போலி ஆவணங்களை வைத்து மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி செம்மங்குடி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் 17 கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளதாக அதிர்ச்சித் தகவல்! நடவடிக்கை எடுப்பாரா தமிழக முதல்வர்!!?

கடந்த அதிமுக ஆட்சியில் 2016 சட்ட மன்ற தேர்தல் அறிக்கையில் விவசாய மேம்பாடு மற்றும் விவசாயிகளின் நலன் என்னும் தலைப்பின் கீழ் கூட்டுறவு வங்கிகளுக்கு சிறு குறு விவசாயிகள் செலுத்த வேண்டிய பயிர் கடன் நடுத்தர கால கடன் நீண்ட கால கடன் தளளுபடி செய்யப் படும் என்று அப்போது முதல்வராக இருந்த மறைந்த ஜெயலலிதா அவர்கள் தெரிவித்திருந்தார்.
2016ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் மீண்டும் அதிமுக ஆட்சிப் பொறுப்பை தக்க வைத்துக் கொண்டது. ஆறாவது முறையாக ஜெயலலிதா முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
தேர்தல் அறிக்கையில் ஜெயலலிதா கூறியபடி 31/03/2016 வரை சிறு குறு விவசாயிகள்( 2.5 ஏக்கர் முதல் 5 ஏக்கர் வரை )கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள நிலுவையில் உள்ள பயிர் கடன். நடுத்தர கால கடன் (வேளாண்மை சார்ந்தது) நீண்ட கால கடன்( பண்ணை சார்ந்தது ) அசல் வட்டி அபராத வட்டி மற்றும் இதர செலவினங்கள் உட்பட அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இந்த அறிவிப்பின் படி( 1.)மத்திய கூட்டுறவு (2)வங்கி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் (3) தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி சங்கங்கள் ( 4) தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் இருந்து நகர கூட்டுறவு கடன் சங்கங்களாக மாற்றப்பட்டவை இவைகளில் சிட்டா அடங்கல் மற்றும் நிலவுடமை ஆவணங்கள் அடிப்படையில் சிறு குறு விவசாயிகள் வாங்கி இருந்த பயிர் கடன் மொத்தம் 5 ,016 கோடியே 53 லட்சம் ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டது. மற்றும் மத்திய கால வேளாண் கடன்732 கோடியே 32 லட்சம் பண்ணை சார்ந்த நீண்ட கால கடன் 32 கோடியே 5 லட்சம் என 5 ஆயிரத்து 780 கோடியே 92 லட்சம் ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டது.இதில் 8 லட்சத்து35 ஆயிரத்து 360 சிறு விவசாயிகள் மற்றும் 8 லட்சத்து58 ஆயிரத்து 785 குறு விவசாயிகள் மொத்தம் 16 லட்சத்து 94 ஆயிரத்து 245 பயனடைந்து உள்ளதாக 26 ஜூலை 2016 தேதி சட்டசபையில் அப்போது இருந்த கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு அவர்கள் தெரிவித்திருந்தார்.
28/06/2016 அன்று கடன் தள்ளுபடி நெறிமுறைகள் அரசால் அறிவிக்கப்பட்டது என்றும் அதன் பின்னர் 1/07/2016 அன்று கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர்களின் கூட்டறிக்கை வழி காட்டு நெறிமுறைகள் அனைத்து மண்டல இணைப் பதிவாளர்களுக்குக்கு அனுப்பப் பட்டன என்று சட்ட மன்றத்தில் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.
26/08/2016 அன்று தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், கிராம நிர்வாக அலுவலகம் மற்றும் மத்திய கூட்டுறவு வங்கி கிளைகள், மற்றும் ஊராட்சி அலுவலகங்களில் விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்யப்பட்ட பயனாளிகள் பட்டியல் வெளியிடப்படும் என்று அறிவித்திருந்தது. அந்த அறிவிப்பில் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ததில் முறைகேடுகள் நடந்துள்ளது என்று விவசாயிகளுக்கு ஆட்சேபனை இருந்தால் புகார் தெரிவிக்க மாநில அளவில் தொடர்புகொள்ள ஹெல்ப்லைன் 044 42858602 மாவட்ட அளவில் உள்ள இணைப்பதிவாளர் களுக்கு தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி செம்மங்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் 17கோடி ரூபாய் வரை பயிர் கடன் மோசடி நடந்துள்ளதாக அதிர்ச்சித் தகவல்! நடவடிக்கை எடுப்பாரா தமிழக முதல்வர்!!?
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி செம்மங்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் 2016 மற்றும் 17 ஆம் ஆண்டு விவசாயிகள் பயிர்க் கடன் வழங்கப் பட்டதில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாகவும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்டு பெறப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தரும் தகவல் வந்துள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டம் திருமுல்லைவாசல் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு உட்பட்ட புல எண் 713 உட்பிரிவு 2D 3A 1.37.3 ஹெக்டர் ( 3ஏக்கர்) அலமேலு அம்மாள் பெயரில் உள்ள புஞ்சை நிலத்தின் பெயரில் பக்கிரிசாமி மற்றும் ராஜமாணிக்கம் இரண்டு பேரும் சம்பா சாகுபடி செய்துள்ளதாக போலி ஆவணங்கள் கொடுத்து (573)செம்மங்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ஒரே பட்டா சிட்டா அடங்கல் வைத்து பக்கிரிசாமிபெயரில் 1.60 சென்ட்க்கு 92.500 ரூபாய் .ராஜமாணிக்கம் பெயரில் சர்வே என் (713/2D ) (1.80 /1.69 சென்ட் ) தலா ஒரு லட்சம் வீதம் 2 லட்சமும் மொத்தம் மூன்று லட்சம் பயிர் கடன் பெற்றுள்ளனர். அலமேலு அம்மாள் அவர்களின் மூன்று ஏக்கர் நிலத்தை வைத்து 5 ஏக்கர் இருப்பதாக பக்கிரிசாமி ராஜமாணிக்கம் இவர்கள் 2 பேரும் சம்பா சாகுபடி செய்து வருவதாக போலி பட்டா சிட்டா அடங்கல் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் கையொப்பமிட்ட ஆவணங்களை வைத்து 2 லட்சத்து 92 ஆயிரத்து 500 ரூபாய் செம்மங்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் முறைகேடாக பெற்றுள்ளது
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தெரியவந்துள்ளது. இதற்கு உடந்தையாக மாவட்ட இணை பதிவாளர் ராஜேந்திரன் கூட்டுறவு சங்கத் தலைவர் ராஜமாணிக்கம் கூட்டுறவு சங்க செயலாளர் சக்கரவர்த்தி இந்த மூன்று பேரும் இதுபோல பல ஆயிரம் ஏக்கர் நிலங்களின் போலி ஆவணங்களை வைத்து பல கோடி ரூபாயை மோசடி செய்துள்ளதாக அதிர்ச்சித் தகவல் வந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் பயிர் கடன் வழங்கப்பட்டுள்ள விவசாய நிலம் திருமுல்லைவாசல் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு உட்பட்டு இருப்பதால் திருகருக்காவூர் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் தான் பயிர்க் கடன் வாங்க முடியும் என்றும் ஆனால் இவர்கள் முறைகேடாக செம்மங்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பயிர்க்கடன் பெற்றுள்ளதாகவும் அதிர்ச்சித் தகவல் வந்துள்ளது.
செம்மங்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் சீர்காழி தில்லை விடங்கம், திட்டை ,சட்டநாதபுரம் கைளஞ்சேரி, விளந்திடசமுத்திரம், புளிச்சை காடு ,ஆர்ப்பாகம், வினாயக்குடி. ஆகிய 11 கிராம நிர்வாக அலுவலகத்திற்கு உட்பட்டு இருக்கும் விவகாகார எல்லைக்குட்பட்ட விவசாய நிலங்களுக்கு பயிர் கடன் வழங்க முடியும் என்ற தகவலும் தெரிவித்துள்ளனர். இதுபோன்று பல ஆயிரம் ஏக்கர் நிலங்களின் பெயரில் போலி ஆவணங்கள் தயாரித்து சுமார் 17கோடி வரை மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டத்தில் உள்ள செம்மங்குடி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் மோசடி நடந்துள்ளதாக அதிர்ச்சித் தகவல் வந்துள்ளது.
2021 சட்டமன்ற தேர்தலில் திமுக தேர்தல் அறிக்கையில் விவசாயிகளின் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்திருந்த நிலையில் திமுக தனிப்பெரும்பான்மை பெற்று திமுக ஆட்சி அமைத்த பின்பு
தமிழக முதல்வராக முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்றுக் கொண்டார். திமுக தேர்தல் அறிக்கையில் கூறியபடி கடந்த அதிமுக ஆட்சியில் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாய நகை கடன் வழங்கியுள்ள அனைவருக்கும் நகைக் கடன் தள்ளுபடி என முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார். அதன் அடிப்படையில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாயிகள் வாங்கிய பயிர்க் கடன் பட்டியலை சரி பார்த்த போது பல கூட்டுறவு கடன் சங்கங்களில் போலி நகைகள் மற்றும் போலி ஆவணங்களை வைத்து முறைகேடாக விவசாய நகை கடன் வாங்கியுள்ளதாக பல புகார்கள் வந்த நிலையில் முறைகேடுகள் நடந்துள்ளதா என்பதை ஆராய குழு அமைத்து அந்தக் குழுவின் அறிக்கையின் படி முறையாக நகை கடன் பெற்ற விவசாயிகளுக்கு மட்டும் நகை கடன் தள்ளுபடி செய்து முறைகேடாக பயிர் விவசாய நகை கடன் பெற்ற பல லட்சம் பேர் வாங்கியிருந்த பல ஆயிரம் கோடி ரூபாய் கண்டுபிடிக்கப்பட்டு அரசுக்கு இழப்பு ஏற்படுவதைத் தடுத்து நிறுத்தி அதிமுக ஆட்சியில் நடந்த ஊழல் முறைகேட்டை திமுக ஆட்சியில் தற்போது வெளிச்சம் போட்டுக் காட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அதே போல கடந்த அதிமுக ஆட்சியில் 2016 மற்றும் 17ஆம் ஆண்டு பயிர்க் கடன் தள்ளுபடியில் பல ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடாக தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் வாங்கியுள்ளது தற்போது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது.
எனவே 2016 ஆம் ஆண்டு செம்மங்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் போலி ஆவணங்களை வைத்து முறைகேடாக விவசாய பயிர் கடன் வழங்கியுள்ளதாக மோசடி செய்துள்ள செயலாளர் தலைவர் இணைப்பதிவாளர் ஆகிய 3 பேர் மீதும் தமிழக முதல்வர் நேர்மையான அதிகாரிகளை நியமித்து விசாரணை செய்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.