பொதுமக்கள் புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் அலட்சியப் போக்கை கடைபிடிக்கும் நாகர்கோவில் மாநகராட்சிஅதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காத மேயர்!? சாலை மற்றும் குடிநீர் பிரச்சனையை தீர்த்து வைப்பாரா தமிழக முதல்வர்!?
பொதுமக்கள் புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் அலட்சியப் போக்கை கடைபிடிக்கும் நாகர்கோவில் மாநகராட்சி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பாரா தமிழக முதல்வர்!?
நாகர்கோவில் மாநகராட்சியில் கடந்த அதிமுக ஆட்சியில் ஆணையராக இருந்த சரவணகுமார்,
அதன் பின்பு பொறுப்பேற்ற
ஆஷா அஜீத் (IAS) பொது மக்களின் கோரிக்கை மற்றும் புகார்கள் அடிப்படையில் உடனே நடவடிக்கை எடுத்து வந்ததால் பொது மக்களின் பாராட்டைப் பெற்றனர். என்று கூறலாம்.
இவர்களின் பணி உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பு
மக்களின் தேவைகள் உடனடியாக பூர்த்தி செய்யப்பட்டது.கன்னியாகுமாரி மாநகராட்சியில்
குடிநீர் குழாய் உடைப்பு,
சாலையில் படுங்குழி,
சுகாதார சீர்கேடு இப்படி பல்வேறு குறைகளை பொதுமக்கள் மாநகராட்சி
வாட்ஸ்அப் குருப்பில் பதிவு
செய்த உடனே பொதுமக்களின் குறைகள்
உடனடியாக நிவர்த்தி செய்யப்படும்
ஆனால் தற்போது உள்ளாட்சி தேர்தலுக்கு பிறகு மாநகராட்சிகளில் வேலை பார்க்கும் அதிகாரிகளும், உள்ளாட்சி தலைவர்களும், உறுப்பினர்களும் சுயநலமாக செயல்படுகின்றனர் என
பொதுமக்கள் அரசின் மீது
குற்றம்சாட்டுகின்றனர்.
மத்திய அரசு பெட்ரோல்-டீசல் விலையை
கடுமையாக உயர்த்தி வந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு பெயரளவுக்கு பெட்ரோல் டீசல் விலையை குறைத்தது. ஆனால் தற்போது தமிழக அரசு அதிகாரிகளுக்கு பல லட்சம் மதிப்புள்ள
நவீன விலை உயர்ந்த கார்கள்
எதற்கு!? விலை உயர்ந்த கார்கள் ஒரு லிட்டர் பெட்ரோல் டீசல் போட்டாள் 10 கிலோ மீட்டருக்கு குறைந்த தூரமே பயணிக்க முடியும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
மக்கள் சேவை செய்ய குறைந்த விலையில் அதிக தூரம் பயணிக்கும் வாகனங்களை பயன்படுத்தலாம்.
ஆனால் இவர்கள் அரசு வழங்கியுள்ள அதி நவீன கார்களில்
உல்லாசமாக சுற்றி வருகின்றன என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மக்கள் சேவைக்காக அரசின் சொகுசு வாகனங்களை
பயன்படுத்துவதாக இருந்தால்
வடசேரி அடுத்த கிருஷ்ணன் கோவில்
எம்.எஸ் ரோடு மற்றும் கோட்டார் ரோடு,செட்டிக்குளம் ரோட்டில் சென்று வரச்சொல்லுங்கள் என்று பொதுமக்கள் ஆவேசமாக கூறுகின்றனர்.
கடந்த ஒரு மாதமாக குடிநீர் குழாய் உடைந்து வீணாகி சாக்கடையில் போய்கிறது
இதுபற்றி தகவல் தெரிந்தும் நடவடிக்கை ஏன்
எடுக்கவில்லை என்று தெரியவில்லை
என பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அதுபோன்று தேசிய நெடுந்சாலையில் தற்போது போடப்பட்ட தரமற்ற சாலையால் பல்லாங்குழியால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்த அவல நிலை அதிகாரிகளுக்கும்
மேயருக்கும் தெரிந்தும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை!?
இதனால் தங்களுக்கு என்ன வருமானம் என்ற மெத்தனப் போக்கில் இருக்கின்றார்களா என்ற சந்தேகம் பொதுமக்களிடம் எழுந்துள்ளது.
நாகர்கோவில் மாநகராட்சியில் பல பகுதிகளில் குடிநீர் குடிநீர் பற்றாக்குறையால்
பொது மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
நாகர்கோயில் மாநகராட்சிக்குட்பட்ட இருளப்பபுரம் அருந்ததியர் காலனி பகுதியில் ஆழ்துளை கிணற்றுக்கு பயன்படுத்தும் மின் மோட்டார் பழுதடைந்த நிலையில் தற்போது வரை மின் மோட்டாரை சரி செய்யாமல் இருப்பதால் சில நாட்களாக குடி தண்ணீர் பற்றாக்குறையால் பொதுமக்கள் குடி தண்ணீருக்காக பல மணி நேரம் காத்திருந்து வரிசையில் காத்திருந்து குடி தண்ணீர் எடுக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
எம்.எஸ் ரோட்டில்
குடிநீர் வீணாக சாக்கடையில் போகுகிறது. இதையெல்லாம் கண்டும் காணாமல் மாநகராட்சி அதிகாரிகள் இருப்பதால்
நள்ளிரவில் தொலைபேசியில் பேசும்
பவர் புள் மேயரின் கட்டுப்பாட்டில் இருக்கும்
நாகர்கோவில் மாநகராட்சியால்
இப்படி ஒரு அவள நிலையா
என பொதுமக்கள் ஆவேச படுகின்றனர்.
மாநகராட்சி ஆணையர் மற்றும் மேயர் கட்டுப்பாட்டில் இருக்கும்
ஊழியர்களிடம்
பொதுமக்களின் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு போட்டு இருந்தால்
அதிகாரிகளும், ஊழியர்களும் அந்த சாலையில் உள்ள பல்லாங்குழியையும்
வீணாகும் குடிநீர் குழாய்களையும் சரிசெய்து இருப்பார்கள் என்று அந்தப் பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர்.
ஆட்சி மாறினாலும்
காட்சிகள் மாறவில்லை.
கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்ககள் மாநகராட்சி வார்டு உறுப்பினராக இருந்தால் இது போன்ற அவல நிலையை உடனே சரி செய்து இருப்பார்கள் என்றும் சி
கம்யூனிஸ்ட் கட்சி தான் பொது மக்களின் சுய நலம் இல்லாமல் போராட்டம் செய்யும்…
கோமாவில் இருக்கும் நாகர்கோவில் மாநகராட்சியை எதிர்த்து
போராட்டத்தை தூண்டாதே!!
வழக்கறிஞர்
வே,அய்யப்பன்.
8760537764