பேரிடர் காலத்தில் ஆதிதிராவிடர்கள் தங்கும் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள அரசு கட்டிடத்தை மனநல காப்பகம் நடத்தும் தனியாருக்கு தாரை வார்த்த சீர்காழி திட்டை ஊராட்சி!புகார் கொடுத்தும் மீட்க எந்தவித நடவடிக்கை எடுக்காத மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியாளர்!?
சுனாமி அரக்கனிடமிருந்து மீண்டாலும் பணம் படைத்தவர்கள் இருந்து மீளாத சாமானியர்கள்.
பேரிடர் காலத்தில் தங்க வைக்கும் அரசு கட்டிடத்தை தனியாருக்கு தாரை வார்த்த சீர்காழி தாலுகா திட்டை ஊராட்சி மன்றம்.
டிசம்பர் 26, மறக்கமுடியாத சுனாமி நினைவு தினம்!
2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் திகதி ‘சுனாமி டி’யாக வந்த இயற்கை அனர்த்தம் அழிக்கமுடியாத கரைபடிந்த சுவட்டினைப் பதித்து விட்டது.
சென்னை, கன்னியாகுமரி, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி மாவட்டங்கள். இதேபோல், கடலூர், பாண்டிச்சேரி எனச் சென்னை முதல் குமரி வரை கடலோரத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களையும் சூறையாடிச் சென்றது. தமிழகத்தில் மட்டும் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். நாகப்பட்டினத்தில் மட்டும் 6 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
சுனாமி பாதிப்பு ஏற்பட்டு 15 ஆண்டுகள் கடந்துவிட்டன. மக்கள் மனதில் வடு இன்னும் மறையவில்லை. சுனாமியின் பாதிப்பை நினைக்கும் போதெல்லாம் ஒருவித பதற்றத்தைக் கொடுத்துவிட்டுச் செல்கின்றன நினைவுகள்.
மயிலாடுதுறை மாவட்டம் முன்னால் (நாகப்பட்டினம் ஒருங்கிணைந்த மாவட்டமாக இருந்தபோது) சீர்காழி தாலுகாவில் திட்டை ஊராட்சியில்
கடந்த சுனாமியின் இயற்கை பேரிடர் காலத்தில் தமிழக அரசால் அப்போதைய மதிப்பு சுமார் 30 லட்சம் ரூபாய் மதிப்பில் (தற்போது ஒரு கோடி)கட்டிடம் கட்டித் தரப்பட்டது.
பேரிடர் காலத்தில் பாதிக்கப் பட்ட ஆதி திராவிடர்கள் மக்கள் பயன்படுத்த கட்டப்பட்ட கட்டிடத்தில் கடந்த பத்து வருடங்களுக்கு மேல் அப்பகுதியில் எரிவாயு சிலிண்டர் வினியோகம் செய்யும் ஏஜென்சியின் உரிமையாளர் மன நல காப்பாகமாக பயன்படுத்தி வருகிறார் . இதனால் கனமழை மற்றும் பேரிடர் காலங்களில் அப்பகுதியில் வசிக்கும் ஆதிதிராவிடர்கள் மக்கள் தங்குவதற்கு இடம் இல்லாமல் மிகவும் சிரமப்படுவதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.
இது சம்மந்தமாக விசாரித்ததில் ஊராட்சி மன்ற அலுவகத்தில் மேல் வாடகைக்கு விடப்பட்டதாக தகவல் கொடுத்தனர்.
திட்டை ஊராட்சி மன்ற அலுவலகம் பேரிடர் காலத்தில் தங்க வைக்க கட்டப்பட்ட கட்டிடத்தை மேல்வாடைக்கு விட பட்டதை எதிர்த்து அப்பகுதியில் வசிக்கும் ஆதி திராவிடர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இது சம்மந்தமாக மாவட்ட ஆட்சியாளர் மற்றும் முதல்வர் அவர்களுக்கு புகார் கொடுத்துள்ளனர்.
ஆனால் இது சம்பந்தமாக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் தற்போது ஆதிதிராவிடர் மக்கள் திட்டை ஊராட்சி மன்ற அலுவலகத்தின் முன்பு தர்ணாவில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது சம்பந்தமாக அப்பகுதியில் வசிக்கும் ஆதிதிராவிட பொதுமக்கள் கூறும்போது ஆறுக்கும் மேற்பட்ட முறை கிராம சபை கூட்டத்தில் கட்டிடத்தை தனியாரிடமிருந்து பொதுமக்கள் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விட்டோம் ஆனால் ஊராட்சி மன்ற தலைவர்கள் இது சம்பந்தமாக எந்த ஒரு நடவடிக்கையும் பதிலையும் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர்.
வட்டாட்சியர் முதல் தலைமைச் செயலர் வரை அனைவருக்கும் இந்த கட்டிடத்தை மீட்டு தர கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்த ஒரு அதிகாரியும் சம்பந்தப்பட்ட இடத்திற்கு வந்து ஆய்வு செய்து விசாரித்து எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டை எழுப்புகின்றன.
அதைவிட அதிர்ச்சியான தகவலை அவர்கள் தெரிவிக்கின்றனர் அது என்னவென்றால் ஊராட்சி மன்ற தலைவரிடம் கேட்டதற்கு இது பெரும் முதலாளிகளின் வசம் இருப்பதால் இது சம்பந்தமாக உடனடியாக எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்றும் எங்களது கோரிக்கைகளை நிராகரித்து வருகின்றனர் என்று கூறினார்.
தற்போது கடந்த ஒரு மாதமாக கனமழை இப்பகுதியில் பெய்து வருவதால் எங்களுடைய வாழ்வாதாரத்தை கருதி தனியார் வசம் இருக்கும் பேரிடர் கால கட்டிடத்தை மீட்டு ஆதிதிராவிடர்கள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்றும் இந்தத் திட்டை ஊராட்சி கடல் ஓரம் இருக்கும் பகுதியாக இருப்பதால் மழை மற்றும் புயல்களால் முதலில் பாதிக்கப்படுவது நாங்களாக தான் இருக்கும் என்றும் ஆகவே எங்களுடைய வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தனியார் வசம் விடப்பட்ட பேரிடர் காலத்தில் கட்டப்பட்ட அரசு கட்டிடத்தை மீட்டுக் கொடுக்கும்படி கோரிக்கை விடுத்துள்ளனர்.
எது எப்படியோ சுனாமி அரக்கனிடமிருந்து மீண்டு விட்டோம் . ஆனால் உள்ளூரில் உள்ள பணம் வைத்துள்ள அரக்கர்களிடமிருந்து இன்னும் சாமானிய ஏழை எளிய மக்கள் மீள முடியவில்லை என்பதுதான் நிதர்சனம்.
பேரிடர் காலங்களில் பாதிக்கப்படும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக பல லட்ச ரூபாய் மதிப்பில் அரசு கட்டித் தரப்பட்ட கட்டிடத்தை ஊராட்சி மன்றத்தில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருக்கும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் லஞ்சம் பெற்றுக் கொண்டு இப்படி பணம் வசதி படைத்த தனியார் வசம் ஒப்படைப்பது வாடிக்கையாக இருந்து வருகிறது. இதனால் பாதிக்கப்படுவது ஏழை எளிய சாமானிய பொதுமக்கள் தான் . தற்போது காலநிலை மாறி வருவதால் எந்த நேரத்தில் எது நடக்கும் என்று யாரும் யூகிக்க முடியாமல் இருப்பதால் அடுத்த புயலோ மழையோ வந்தால் பாதுகாப்பாக தங்க வைக்க எதுவாக இருக்கும் அந்த கட்டிடத்தை உடனே தனியார் வசம் இருந்து மீட்டு தர வேண்டும் என்பதுதான் அப்பகுதி மக்கள் மட்டுமல்ல அனைவரின் கோரிக்கையாகும். பொறுத்திருந்து பார்ப்போம்.