பூட்டி இருந்த வீட்டில் பல லட்சம் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்து தப்பிச்சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்! தட்டி தூக்கிய உதகை உட்கோட்ட தனிப்படை காவல்துறை!
![](https://reportervisionnews.com/wp-content/uploads/2024/12/WhatsApp-Image-2024-12-24-at-16.50.26_4d68a51e-780x470.jpg)
நீலகிரி மாவட்டம் உதகை உட்கோட்ட புதுமந்து காவல் எல்லைக்குட்பட்ட கௌடா சோலை என்ற பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருபவர் பழனிச்சாமி என்ற செல்வம். இவர் தன் மனைவியுடன் கடந்த 19ஆம் தேதி புதன்கிழமை கோவிலுக்கு சென்று மாலை வீட்டிற்கு வந்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த நகை பணம் ஆகியவற்றை யாரோ மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்து உடனே செல்வம் புதுமந்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரி அடிப்படையில் குற்ற எண் 93/2024. பிரிவு 333/3 மற்றும் 305 BNS தண்டனைச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
![](https://reportervisionnews.com/wp-content/uploads/2024/12/WhatsApp-Image-2024-12-24-at-16.59.25_56cb0d8c-768x1024.jpg)
இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்களை பிடிக்க நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா ஐபிஎஸ் அறிவுறுத்தலின்படி உதகை உட்கோட்ட துணைக் காவல் கானிப்பாளர் நவீன்குமார் மேற்பார்வையில் புது மந்து காவல் நிலைய பொறுப்பு காவல் ஆய்வாளர் நித்யா தலைமையில் நான்கு தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடிவந்தனர்.இந்த நிலையில் கொள்ளையடிக்கப்பட்ட வீட்டின் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. கொள்ளையடிக்கப்பட்ட வீட்டில் கைரேகைகளை பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த தனிப்படை காவல்துறையினர் புலன் விசாரணை மேற்கொண்ட போது செல்வம் வீட்டிற்கு 15 தினங்களுக்கு முன்பு தோட்ட வேலைக்கு வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தான் வீட்டில் இருந்த நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர் என தனிப்படை காவல்துறையினருக்கு தெரிய வந்த நிலையில் வகைகளை கொள்ளையடித்துச் சென்ற நான்கு பேரையும் காவல்துறையினர் சுற்றி வளைத்து கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் சதீஷ் மாநிலத்தைச் சேர்ந்த அபய் போர்த்தி(19) ,ஈஸ்வரிசிங் கார்டு(43),ஆணிதா பாய், (38 )அங்கித் சிங் (18)என்றும் அவர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது. இவர்களிடம் கொள்ளையடிக்கப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை தனிப்படை காவல்துறையினர் பறிமுதல் செய்து இவர்கள் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். வீட்டில் நகை கொள்ளை அடிக்கப்பட்டு மூன்று நாட்களில் துரிதமாக செயல்பட்டு நகைகளை கொள்ளை அடித்து தப்பி சென்றவர்களை கண்டுபிடித்து கைது செய்த உதகை உட்கோட்ட தனிப்படை காவல்துறையினரை நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெகுவாக பாராட்டினார்!