பெண்களின் ஆபாச புகைப்படத்தை வாட்ஸ்அப்பில் அனுப்பி கோவையில் ஹைடெக் விபச்சாரம் செய்து 15 சொகுசு காரில் உல்லாசமாக வலம் வந்து சொகுசு பங்களாவில் ஆடம்பரமாக இருந்த மாபியா கும்பலை சுற்றி வளைத்த கோவை தனிப்படை காவல்துறை! தலைமறைவான மாபியா கும்பல் தலைவன் ! அரசு உயர் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு தொடர்பா?
வெளிநாட்டு பெண்களை வாட்ஸ்அப்பில் அனுப்பி கோவையில் ஹைடெக் விபச்சாரம் செய்து 15 சொகுசு காரில் உல்லாசமாக வலம் வந்த மாபியா க கும்பல்! தலைமறைவான தலைவன் டெல்லியில் பதுங்கல்! அரசு உயர் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு தொடர்பா?
தமிழகத்தில் ஹைடெக் விபச்சார தலைவன் சிக்கந்தர் பாதுஷா கோவையின் விரிவாக்க பகுதியில் வாடகைக்கு சொகுசு பங்களா எடுத்து கூட்டாளியுடன் தங்கியிருந்த போது கோவை தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர், 15 சொகுசு கார்கள் பறிமுதல் செய்துள்ளனர். வெளிநாட்டு இளம் பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தி சட்டவிரோதமான செயலில் லட்சம், லட்சமாக சம்பாதித்த பணத்தில், கார்,பங்களா,என சொகுசு வாழ்க்கையுடன், பெங்களூரில் பெரிய பிரியாணி ஹோட்டல் ஒன்றை நடத்தி வரும் சிக்கந்தர் பாதுஷா, மீது கோவை, துடியலூர், சரவணம்பட்டி பீளமேடு, ஆர்.எஸ்புரம். வடவள்ளி,காட்டூர்.சாய்பாபா காலனி, பேரூர், சூலூர்,காவல் நிலையத்திலும் மற்றும் சென்னை ஈரோடு, ஊட்டி, திருப்பூர்,தேனி,மதுரை திண்டுக்கல் உள்ளிட்ட பிற மாவட்டங்களில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் விபச்சாரத்தில் ஈடுபட்டது தொடர்பாக 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு போலீசார் தேடி வந்தனர், இந்த நிலையில் கடந்த நான்கு வருடங்களாக தலைமறைவாகி இருந்த சிக்கந்தர் பாதுஷாவை, விபச்சார புரோக்கர்கள்,வாடிக்கையாளர்கள், ஏஜென்டுகள், இவரை சி.கே என்றே செல்லமாக அழைப்பார்களாம், அந்த அளவுக்கு பேமஸ் , மேலும் இந்த விபச்சார கும்பலை கைது செய்து பிடிக்க கோவை போலீஸ் சிட்டி கமிஷனர் V.பாலகிருஷ்ணன் உத்தரவுப்படி , வடக்கு காவல் துணை ஆணையாளர் டாக்டர் R.ஸ்டாலின் தலைமையில், சார்பு ஆய்வாளர்கள்.கார்த்திக், செல்லமணி மற்றும்15 காவலர்கள் கொண்ட நான்கு தனிப்படையினரை நியமித்து தேடி வந்தனர். இதில் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியும் தமிழகத்தில் ஹைடெக் விபச்சார தலைவன் ஆக வலம் வந்த சிக்கந்தர் பாதுஷா இருப்பிடம், தனிப்படையினருக்கு ரகசியமாக தகவல் கிடைக்கிறது, அதன் அடிப்படையில் அங்கே சென்ற போலீசார் அங்கே உள்ள சொகுசு பங்களாக்களை நோட்டமிட்டனர், எப்போதும் கார்கள் வந்து செல்லும் குறிப்பிட்ட சொகுசு வீட்டின் உள்ளே சென்ற பார்த்ததில் பதினைந்துக்கும் மேற்பட்ட வெளி நாட்டு இளம் பெண்களுடன் அரைகுறை ஆடையில் இருப்பதை கண்ட தனிப்படை போலீசார் அவர்களிடம் விசாரணை செய்து இருக்கையில் திடீரென ஒருவர் காரில் ஏறி தப்பி செல்ல முயன்ற போது போலீஸ்காரர்கள் சுற்றி வளைத்து பிடித்தனர், அது சிக்கந்தர் பாதுஷா என தெரிந்தது, பிறகு அங்கு இருந்த இளம் பெண்களை மீட்டு உரிய நடவடிக்கை எடுத்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்
பிடிக்க பட்ட ஹைடெக் விபச்சார புரோக்கர் சிக்கந்தர் பாதுஷா மீது பதிவு செய்த பல்வேறு விபச்சார குற்ற வழக்குகளில் இன்னமும் கைது செய்யப்படாமல் இருப்பதும் மேலும் . ஜாமீனில் வெளி வர முடியாத பிடிவாரண்டுகளும் பிறப்பிக்கப்பட்டு அதுவும் நிலுவையில் உள்ளது என போலீசார் கூறினர். மேலும் போலீசார் துரிதமாக விசாரனை செய்ததில், சிக்கந்தர் பாட்ஷா கடந்த 2008 முதல் 2013 வரையில் திண்டுக்கல் நகரில் பிரபல பிரியாணிக்கு எதிரே உள்ள கட்டிடத்தில் சொந்தமாக செல்போன் கடை நடத்தி வந்துள்ளதும் ,அதில் ரூபாய் 55 லட்சம் வரை தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாகவும்,அதனால் கடன் தொல்லையால் அவதிபட்டு இருந்தாகவும், அங்கே அந்த சமயத்தில் ஆம்புலன்ஸ் டிரைவராக வேலை செய்த இவரது நண்பர் அசோக் மூலம் எஸ்.கே. என்ற ஷேக் அப்துல் காதர் அறிமுகமாகியுள்ளது என தெரிகிறது. ஷேக் அப்துல் காதர் மீது பல மோசடி குற்றங்களில் ஈடுபட்டு , வழக்குகள் நிலுவையில் உள்ளது ,அவரிடம் சிக்கந்தர் பாதுஷா உதவியாளராக சேர்ந்து , வேலை செய்து வருகையில் ,ஷேக் அப்துல் காதருக்கு , ஈரோட்டில் விபச்சார தொழில் செய்து வந்த கண்ணனிடம் , சிக்கந்தர் பாதுஷா அறிமுகப்படுத்தி அவனுக்கு விபச்சார தொழிலை சுற்றுக் கொள்ளும்படி கூறியதை அடுத்து ஈரோடு கண்ணனிடம் வேலை செய்து கொண்டே விபச்சார தொழில் பல உத்திகளைக் கற்றுக்கொண்டு பின்னர் தனியாக 2015 ஆண்டு முதல் விபச்சார புரோக்கர் தொழிலை ஆரம்பித்து, அதில் படிப்படியாக வளர்ந்து பின் சொகுசாக உயர்ந்து வந்துள்ளார்
இதன் பின் விபச்சார தொழிலை விரிவுபடுத்தி பணம் சம்பாதிக்க, உல்லாச வாழ்க்கை வாழ ஆசை பட்டு, ஹைடெக் விபச்சாரத்தை கவனிக்க தனக்கு உதவியாக மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த சிவா, டேனியல், ஊட்டியைச் சேர்ந்த யுவராஜ், கன்னியாகுமரியை சேர்ந்த ஸ்டீபன்ராஜ், ஸ்ரீகாந்த் என்ற சாண்டி, திருச்சியைச் சேர்ந்த அசார்,மற்றும் தர்மபுரியைச் சேர்ந்த கோபி ஆகியோரை தனது விபச்சார தொழில் மேலாளர்களாக நியமித்து அவர்கள் மூலம் வாடிக்கையாளர்களுக்கென வாட்ஸ்அப் குழு ஆரம்பித்து அதன் மூலம் இளம் பெண்களை காட்டி விபச்சாரம் செய்து வந்தது போலீசார் விசாரணையில் தெரிகிறது, தமிழகத்திலும் ,பிற மாநிலத்திலும்,வெளிநாட்டிலும் இளம்பெண்களிடம், பணத்தாசையும்,இனிக்க வார்த்தைகள் பேசியும், விபச்சார தொழிலில் ஈடுபடுத்துவதற்கென All India Agent Group என்ற பெயரில் டெல்லியை சேர்ந்த கேங்லீடராக உள்ள கபீர் சிங், தலைமையில் சுமார் 117க்கும் மேற்பட்ட ஏஜென்டுகள் அடங்கிய வாட்ஸ்அப் குழு இந்திய அளவில் செயல்பட்டு வருவது தனிப்படை போலீசார் விசாரணையில் தெரியவருகிறது. இந்த வாட்ஸ்அப் குழுவில் இந்தோனேஷியா, ரஷ்யா,தாய்லாந்து, போன்ற பல்வேறு நாடுகளில் வசிக்கும் ஏஜென்டுகளும் உள்ளனர், மேலும் தமிழகத்தை சேர்ந்த ஹைடெக் தலைவர் சிக்கந்தர் பாதுஷா இந்தியா முழுவதும் மாநிலம் வாரியாக ஏஜெண்டுகள் மூலம் உள்நாட்டு இளம் பெண்கள், வெளிநாட்டு இளம்பெண்களை வைத்து விபச்சாரத்தில் ஈடுபடுத்துவதற்கு மூளையாக செயல்பட்டு இதில் கோடி கோடியாய் பணம் சம்பாதித்து வருவதை போலீசார் கண்டுபிடித்தனர். தொடர்ந்து போலீசார் விசாரிக்கையில் சிக்கந்தர் பாதுஷா பெயரில் உள்ள ஐந்து வங்கி கணக்குகளையும், இவரது ஏஜென்டுகளது பெயரில் உள்ள வங்கி கணக்குகளையும் முடக்கி,அதற்கான சட்டபூர்வ நடவடிக்கைகள் செய்து வருகிறோம் என்றது போலீஸார்
நிழல் உலக தாதா போல தலைமறைவாகவே இருந்து கொண்டு அதிகாரிகள் முதல் அரசியல் வாதிகள் வரை கொடுப்பதை கொடுத்து கவனித்து கொண்டு ராஜாவாக வலம் வந்த ஹைடெக் தலைவன் சிக்கந்தர் பாதுஷா வின் நடவடிக்கைகளையும், அவனது வாட்ஸ்அப், பேஸ் புக், இன்ஸ்டாகிராம், போன்ற தகவல் பரிமாற்றங்களையும் கடந்த 4 மாதங்களாக பின் தொடர்ந்து,அவன் தங்கி இருந்த பல இடங்களை நோட்டம் செய்து அதன் பின் தங்கி இருந்த இடத்தில் தப்பிக்கும் போது சுற்றி வளைத்த தனிப்படை போலீசார் உடன் இருந்த கூட்டாளியையும் கைது செய்தனர் ,அப்போது அங்கே இருந்த சொகுசு கார் ஒன்று, பதினைந்து விலை உயர்ந்த செல்போன்கள், இருபது சிம்கார்டுகள், மற்றும் பல லட்சம் பணத்தையும் பறிமுதல் செய்த தனிப்படை போலீசார் வழக்கு பதிவு செய்து நீதிமனறத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர், தொடர்ந்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர் ,மேலும் இந்த புலன் விசாரணை அதிகாரிகளுக்கு உதவிகரமாக செயல்பட்ட சார்பு ஆய்வாளர்கள் , தனிப்படை காவலர்களை , கோவை சிட்டி போலீஸ் கமிஷனர் , வடக்கு போலீஸ் துணை கமிஷனர் உள்ளிட்ட அதிகாரிகள் வெகுவாக பாராட்டினார்கள். மேலும் வடக்கு துணை கமிஷனர் ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறுகையில் கோவை பகுதிகளில் உள்ள ஸ்பா என்ற பெயரில் மஜாஜ் சென்டர், நட்சத்திர ஓட்டல்கள், விடுதிகள், சொகுசு பங்களாக்களை ரகசியமாக கண்காணித்து வருகிறோம், இதில் ஏதாவது தவறான செயல்கள் நடந்தால் கண்டிப்பாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார், அது சரி கொஞ்சமாவது கோவை சுத்தமாகட்டும்