காவல் செய்திகள்

பொள்ளாச்சி ஆனைமலை சுற்றுவட்டார நியாய விலைக் கடையிலிருந்து கேரளாவுக்கு மாதம் 100 டன் ரேசன் அரிசி கடத்தல் !?
கண்டுகொள்ளாத காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகளுக்கு மாதம் மூன்று லட்ச ரூபாய் மாமூல் கப்பம் கட்டுவதாக அதிர்ச்சித் தகவல்!?
கோமாவில் இருக்கும் பொள்ளாச்சி உதவி ஆட்சியர் அலுவலகம்!? தடுத்து நிறுத்த முன் வருவாரா கோவை மாவட்ட ஆட்சித் துறை & காவல் துறை!?

பொள்ளாச்சி ஆனைமலை சுற்றுவட்டார நியாய விலைக் கடையிலிருந்து கேரளாவுக்கு மாதம் 100 டன் ரேசன் அரிசி சட்ட விரோதமாக கடத்தல் !?
கண்டுகொள்ளாத காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகளுக்கு மாதம் மூன்று லட்ச ரூபாய் மாமூல் கப்பம் கட்டுவதாக அதிர்ச்சித் தகவல்!?
கோமாவில் இருக்கும் பொள்ளாச்சி உதவி ஆட்சியர் அலுவலகம்!? தடுத்து நிறுத்த முன் வருவாரா கோவை மாவட்ட ஆட்சியர்!?
நடவடிக்கை எடுப்பாரா தமிழக முதல்வர்!?

கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆனைமலை காவல் நிலையத்திற்கு உட்பட்ட நியாய விலைக் கடையில் தஸ்கர்கண்ணன் என்பவர் எடை போடும் ஊழியராக பணி செய்து வருகிறார்.
அதில் மணக்கடவு , ஆத்துப்பொள்ளாச்சி காளியப்பான் கவுண்டர் புதூர் இந்த மூன்று கிராமத்தில் உள்ள நியாய விலைக் கடையில் சுமார் 2000 குடும்ப அட்டைதாரார்கள் இருப்பதாக தெரிகிறது.

கண்ணன். நியாவிலை கடை தற்காலிக பணி ஊழியர்.

ஒரு அட்டைதாரருக்கு ,சுமார் 55 கிலே மற்றும் 40 கிலோ அரிசி வழங்கப் படுகிறது. அப்படி என்றால் மொத்தம் இந்த மூன்று நியாய விலைக் கடையில் சுமார் 80000 கிலோ அரிசி வழங்கப் படுகிறது.( 80 டன் அரிசி) இதில் 20 டன் 20000 கிலோ மட்டுமே பொது மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். மீதம் உள்ள 60000 கிலோ (60டன்) அரிசி கேரளாவுக்கு சட்ட விரோதமாக கடத்தப் பட்டு வருவாதாக் அதிர்ச்சி தரும் தகவல் வந்துள்ளது.
ஒரு நாள் ஒன்றுக்கு 3000 கிலோ (மூன்று டன்) அரிசி கடத்துவதாகவும் ஒரு கிலோ அரிசி 15 ரூபாய் வீதம் விற்று வருவதாகவும் அட்டைதாருக்கு கிலோவுக்கு 5ரூபாய் கொட்டுத்தாலும் மீதம் ஒரு கிலோவுக்கு 10 ரூபாய் வீதம் அதிர்ச்சித் தகவல் வந்துள்ளது. ஒரு நாள் ஒன்றுக்கு 30000 ரூபாய் வருமானம் மட்டும் வருகிறதாம்.
அப்படி என்றால் மாதத்திற்கு குறைந்தது சுமார் ஒன்பது லட்சம் ரூபாய் வரை அரிசி கடத்தலில் கிடைக்கிறது என்கிறார்கள் சுற்று வட்டார கிராம சமூக ஆர்வலர்கள்.இது மட்டுமில்லாமல் பருப்பு சர்க்கரை பாமாயில் .மண்ணெண்ணெய் ஆகியவற்றை தமிழக கேரளா எல்லையில் அமைத்துள்ள மீனாட்சிபுரம் சோதனைச் சாவடி வழியில் செல்லாமல் மணக்கடவு அருகே ஒத்தையடி பாதையில் இரு சக்கர வாகனத்தில் கடத்திச் செல்வதாக தகவல் வந்துள்ளது.
ஒரு குடும்ப அட்டைதாரிடம் ஒரு குடும்ப அட்டை மாதம் 200 ரூபாய் வீதம் அட்டையை பெற்றுக்கொண்டு அனைத்துப் பொருள்களையும் நியாய விலைக் கடையில் வேலை பார்க்கும் தற்காலிக ஊழியர் கண்ணன் என்பர் பெற்றுக் கொண்டு கூலி ஆட்க்கள் தங்கவேல் திவான் சாந்த் புதூர்.
ஆத்துப்பொள்ளாச்சி தங்கவேல் என்கிற ரகுமான்.
இவர்களை வைத்து இரண்டு TVS இரு சக்கர வாகனத்தில் தஸ்கர்)கண்ணன் ரேசன் கடை எடை போடும் தற்காலிக ஊழியர் பொள்ளாச்சிகேரளாவுக்கு கடத்தி வருவதாக தகவல் வந்துள்ளது.

இரு சக்கர வாகனத்தில் அரிசி முட்டைகளை கேரளாவுக்கு கடத்தும் தங்கவேல் மற்றும் ரகுமான்

மாதம் மூன்று லட்சம் வரை மாமூல் !

இந்த கடத்தல் மூலம் மாதம் சுமார் 10 லச்சம் ரூபாய் வரை கிடைக்கும் வருமானத்தில் உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறைக்கு (பொள்ளாச்சி)மாதம் சுமார் ஒரு லட்சம் ரூபாய் மற்றும் வட்ட வழங்கல் அதிகாரி (TSO) அலுவலகத்திற்கு மாதம் சுமார் 50,000 ருபாய் மற்றும் கோவை மாவட்டம் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு பறக்கும் படை அதிகாரிகளுக்கு மாதம் 50000 ஆயிரம் ரூபாய் மற்றும் ஆனைமலை காவல் நிலையத்திற்கு மாதம் 50000 ரூபாய் மற்றும் உள்ளூரில் உள்ள அரசியல் வாதிகளுக்கு மாதம் 50000 ரூபாய் இப்படி மாதம் மூன்று லட்சம் ரூபாய் வரை மாமூல் கொடுப்பதாக குற்றச் சாட்டுகள் எழுந்துள்ளது.

இது மட்டுமில்லாமல் நியாய விலைக் கடையில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வரும் கண்ணன் அவருடைய மனைவி( பெயர் தமிழரசி) ஆவர்.இவர் பொள்ளாச்சி நகராட்சியில் உள்ள 7 மகளிர் சுய உதவிக் குழு நியாய விலைக் கடையின் பொறுப்பாளராக உள்ளார்.
இவருக்கு அரசு அதிகாரிகளின் செல்வாக்கு இருப்பதாகவும் அதனால் தன் கணவர் கேரளாவுக்கு ஆட்கள் வைத்து அரிசி கடத்துவதற்கு உறுதுணையாக இருப்பதாகவும் தெரிகிறது. அது மட்டுமில்லாமல் யார் புகார் கொடுத்தாலும் நான் பார்த்துக் கொள்கிறேன் என்றுகேரளாவுக்கு அரிசி கடத்தும் தன் கணவரை கண்ணனுக்கு தையிரியமாக இருக்கச் சொன்னதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இது சம்மந்தமாக சமூக ஆர்வலர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது நியாய விலைக் கடைக்கு வரும் அரிசி முட்டைகளை இருப்பு வைக்க முடியாது என்றும் இந்த அரிசியை தமிழ் நாட்டிற்குள் விற்றால் கிலோ 5ரூபாய் தான் கொடுப்பார்கள் என்றும் அந்த 5ரூபாய் குடும்ப அட்டை தாரர்களுக்கு கொடுக்க வேண்டி இருப்பதாகும் கேரளாவில் கிலோ அரிசி 15 ரூபாய் வரை வாங்குவதாகவும் அதனால் தான் காவல் துறை மற்றும் அரசு அதிகாரிகளுக்கு மாமூல் கொடுத்து இரண்டு கூலி ஆட்களை வேலைக்கு வைத்து இரண்டு சக்கர வாகனத்தில் கடத்தி வருகிறேன் என்று சாதரணமாக கூறியுள்ளார் என்ற தகவல் வந்துள்ளது.

எது எப்படியோ கடந்த அதிமுக ஆட்சியில் 10 வருடங்களாக லஞ்ச ஊழல் முறைகேடுகள் நடந்து வந்ததாகவும் இதை எல்லாம் களையெடுக்க வேண்டி மக்கள் நம் அனைவரையும் நம்பி வாக்களித்து ஆட்சிப் பொறுப்பில் அமரவைத்து உள்ளார்கள் என்று மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மாநாட்டில் தமிழக முதல்வர் பேசியது குறிப்பிடத் தக்கது .ஆகையால் கேரளாவுக்கு ரேசன் அரசு கடத்தலுக்கு உடந்தையாக இருக்கும் காவல்துறையினர் மற்றும் அரசு அதிகாரிகள் மீது நடைவைக்கை எடுத்து அதுமட்டுமில்லாமல் கடத்தல் செய்பவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தால் மட்டுமே இது சட்ட விரோத கடத்தல் செயல்கள் நடக்காமல் தடுக்க முடியும் என்பதுதான் உண்மை!!பொறுத்திருந்து பார்ப்போம்…

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button