காவல் செய்திகள்

பெண்ணை கற்பழித்து கொலை செய்த ஐந்து பேர் மீது மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து கொலை செய்ய முயற்சி !? அதிர்ச்சி தகவல்

ஜேடர்பாளையம் அருகே ஆடு மேய்க்க சென்ற 21 வயது பெண் கற்பழித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் காவல் துறை 17 வயது சிறுவனை கைது செய்ய ஐந்து லட்சம் ரூபாய் கொடுத்ததாக அதிர்ச்சி தகவல்! அந்த சிறுவனின் சொந்த ஊர் ஊட்டி என்றும் அவர்கள் பெற்றோர்கள் வெள்ளம் ஆலையில் வேலை செய்ததால் பெற்றவுடன் தங்கி வேலை பார்த்து வந்தவர் என்றும் தகவல் தெரிவித்தனர்.


பெண்ணை கற்பழித்துக் கொலை செய்த வெல்லம் தயாரிக்கும் ஆலையில் வேலை வட மாநில தொழிலாளர்களை காப்பாற்ற 17 வயது சிறுவனை காவல்துறை கைது செய்ய சிறுவனின் பெற்றோர்களிடம் வெள்ளம் தயாரிக்கும் ஆலய உரிமையாளர் ஐந்து லட்சம் கொடுத்ததாக அதிர்ச்சி தகவல்!
பெண்ணை கற்பழித்து கொலை செய்த வெளி மாநில நபர்கள் யார்!? தூங்கிக் கொண்டிருந்த ஐந்து பேர் மீது மன்னனை ஊற்றி எரித்தது யார்!?
காவல்துறை நேர்மையான விசாரணை நடத்துமா!?
மார்ச் மாதம் 12 ஆம் தேதி நாமக்கல் மாவட்டம், கரப்பாளையத்தைச் சேர்ந்த விவேகானந்தன் மனைவி நித்யா, 28, விவசாயி. கால்நடைகளை வளர்த்து வருகிறார். நேற்று மதியம், ஆடுகளை மேய்க்க பக்கத்தில் உள்ள ஓடை பகுதிக்கு சென்றார்….மாலை, 6:00 மணிக்கு ஆடுகள் மட்டுமே வீட்டுக்கு தானாக திரும்பி வந்தன. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள்.நித்யாவை தேடி சென்ற போது அங்குள்ள ஓடையில் அரை நிர்வாண கோலத்தில் இறந்துக் கிடந்தார். மேலும், அவர் அணிந்திருந்த செயின் மற்றும் காதில் அணிந்திருந்த தங்கத்தோடு காணவில்லை. அவரது .உடம்பில் பல்வேறு இடங்களில் காயங்கள் இருந்தன. ஆடுமேய்க்க சென்ற நித்யா கற்பழித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக ஜேடர்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில். பகுதியில் உள்ள எம்ஜிஆர் என்ற முத்துச்சாமிக்கு சொந்தமான வெள்ளம் காய்ச்சும் ஆலையில் பணி செய்த வெளி மாநிலத்தைச் சேர்ந்த ஐந்து பேர் தான் இந்த பெண்ணை கற்பழித்து கொலை செய்துள்ளனர் என்று பெண்ணின் உறவினர்கள் காவல்துறையில் கூறியது குறிப்பிடத்தக்கது. ஆனால் குற்றம் சாட்டப்பட்ட எம்ஜிஆர் என்ற முத்துச்சாமி சர்க்கரை ஆலை உரிமையாளர் அன்று இரவே ஆலையில் வேலை பார்த்த வெளி மாநில நபர் ஐந்து பேரை அவர்கள் ஊருக்கு அனுப்பி விட்டதாகவும் அப்போது தகவல் வெளிவந்தது. அதன் பின்பு ஊர் பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து அங்குள்ள வெள்ளம் தயாரிக்கும் ஆலையை தாக்கியுள்ளனர் அதன் பின்பு காவல்துறையினர் கணவர் அளித்த புகாரின் பேரில் 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தது குறிப்பிடத்தக்கது. இறந்த பெண்ணின் உறவினர்கள் குற்றம் எம்ஜிஆர் என்ற முத்துச்சாமி மீது எந்த வழக்கு பதிவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் சம்பந்தமே இல்லாமல் 17 வயது சிறுவனை காவல்துறையினர் கைது செய்து கண்துடைப்பு நாடகம் என்று பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் மற்றும் அப்பகுதி கிராம பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர்.

17 வயது சிறுவனை கைது செய்ய சிறுவனின் பெற்றோர்களுக்கு 5 லட்சம் ரூபாய் வரை வெள்ளம் ஆலை உரிமையாளர் கொடுத்ததாக அதிர்ச்சி தகவல் வெளிவந்தது. ஆனால் அதை எல்லாம் காவல்துறையினர் மறுத்துவிட்டனர்.

15/03/2023 அன்று ஜேடர்பாளையம் அருகே சரளைமேடு பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 70). இவர் தனக்கு சொந்தமான இடத்தில் வெல்லம் தயாரிக்கும் ஆலை கொட்டகை மற்றும் அங்கு பணிபுரியும் வட மாநில தொழிலாளர்கள் தங்கி வேலை செய்வதற்காக குடிசை வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன. மாலை வட மாநில தொழிலாளர்களின் குடிசை வீடுகள் மற்றும் ஆலை கொட்டகை திடீரென தீப்பிடித்து எரிந்தது.

தகவல் அறிந்து அங்கு வந்த கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினர் தீ மேலும் பரவாமல் தடுத்தனர். இருப்பினும் அங்கிருந்த 8 குடிசை வீடுகளும் முற்றிலும் எரிந்து சாம்பலானது. மேலும் தகவல் அறிந்து அங்கு வந்த சேலம் மண்டல டி.ஐ.ஜி. ராஜேஸ்வரி மற்றும் நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.

அப்போது வெல்ல ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தனர். மேலும் அங்கு போலீசார் குடிசைகளுக்கு தீ வைத்த மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வந்த நிலையில்
தற்போது அதே ஜேடர்பாளையம் சரளைக்காடு எம்.ஜி.ஆர். என்ற முத்துசாமி. வெள்ளம் தயாரிக்கும் ஆலையில் 14 ஆம் தேதி அதிகாலை வடமாநில தொழிலாளர்கள் தங்கி வேலை செய்து நிலையில் இரவு வேலை முடிந்து வடமாநில தொழிலாளர்கள் கொட்டகையில் தூங்கிக்கொண்டிருந்த போது நள்ளிரவில் அந்த பகுதிக்கு வந்த மர்மநபர்கள் சிலர் சிமெண்டு அட்டையை உடைத்தனர்.பின்னர் அதன் வழியாக தாங்கள் கொண்டு வந்த பாட்டிலில் இருந்த மண்எண்ணெயை அங்கு தூங்கிக்கொண்டிருந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ரோகி என்ற ராகேஷ் (வயது 19), சத்தீஷ்கார் மாநிலத்தை சேர்ந்த சுகிராம் (20), யஸ்வந்த் (19) மற்றும் கோகுல் (24) ஆகிய 4 பேர் மீது ஊற்றி தீ வைத்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.இதில் படுகாயம் அடைந்த 4 பேரும் ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் ஒருவருக்கு 80 சதவீதக்கு மேல் தீ காயம் ஏற்பட்டுள்ளதால் உயிருக்கு ஆபத்தான நிலையில் இரண்டு பேர் இறந்து விட்டதாகவும் மீதமுள்ள தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்ற தகவல் வந்துள்ளது.இந்த சம்பவம் குறித்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மர்மநபர்களை பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.இதனிடையே நேற்று இரவு தமிழக கூடுதல் டி.ஜி.பி. சங்கர் ஜேடர்பாளையத்திற்கு வந்தார். அவர், வடமாநில தொழிலாளர்கள் மீது மண்எண்ணெயை ஊற்றி தீ வைக்கப்பட்ட சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்து விசாரணை நடத்தினார். தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-ஜேடர்பாளையம் பகுதியில் இனி அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும். அப்பகுதியில் உரிய பாதுகாப்பு வழங்கப்படும். இருதரப்பு மக்களும் தங்களது கோரிக்கைகளை தெரிவித்துள்ளனர். அதுகுறித்து உரிய விசாரணை நடத்தப்படும். தீ வைப்பு சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.அதனைத்தொடர்ந்து ஜேடர்பாளையம் போலீஸ் நிலையத்தில் கூடுதல் டி.ஜி.பி. சங்கர், நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங், மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர், கோவை சரக டி.ஐ.ஜி. விஜயகுமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் கலைச்செல்வன் (நாமக்கல்), சசி மோகன் (ஈரோடு) ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.இந்தநிலையில் தனிப்படையினர் சந்தேகத்தின்பேரில் 5-க்கும் மேற்பட்டோரை பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் அவர்கள் பல்வேறு திடுக்கிடும் தகவல்களை போலீசாரிடம் கூறியுள்ளனர். இதை அடுத்து தீ வைப்பு சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய நபர்களை பிடிக்க போலீசார் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Articles

Back to top button