தினோம், தென்னந்தோப்பில் தீ வைத்து விட்டு தப்பி ஓடிய குற்றவாளிகள் தென்னந்தோப்பு உரிமையாளரின் உறவினர்கள் என்றும், தென்னந்தோப்பில் ஐம்பது மரங்கள் மின் மோட்டார், தண்ணீர் பைகள் எரிந்து சேதமாகி உள்ளது,அதன் மதிப்பு ஐந்து லட்சம் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளனர். குற்றவாளிகளை விரைந்து கைது செய்து உரிய நடவடிக்கை எடுப்போம் என கூறினார்கள் . எது எப்படியோ ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் தற்போது காவல்துறையில் பணியாற்றி வருபவர் இவர்களுக்கு இடையே நடக்கும் முதல் போக்கை தென்மண்டல ஐ ஜி அக்ஷரா கார்க் நினைத்தால் சுமுகமாக தீர்த்து வைக்க முடியும் என நேர்மையான காவல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் பொறுத்திருந்து பார்ப்போம்.