புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் சொகுசு தனியார் விடுதிகளில் இரவு சட்ட விரோதமாக மது மாது !? கண்டுகொள்ளாத துணை காவல் கண்காணிப்பாளர்!?
ஆங்கிலப் புத்தாண்டையொட்டி சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் பல மாவட்டம் பல மாநிலம் பல நாடுகளில் இருந்து பல லட்சம் பேர் ஆங்கில புத்தாண்டை கொண்டாட சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர்.
ஆனால் புத்தாண்டுக்கு முதல் நாள் இரவு 31/12/2022 அன்று சொகுசு தங்கும் விடுதிகளிலும்
தனியார் சொகுசு பங்களாக்களில் காவல்துறையினர் சோதனை செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு சமூக ஆர்வலர்கள் வைத்துள்ளனர்.
தமிழக முழுவதும் முக்கிய நகரங்களில் புத்தாண்டுக்கு முதல் நாள் 31/12/2022 இரவு காவல்துறையினர் விடிய விடிய சோதனையில் ஈடுபட்டு வந்த நிலையில்
கன்னியாகுமரி காவல் துணை கண்காணிப்பாளர்
DSP ராஜா ஏன் சோதனை நடத்தவில்லை என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
31/12/2022 அன்று இரவு தனியார் தங்கும் விடுதிகள் மற்றும் தனியார் சொகுசு பங்களாக்களில் சட்ட விரோதமாக போலி மதுபானங்கள் அதிக விலைக்கு விற்பனை செய்ததாக தகவல் வந்துள்ளது.
அதுமட்டுமில்லாமல் பல தனியார் சொகுசு பங்களாக்களில் விலை மாதுளை அழைத்து வந்து சட்டவிரோதமாக விபச்சாரம் நடந்ததாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
இதனால் தமிழக காவல்துறைக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர் அது போலி மது விற்பனையால் தமிழக அரசுக்கு பல லட்சம் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.
இதற்கு காரணம்
கன்னியாகுமரி துணை காவல் கண்காணிப்பாளர் ராஜா தான் என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
புத்தாண்டு இரவு கன்னியாகுமரியில் சட்டவிரோதமாக நடந்ததாக சொல்லப்படும் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்து இதுபோன்று சட்ட விரோதமான செயல்கள் நடந்திருப்பது தெரிய வந்தால் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மீது காவல்துறை உயர் அதிகாரிகள் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.