போக்குவரத்துத் துறை

போக்குவரத்து விதிகளை மீறி உயிரைப் பனையம் வைத்து ஆபத்தான முறையில் பொதுமக்களை ஏற்றி செல்லும் ஷேர் ஆட்டோ! பொதுமக்களின் நலன் கருதி குருவித்துறை குருபகவான் கோவிலுக்கு பேருந்தை இயக்க நடவடிக்கை எடுப்பாரா சோழவந்தான் பணிமனை மேலாளர்

மதுரையிலிருந்து 35 கி.மீ தொலைவிலும் சோழவந்தான் லிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் குருவின் அருளும், ஆசியும் பெற செல்ல வேண்டிய திருக்கோயில், குருவித்துறை உள்ளது. இந்த குரு பகவான் கோவிலில் சித்திரை ரத வல்லப பெருமாள் கோவில் இந்த கோவிலின் கிழக்குப் பகுதியில் வைகை ஆற்றங்கரையில் சுயம்புவாக காட்சியளிக்கிறார் குருபகவான் குரு பகவானை தரிசிக்க வாரம் தோறும் வியாழக்கிழமை அன்று மதுரை தேனி திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர் . இவர்கள் மதுரை வந்து சோழவந்தான் வந்து இரண்டு கிலோமீட்டர் தூரம் உள்ள குருவித்துறை குரு பகவான் கோவிலுக்கு வருகின்றனர். ஆனால் குருவித்துறை பறை மட்டுமே பேருந்து வசதி உள்ளது. குருவித்துறையிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள குரு பகவான் கோயிலுக்கு பேருந்து வசதி கிடையாது. ஆகவே சாமானிய ஏழை எளிய மக்கள் நடந்த செல்கின்றனர். அதுமட்டுமில்லாமல் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுடன் குடும்பத்துடன் வரும்போது இரண்டு கிலோமீட்டர் நடந்து செல்ல முடியாமல் ஆட்டோவில் தான் செல்ல ஆனால் ஷேர் ஆட்டோ மட்டுமே உள்ளது. மூன்று பேர் ஏற்றிச் செல்ல வேண்டிய ஆட்டோவில் போக்குவரத்து விதிகளை மீறி ஆபத்தான முறையில் இந்த ஷேர் ஆட்டோவில் குறைந்தது 15 பேருக்கு மேல் ஏற்றி செல்வதாகவும் உயிரை பணயம் வைத்து பொதுமக்கள் செல்வதை காவல்துறையினர் மற்றும் வட்டாரப் போக்குவரத்து துறை அலுவலர்கள் யாரும் கண்டு கொள்வதில்லை என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இது குறித்து கோவில் நிர்வாகத்தினர் கூறுகையில் மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து குருவித்துறை குரு பகவான் கோவிலுக்கு வாரம்தோறும் வியாழக்கிழமை பேருந்து வசதி செய்து தர வேண்டும் என அரசு போக்குவரத்து கழகத்தினரிடம் கடிதம் கொடுத்த பின்பும் இதுவரை பேருந்து வசதி செய்து தரவில்லை இதனால் பக்தர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர் பேருந்து வசதி இல்லாததால் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையும் வெகுவாக குறைந்து வருகிறது
குருவித்துறையில் இருந்து கோவிலுக்கு இரண்டு கிலோமீட்டர் தூரம் உள்ளதால் நடந்து செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலையும் இருப்பதாக தெரிவிக்கின்றனர் ஆகையால் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் வியாழக்கிழமை தோறும் பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து குருவித்துறை கோவில் வாசலுக்கு பேருந்து வசதியை செய்து தர வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர்

Related Articles

Back to top button