அலங்காநல்லூர் பெண் காவல் ஆய்வாளர் வீட்டில் சுமார் 2.5 கோடி மதிப்புள்ள 500 பவுன் தங்க நகைகள் மற்றும் 5 லட்ச ரூபாய் ரொக்க பணம்….
திண்டுக்கல் மாவட்டம்
நிலக்கோட்டை காவல் உட்கோட்ட விளாம்பட்டி காவல் நிலையத்தில் சர்மிளா பெண் காவல் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார்.
அலங்காநல்லூரை அடுத்த பாசிங்காபுரம் கிராமத்தில் வீடு கட்டி வசித்து வருகிறார்.
இவரது கணவர் உதைக்கண்ணன் 30 ஆண்டுகளாக கத்தார் நாட்டில் பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 25 வயது மகன், 10 வயது மகள் என இரண்டு பிள்ளைகள் உள்ளனர். மகன் சென்னையில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் வேலை பார்ப்பதாகவும் மகள் ஐந்தாம் வகுப்பு படித்து வருவதாகவும்
தற்போது பள்ளி விடுமுறை என்பதால் பெண் காவல் ஆய்வாளர் ஷர்மிளா கடந்த 8-ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு தனது தந்தை வீட்டிற்கு மகளுடன் சென்றுள்ளார்.
தனது தந்தை வீட்டில் மகளை விட்டுவிட்டு விளாம்பட்டி காவல் நிலையம் சென்று வந்த நிலையில், (மே 10ஆம் தேதி பணி முடிந்து நள்ளிரவு பாசிங்காவுரத்தில் உள்ள தனது வீட்டிற்கு வந்துள்ளார்.
அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்துள்ளது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த சுமார் 450 சவரன் அதாவது 3 கிலோ 600 கிராம் எடையுள்ள 2.5 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் 5 லட்ச ரூபாய் ரொக்க பணம் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
கொள்ளை சம்பந்தமாக உடனடியாக அலங்காநல்லூர் காவல் நிலையத்தில் பெண் காவலா ஆய்வாளர் ஷர்மிளா புகார் அளித்த நிலையில், அலங்காநல்லூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து (Cr.No.193/24)
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அலங்காநல்லூர் போலீசார் கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் வரவழைத்து விசாரணை மேற்கொண்டனர். ஆனால் வழக்கு பதிவு செய்ததில் 250 பவுன் தங்க நகை என குறிப்பிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஷர்மிளா வீட்டில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ள நிலையில் வீட்டில் கபோர்டு வேலை நடைபெற்று வருவதால் கடந்த 10 நாட்களாக சிசிடிவி கேமராக்கள் செயல்படவில்லை என ஷர்மிளா புகாரில் தெரிவித்துள்ளார். தொடர்ந்து அக்கம் பக்கத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி அலங்காநல்லூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காவல் ஆய்வாளர் வீட்டில் தங்க நகைகள் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினரிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.