மசாஜ் என்ற பெயரில் இளம் பெண்களை வைத்து புதுக்கோட்டை SVS லாட்ஜில் விபச்சாரம்! தட்டி தூக்கிய புதுக்கோட்டை நகர காவல் நிலைய உதவி ஆய்வாளர்!
மசாஜ் என்ற பெயரில் புதுக்கோட்டை SVS லாட்ஜில் விபச்சாரம்! தட்டி தூக்கிய புதுக்கோட்டை நகர உதவி ஆய்வாளர்!
புதுக்கோட்டை நகரத்தில் உள்ள ஒரு சில தங்கும் விடுதிகளில் மசாஜ் என்ற பெயரில் விபச்சாரம் நடப்பதாக காவல்துறைக்கு தகவல் வந்து கொண்டிருந்தது . ஆனால் காவல்துறையினர் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சோதனை செய்ய சொல்லும்போது அங்கு யாரும் இருக்கமாட்டார்கள் .காவல்துறையினர் ஏமாற்றத்துடன் திரும்பி வந்து விடுவார்கள் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். இது சம்பந்தமாக ரிப்போர்ட்டர் விஷன் பத்திரிக்கை குழு ரகசியமாக புலனாய்வு செய்ததில் அதிர்ச்சி தகவல் கிடைத்தது . அது என்னவென்றால் விபச்சாரம் நடப்பதாக சமூக ஆர்வலர்கள் தகவல் கொடுத்த அடுத்த நிமிடம் காவல்துறையினர் சோதனை செய்ய வருவதாக காவல் நிலையங்களில் உள்ள ஒரு சில கருப்பு ஆடுகள் மசாஜ் என்ற பெயரில் சட்டவிரோதமாக விபச்சாரம் நடக்கும் விடுதிக்கு தகவல் கொடுத்து காவல்துறையிடம் சிக்காமல் மசாஜ் என்ற பெயரில் சப்தவிரோதமாக விபச்சாரம் நடத்தும் உரிமையாளர்களையும் லாட்ஜ் உரிமையாளர்களையும் காப்பாற்றி அதற்காக மாதம் பல லட்சம் சன்மானமாக பெற்று வந்ததாக
புலனாய்வில் தெரிய வந்தது.
ஆனால் தற்போது புதுக்கோட்டை நகர காவல் நிலைய உதவி ஆய்வாளராக இருக்கும் சரவணன் அவர்கள் நேர்மையான காவல் அதிகாரி என்பதால் புதுக்கோட்டை புது பேருந்து நிலையம் அருகே உள்ள எஸ் வி எஸ் லாட்ஜில் மசாஜ் என்ற பெயரில் பெண்களை வைத்து விபச்சாரம் நடத்துவதாக வந்த புகாரின் அடிப்படையில் ரகசியமாக 29/03/23 அன்று மாலை 6 மணிக்கு அதிரடி சோதனையை உதவி ஆய்வாளர் சரவணன் மேற்கொண்டுள்ளார்.
அப்போது எஸ் வி எஸ் லாட்ஜில் உள்ள ஐந்து அறைகளில் மசாஜ் என்ற பெயரில் ஆண்களுடன் விபச்சாரத்தில் ஈடுபட்டு இருந்த சுதா/ 37, பரமேஸ்வரி என்ற ஜோதி/ 29 முத்துலட்சுமி என்ற சுவாதி,/28 நந்தினி என்ற ஷஜினி/23, உமா மகேஸ்வரி/35 ஐந்து பெண்கள் மற்றும் பெண்களை வைத்து விபச்சார தொழிலை நடத்தி வந்த திண்டுக்கல் அருகே வடமதுரை குரும்பம்பட்டியைச் சேர்ந்த சண்முகசுந்தரம்/35 என்ற நபர் இவர்கள் அனைவர் மீதும் குற்ற எண் 130/2023 u/s 4(i)5( i)d வழக்கு பதிவு செய்து
புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் கலைவாணி அவர்களிடம் ஒப்படைத்த பின்பு ஐந்து பெண்களையும் புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் கலைவாணி கைது செய்து சிறையில் அடைத்துள்ளதாக தகவல் வந்துள்ளது. எஸ் வி எஸ் லாட்ஜில் மசாஜ் சென்டர் நடத்துவதாக திண்டுக்கல் வடமதுரை அருகே உள்ள குரும்ப்பட்டியை சேர்ந்த சரவணன் அறைகளை மாத வாடகைக்கு எடுத்து சட்ட விரோதமாக பெண்களை வைத்து விபச்சாரம் நடத்தி வந்துள்ளார் என்ற அதிர்ச்சி தகவல் வந்துள்ளது.புதுக்கோட்டையில் பல வருடங்களாக காவல்துறைக்கு சவாலாக சட்ட விரோதமாக மசாஜ் என்ற பெயரில் விபச்சாரம் நடத்தியவர்களை கைது செய்த புதுக்கோட்டை நகர உதவி ஆய்வாளர் சரவணன் சாதனை படைத்துள்ளதாக புதுக்கோட்டை நகர சமூக ஆர்வலர்கள் நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஒரு சில லாட்ஜ்களில் மசாஜ் என்ற பெயரில் விபச்சாரம் நடப்பதாக தகவல் அறிந்து கொண்டிருக்கிறது. ஆகையால் புதுக்கோட்டை நகர லாட்ஜ்களில் அதிரடி சோதனை மேற்கொண்டு விபச்சாரம் இல்லாத நகரமாக மாற்ற வேண்டும் என்பதுதான் அனைத்து சமூக அருவாளர்களின் கோரிக்கையாகும்