மதுரை நாகமலை புதுக்கோட்டை காவல் ஆய்வாளரை கண்டித்து ஆயிரத்துக்கு மேற்பட்டோர் சாலை மறியல்!

மதுரை நாகமலை புதுக்கோட்டை காவல் ஆய்வாளரை கண்டித்து சாலை மறியல்!

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கொடிமங்கலம் ஊராட்சி தாராப்பட்டியில் விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு ஒலிபெருக்கி கட்டப்பட்டிருந்தது இதற்கு காவல்துறையில் அனுமதி பெறவில்லை என்று நாகமலை புதுக்கோட்டை காவல் ஆய்வாளர் சிவக்குமார் ஒலிபெருக்கி மற்றும் ஸ்பீக்கர் இவற்றை கீழே தள்ளி சேதப்படுத்தியதாக காவல் ஆய்வாளர் சிவகுமாரை கண்டித்து கிராம பொதுமக்கள் மதுரை மேலக்கால் ரேடியல் சாலையில் மறியலில் ஈடுபட்டுள்ளனர்
சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் மற்றும் விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த நிர்வாகிகளிடம் காவல் உதவி ஆய்வாளர் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் பேச்சுவார்த்தையில் பொதுமக்கள் யாரும் உடன்படவில்லை ஒளிபெருக்கியை சேதப்படுத்திய காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எழுத்தால் மட்டுமே நாங்கள் இந்த சாலை மறியலை கைவிடுவோம் என்று தொடர்ந்து சாலை மறியல் ஈடுபட்டு வருவதாக தகவல் வந்துள்ளது.