காவல் செய்திகள்

மசாஜ் என்ற பெயரில் சட்ட விரோதமாக ஹைடெக் விபச்சார தொழில்&
ஹைடெக் கஞ்சா மொபைல் சர்வீஸ் !?சாட்டையை சுழற்றுவாரா தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்!?

மசாஜ் என்ற பெயரில் சட்ட விரோதமாக ஹைடெக் விபச்சார தொழில்!?
கஞ்சா விற்பனை ஹைடெக் மொபைல் சர்வீஸ் !?

தேனி காவல் உட்கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் சவாலாக இருக்கும் கஞ்சா மற்றும் விபச்சார தொழில்!?
சவாலாக இருக்கும் கஞ்சா மற்றும் விபச்சார தொழிலை மூடு விழா நடத்தி சாதனை படைப்பாரா தேனி காவல் கண்காணிப்பாளர்!?

தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.


தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் போதை பொருட்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. அதனை தடுப்பதற்கு தமிழ்நாடு அரசும் தமிழ்நாடு காவல் துறையும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதேபோல் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மசாஜ் என்ற பெயரில் விபச்சார பாலியல் தொழில் நடந்து வருவதையும் காவல்துறையினர் அதிரடி சோதனை செய்து கைது நடவடிக்கை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் சுற்றுலா தளங்களுக்கு சிறந்து விளங்குகிறது தேனி மாவட்டம். தேனி மாவட்டம் கேரளாவில் எல்லைப் பகுதியில் அமைந்துள்ளதால் மாவட்டம் பல மாநிலங்களில் இருந்து துவா பயணிகள் வந்து செல்வது வழக்கமாக உள்ளது. ஆகையால் தேனியில் சுற்றுலாப் பயணிகள் தங்குவதற்கு தனியார் சொகுசு விடுதிகள் அதிகரித்து நிலையில் விடுதிகளில் தங்கும் கட்டணமும் சென்னையில் உள்ள விடுதிகளின் கட்டணத்தை மிஞ்சும் அளவிற்கு உள்ளது. ஆகையால் குறைந்த கட்டணத்தில் தேனி நகராட்சிக்கு சொந்தமான கட்டிடங்களில் உள்ள விடுதிகளில் வெளி மாவட்டங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் தங்குவது வழக்கம்.

தேனி நகராட்சி கட்டிடம்.

இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு
தேனி பழைய பேருந்து நிலையத்திற்கு அருகே நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் பல தங்கும் விடுதிக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. இந்த விடுதிகளின் குத்தகை காலம் முடிந்தும் அதே நபர்கள் நகராட்சிக்கு சொந்தமான கட்டிடத்தில் விடுதிகளை நடத்தி வருவதாகவும்
நகராட்சி கட்டிடத்தில் உள்ள விடுதி ஒன்றில் விபச்சார தொழில் நடப்பதாக அதிர்ச்சி தகவல் வந்துள்ளது.
அது மட்டும் இல்லாமல் ஸ்பா என்கிற பெயரில் மஜாஜ் ( விபச்சாரம் ) தொழில் நடந்து வருவதாகவும் அதிர்ச்சி தகவல் வந்துள்ளது.
தேனி நகரத்தில் தனியார் தங்கும் விடுதிகளில் விபச்சாரம் நடத்த முடியாது என்பதால் மசாஜ் சென்டர்கள் என்கிற பெயரில் வெளி மாநிலங்களிருந்து பெண்களை அழைத்து வந்து தங்க வைத்து கல்லூரி மாணவர்களையும், இளைஞர்களையும் குறிவைத்து சட்ட விரோதமாக விபச்சாரத் தொழில் செய்து வருவதாக அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.
மசாஜ் சென்டருக்கு வரும் நபர்கள் உண்மையிலேயே உடல்வலியை போக்கலாம் என வரும் தனியார் நிறுவனங்களில் வேலை செய்யும் நபர்கள் கல்லூரி மாணவர்கள் மற்றும் அல்ப ஆசைக்காக வரும் முதியவர்களையும் மசாஜ் என்கிற பெயரில் 20 வயதிலிருந்து 30வயதிற்கு உட்பட்ட அழகிகளை வைத்து ஆசை வார்த்தை கூறி விபச்சாரத் தொழில் செய்து வருவதாகவும். இதற்கு கட்டணமாக2000 முதல் 5000 வரை வசூல் செய்து வருவதாகவும் அதிர்ச்சி தகவல் வந்துள்ளது அது மட்டும் இல்லாமல் மசாஜ் என்ற பெயரில் சட்டவிரோதமாக விபச்சாரத் தொழில் நடத்த எந்த இடையூறும் செய்யாமல் இருக்க சம்பந்தப்பட்ட உள்ளூர்
காவல் நிலையங்களுக்கு மாதம் ஒரு குறிப்பிட்ட தொகை கப்பம் கட்டி வருவதாக அதிர்ச்சி தகவல் வந்துள்ளது. முக்கியமாக கஞ்சா மற்றும் விபச்சார தொழில் சம்பந்தமாக சமூக ஆர்வலர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் கொடுத்து அந்தப் புகாரின் மீது விசாரணை செய்து அறிக்கை அனுப்புமாறு சம்பந்தப்பட்ட காவல் நிலையத்துக்கு மாவட்ட கண்காணிப்பாளரின் தனி காவல் ஆய்வாளர் (SP inspector) மெமோ அனுப்பப்படும். அப்படி அனுப்பப்படும் மெமோ சம்பந்தமாக அந்தக் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக கஞ்சா மட்டும் விபச்சாரத் தொழில் நடக்கும் பட்சத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரடி காவல் ஆய்வாளரை சந்தித்து சட்டவிரோதமாக நடக்கும் செய்திகளை மாவட்ட கண்காணிப்பாளர் நேரடி பார்வைக்கு செல்லாத அளவிற்கு மூடி மறைக்க நினைப்பதாகவும் அதிர்ச்சி தகவல் வந்துள்ளது.
அதே போல்
சட்டவிரோத கஞ்சா விற்பனையில் ஈடுபடும் நபர்களின் குடும்ப சொத்துக்கள் முடக்கப்படும் என தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.தேனி மாவட்டத்தில் கஞ்சா விற்பனை மற்றும் கஞ்சா கடத்தல் போன்ற குற்றச் செயல்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்த நிலையில், கஞ்சா விற்பனை மற்றும் கஞ்சா கடத்தல் போன்ற குற்றச் செயலை தடுப்பதற்காக தேனி மாவட்டத்தில் ‘ஆபரேஷன் கஞ்சா வேட்டையில் வெளி மாநிலங்களில் இருந்து தேனி மாவட்டத்திற்கும் தேனி மாவட்டம் வழியாக கேரளாவுக்கும் கஞ்சா கடத்தி வருவதாக வரும் தகவலின் அடிப்படையில் தேனி மாவட்ட காவல் துறையினர் கடமலைக்குண்டு ,அய்யனார் கோயில் பகுதிகளில் காவல்துறையினர் வாகன சோதனை நடத்திய போது ஆந்திர மாநிலத்தில் இருந்து தேனி மாவட்டத்திற்கு கருவாடு மற்றும் மீன் எடுத்துச் செல்லும் பெட்டிகளில் வைத்து மினி சரக்கு வாகனங்களில் கடத்தி வந்த கஞ்சாவை பறிமுதல் செய்ததும் குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமில்லாமல்
தேனியில் இருந்து கஞ்சா கடத்தி வந்து பெருமாநல்லூர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த இரண்டு நபர்களை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.
தேனி மாவட்டத்தில் கஞ்சா கடத்தி வரப்படுவது தொடர்ந்து நடைபெற்று வருவதை தடுத்து நிறுத்துவதற்கு காவல்துறையினருக்கு பெரும் சவாலாக இருக்கிறது என்பதுதான் நிதர்சனம்.

தேனி Dsp பார்த்திபன்

அதுமட்டுமில்லாமல் தேனியில் இருந்து கேரளாவுக்கு கஞ்சாவை கடத்திச் செல்வதை தடுக்க முடியாமல் தேனி மாவட்ட காவல் துறையினர் தடுமாறி வருவதாகவும் தகவல் வந்துள்ளது.

கேரளா மாநிலத்தில் அதிக விலைக்கு கஞ்சா விற்கப்படுவதாகவும் அதனால் தேனியில் இருந்து தடை செய்யப்பட்ட கஞ்சாவை கேரளாவுக்கு கடத்தி சென்று விற்று வருவதாகவும் உசிலம்பட்டி பேரையூர் பகுதியைச் சேர்ந்த ஒரு சில சமூக விரோதிகள் கேரளா எல்லைப் பகுதியில் உள்ள கம்பத்தில் உள்ள புரோக்கர்கள் மூலம் தேனி வழியாக கேரளாவிற்கு கஞ்சாவை கடத்தி விற்பனை செய்து வருவதாகவும் அதிர்ச்சி தகவல் வந்துள்ளது.
அதுமட்டுமில்லாமல் தற்போது இளைஞர்கள் கஞ்சா போதைக்கு அடிமையாகி தங்கள் வாழ்க்கையை சீரழித்து வருகின்றனர் என்பது தான் நிதர்சனமான உண்மை. அதைவிட அதிர்ச்சி தகவல் கல்லூரி மாணவர்களை வைத்து இருசக்கர வாகனங்களில் சென்று காலை 7 மணிக்குள் (மொபைல் சர்வீஸ்) கஞ்சா விற்பனை செய்து வருவதாகவும் அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் தேனியில் இருந்து கல்லூரி மாணவர்களிடம் கஞ்சாவை கொடுத்து காவல்துறையினருக்கு சந்தேகம் வராத வகையில் பிற மாவட்டங்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைப்பதாகவும் அதிர்ச்சி தகவல் வந்துள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தேனி கல்லூரியில் படித்த இரண்டு மாணவர்கள் தேனியிலிருந்து எடுத்துச் சென்ற கஞ்சாவை கோவை உக்கடம் பகுதியில் விற்றதாக காவல்துறையினர் கைது செய்தது குறிப்பிடப்பட்டது. அதே போல் தடை செய்யப்பட்ட கேரளா லாட்டரி தேனி நகரப் பகுதிகளில் உள்ள சந்து போன்ற தெருக்களில் சட்ட விரோத மாக விற்பனை செய்வதாகவும் அதிர்ச்சி தகவல் வந்துள்ளது.
அளவே சட்டவிரோதமாக கஞ்சா மற்றும் விபச்சாரத் தொழில் . தடை செய்யப் பட்ட கேரளா லாட்டரி மற்றும் புகையிலை உள்ளிட்ட போதை பொருள்களை விற்று வரும் சமூக விரோதிகளை கூண்டோடு பிடிக்க நேர்மையான காவல்துறை உயர் அதிகாரியான தென்மண்டல ஐஜி அவர்கள் நேர்மையான காவல் அதிகாரி தலைமையில் தனிப்படை அமைக்க வேண்டும் என்பதுதான் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button