பெண்கள் கல்லூரி விடுதியில் சுடிதார் அணிந்து இரவு நேரத்தில் சுவர் ஏறி குதித்து மாணவி களுக்கு தொல்லை கொடுக்கும் ஆசாமிகள் !வெள்ளை அறிக்கை கேட்ட அகில இந்திய மாணவர் கழகம் மாணவர்கள் மீது வழக்கு!
மகளிர் கல்லூரி விடுதியில் சுடிதார் அணிந்து இரவு நேரத்தில் சுவர் ஏறி குதித்து மாணவிகளுக்கு தொல்லை! விசாரணை நடத்தி வெள்ளை அறிக்கை வேண்டும் என கோரிக்கை விடுத்த அகில இந்திய மாணவர் கழகம்
(AISA ) நிர்வாகிகளை கைது செய்த திருப்பாலை காவல்துறை !
மதுரை யாதவா பெண்கள் கல்லூரி விடுதியில் பெண்கள் பாதுகாப்பு பிரச்சனை குறித்து வெள்ளையறிக்கை வெளியிட கோரி அகில இந்திய மாணவர் கழகம் (AISA) சுவரொட்டி ஒட்டியவர்களைக் கைது செய்வதாக மிரட்டி, காவல்நிலையம் அழைத்துச் சென்ற திருப்பாலை ஆய்வாளர் எஸ்தர் மீது நடவடிக்கை எடுக்குமாறு அகில இந்திய மாணவர் கழகம் கண்டனம் தெரிவித்துள்ளது.அகில இந்திய மாணவர் கழகம் (AISA) மதுரை மாவட்டம்
94868 24491, 93605 34813
மதுரை திருப்பாலையில் (அரசு நிதி உதவி பெறும்) யாதவா மகளிர் கல்லூரி விடுதியில் சுடிதார் அணிந்து சுவர் ஏறி குதித்து மாணவிகளுக்கு தொல்லை ஏற்படுத்திய நபரை போலீசார் கைது செய்தனர். சிசிடிவி காட்சியின் அடிப்படையில் விடுதிக்குள் புகுந்த நபரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
மதுரை திருப்பாலை பகுதியில் உள்ள அரசு உதவிபெறும் யாதவா (தன்னாட்சி) மகளிர் கல்லூரி செயல்பட்டுவருகிறது. இங்கு மதுரை மட்டுமின்றி ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவிகள் படித்து வருகின்றனர்.
சுடிதார் ஆசாமி தொல்லை:
இங்கு மாணவிகள் தங்குவதற்கான விடுதியும் செயல்பட்டுவருகிறது. இந்நிலையில் கடந்த 20ஆம் தேதியன்று இரவு கைலியுடன் மர்ம நபர் ஒருவர் விடுதியில் காம்பவுண்ட் சுவரில் ஏறிக்குதித்து விடுதிக்குள் சுடிதாரை அணிந்தவாறு மர்ம நபர் ஒருவர் நடமாடுவதாகவும், அவர் தனியாக இருக்கும் மாணவிகளுக்கு பல்வேறு தொல்லை தருவதாகவும் மாணவிகள் கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளனர்.
ஆனாலும் கல்லூரி நிர்வாகம் மகளிர் விடுதியில் ஆட்கள் நடமாட்டம் குறித்த மாணவிகளின் புகார் குறித்து கண்டுகொள்ளவில்லை என கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து மாணவிகள் புகார் அளிக்க கூடாது என ரகசியமாக மாணவிகளிடம் சொல்லியதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து சமூகவலைதளங்கள் மாணவிகள் இச்சம்பவம் குறித்து பகிர தொடங்கியதையடுத்து கல்லூரி நிர்வாகம் வேறு வழியின்றி விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது விடுதியின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, மாணவிகளிடமும் விசாரணை நடத்தியுள்ளனர்.
கூகுள் செய்திகள் பக்கத்தில் Samayam Tamil இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள்.. உடனுக்குடன் செய்திகளை பெறுங்கள்.
போலீசில் சிக்கியது எப்படி?
இதனையடுத்து கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் திருப்பாலை காவல்நிலையத்தில் புகார் அளித்த நிலையில் மர்ம நபர் வந்தபோது இருந்த மாணவியிடம் விசாரணை நடத்தினர் தொடர்நது விடுதி வளாகத்தில் வைக்கப்பட்ட மற்றும் விடுதிக்கு வெளியில் காம்பவுண்ட் சுவரை ஒட்டி வைக்கப்பட்ட சிசிடிவி காட்சிகளையும் கைப்பற்றி கடந்த 2 நாட்களாக தீவிர விசாரணை நடத்தினர்.
சிசிடிவி காட்சியில் பதிவான நபரின் உருவத்தை வைத்து அந்த பகுதியில் காவல்துறையினர் பல்வேறு பொதுமக்களிடமும் விசாரணை நடத்தி தேடிவந்தனர். இதனை தொடர்ந்து சிசிடிவி காட்சியின் அடிப்படையில் மகளிர் கல்லூரி விடுதிக்குள் புகுந்த நபரான மதுரை கண்ணனேந்தல் பகுதியை சேர்ந்த அழகர் பாண்டி (32) என்ற நபரை என்பதும் இவனுக்கு திருமணமாகி மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் வசித்து வருவதும் தெரியவந்துள்ளது.
இதனை தொடர்ந்து அழகர்பாண்டியை நேற்று கைது செய்த திருப்பாலை காவல்துறையினர் நடத்திய விசாரணையின் போது தான் மதுபோதையில் இருந்ததால் கைலியுடன் இரவில் சுவர் ஏறி குதித்தாகவும், இதையடுத்து விடுதியில் வெளியில் கொடியில் காய்ந்துகொண்டிருந்த சுடிதாரை எடுத்து அதனை அணிந்துகொண்டு ஒரு மாணவி தனியாக இருந்த அறைக்குள் சென்றதாகவும் தெரிவித்துள்ளார். இதனை பார்த்து அந்த மாணவி கூச்சலிட்டு அருகில் ஒடிச்சென்று அடுத்தடுத்த அறைகளின் கதவை தட்டியதால் தான் தப்பி சென்றதாகவும் தெரிவித்துள்ளான்.
மதுரையே சும்மா அதிரப்போகுது! 340 கோடியில்.. நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றிய தமிழக முதலமைச்சர்!
இதனையடுத்து கைது செய்யப்பட்ட அழகர்பாண்டியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையே கல்லூரி விடுதிக்குள் நுழைந்து மாணவிகளுக்கு தொல்லை கொடுத்த நபரை கைது செய்ய கோரியும், பாதிக்கப்பட்ட மாணவிக்கு உரிய தீர்வு கிடைக்க வேண்டியும் கல்லூரியில் மாணவிகள் மதிய வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
அப்போது மாணவிகள் கல்லூரி நுழைவாயில் முன்பாக போராட்டத்தில் ஈடுபடுவதற்காக வந்தபோது அங்கிருந்த பேராசிரியர்கள் மற்றும் கல்லூரி நிர்வாகத்தினர் மாணவிகளை கல்லூரிக்குள் செல்லுமாறு விரட்டினர்.
இந்த விவகாரத்தில் தொடர்ச்சியாக மாணவிகள் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக சமூகவலைதளங்களில் தகவல்கள் பரவியதன் காரணமாக விடுதி மாணவிகளுக்கு வரும் 31ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படும் என கல்லூரி நிர்வாகத்தின் ரகசிய உத்தரவையடுத்து விடுதி மாணவிகளை பெற்றோர்கள் அவர்களது வீடுகளுக்கு நேற்று அழைத்துச்சென்றனர்.
மதுரையிலுள்ள யாதவா மகளிர் கல்லூரி விடுதியில் நுழைந்து மாணவிக்கு தொல்லை அளித்த விவகாரத்தில் எந்தவித அழுத்தமும் இன்றி வெளிப்படையான விசாரணையை நடத்த வேண்டும் என மாணவிகளும், மாணவர் சங்கத்தினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த விவகாரத்தின் எதிரொலியாக யாதவா மகளிர் கல்லூரி விடுதியில் பாதுகாப்பு பணிகளை தீவிரப்படுத்தி யுள்ளதோடு, சிசிடிவி கேமிராக்களை அதிகரித்து, பாதுகாவலர்களை நியமிக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது.
இது போன்ற நிகழ்வு நடைபெற்றதால் தென் மாவட்ட மக்களின் நம்பிக்கையை பெற்ற யாதவா மகளிர் கல்லூரியில் படித்து பல்வேறு பெண் அரசு ஊழியர்களையும், அதிகாரிகளையும் , பெண் சாதனையாளர்களும் உருவாக்கப்பட்ட நிலையில் கல்லூரி நிர்வாகம் மாணவிகளுக்கான பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்துள்ளது.