மதுரை மாவட்டம் பெண்ணை கொடூரமாக கொலை செய்து சாக்கு முட்டையில் கட்டி கிணற்றில் வீசிச் சென்ற கொடூர சம்பவம்.
சமயநல்லூர்
பெண்ணை கொலை செய்து சாக்கு முட்டையில் கட்டி கிணற்றில் வீசிச் சென்ற கொலையாளிகளை
பிடிக்க மாவட்ட கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் தனிப்படை காவல்துறை தேர்தல் வேட்டையில் முடிக்கி விடப்பட்டுள்ளனர்.
மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே திருவாளவாயநல்லூர் பஸ் நிறுத்தம் பகுதியில் மதுரை திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை தனியாருக்கு சொந்தமான சாலையோர வட்ட வடிவில் உரை உள்ள கிணற்றில் சாக்கு மூட்டை ஒன்று இருப்பதை காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
உடனே சமயநல்லூர் காவல்துறையினர் சம்பந்தப்பட்ட இடத்திற்கு விரைந்து சென்று கிணற்றில் கிடந்த சாக்கு மூட்டையை கைப்பற்றி பார்த்ததில் பெண்ணை கொடூரமாக கொலை செய்து சாக்கு மூட்டையில் கட்டி கிணற்றில் வீசி சென்றுள்ளனர். அந்த உடலை கைப்பற்றிய காவல் துறையினர் உடற்கூறு மருத்துவ பரிசோதனைக்கு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். எங்கு வைத்து எதற்கு பெண்ணை கொலை செய்தார்கள், கள்ள உறவு காரணமா ,கொலை செய்து கிணற்றில் எப்போது யார் வீசினார்கள் என்று அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலை செய்யப்பட்டிருந்த பெண் கருப்பு சிவப்பு நைட்டி அணிந்துள்ளார் அவரது வயது சுமார்35 வயது மதிக்கத்தக்கதாக இருக்கும் காவல்துறை தெரிவித்துள்ளது. கொலை செய்யப்பட்ட பெண் யார் எதற்காக கொலை செய்யப்பட்டார் என்ற விபரம் தெரியவில்லை. இதுகுறித்து சமயநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்நிலையில் கொலையாளியை பிடிக்க
மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன் உத்தரவின் பேரில் சமயநல்லூர் போலீஸ் துணை சூப்பிரண்டு ஆனந்தராஜ் ஆலோசனையின் பேரில் சமயநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் தியாகராஜன் மற்றும் போலீசார் உட்பட ஒரு தனிப்படையும்
குற்றவியல் போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் மணிகண்டன் தலைமை யில் ஒரு தனிப்படையும் இரண்டு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. நேற்று காலை முதல் இரவு வரை சம்பவ இடத்திலிருந்து 5 கிலோ மீட்டர் சுற்றளவில் தடயங்கள் சேகரிக்கும் பணி தீவிரமாக நடந்தது. மேலும் அந்தப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். மதுரை, திண்டுக்கல், சிவகங்கை விருது
நகர்உள்ளிட் மாவட்டங்களில் காணாமல் போனவர்கள் பற்றிய விவரங்கள் சேகரிக்கும் பணியும் நடந்து வருகிறது. எது எப்படியோ சமீப காலங்களாக மதுரை மாவட்டம் சுற்றுவட்டார பகுதியில் சமூக விரோதிகளின் கூடாரமாக விளங்கி வருகிறது. நான்கு வழிச்சாலைகளில் சமூக விரோதிகள் மது மற்றும் கஞ்சா போதையில் சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும் அடிக்கடி பத்திரிகைகளில் செய்திகள் வந்து கொண்டிருக்கும் நிலையில் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ள சமயநல்லூர் காவல் உட்கோட்ட பகுதிகளில் அடிக்கடி இது போன்று கொலை கொள்ளை வழிப்பறிகள் தொடர்ந்து நடந்து வருவதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர் ஆகவே மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதுரை மாவட்ட காவல் உட்கோட்டத்தில் நேர்மையான காவல் அதிகாரிகளை நியமித்து பொதுமக்களை அச்சுறுத்துவரும் சமூக விரோதிகளை அடையாளம் கண்டு உடனடியாக அவர்களை கைது செய்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தால் மட்டுமே மதுரை மாவட்ட சுற்றுவட்டார பகுதியில் நடக்கும் சட்டவிரோத செயல்களை தடுக்க முடியும் என்பது தான் நிதர்சனம். ஆகவே மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் தென் மண்டல ஐஜி அவர்களின் செயல்பாட்டை பொறுத்திருந்து பார்ப்போம்.