மதுரை மாநகரில் ஓடும் ஆயிரக்கணக்கான ஆட்டோக்களுக்கு எப்சி, இன்சூரன்ஸ், பர்மிட் இல்லை என அதிர்ச்சி தகவல்!
கண்டுகொள்ளாமல் மாதம் பல லட்சம் ரூபாய் கல்லாக்கட்டும் மதுரை வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் மதுரை மாநகர் போக்குவரத்து காவலர்கள்!

இந்திய மோட்டார் வாகனச் சட்டம், சாலைகளில் வாகனங்கள் ஓட்டுவது மற்றும் போக்குவரத்து விதிகளை ஒழுங்குபடுத்துவது தொடர்பான விதிகளை கொண்டுள்ளது.
மோட்டார் வாகன சட்டங்களின்படி, சட்டவிரோதமாக கருதப்படுவதை தவிர்க்க பதிவு செய்த பிறகு காப்பீடு செய்யப்பட வேண்டும்.
காப்பீடு இல்லாமல் வாகனம் ஓட்டுவது ஒரு ஆபத்தான நிதி மற்றும் சட்ட முடிவாகும்.
போக்குவரத்து விதிகளை மீறினால் அபராதம் விதிக்கப்படலாம் அல்லது வேறு சில சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்படலாம்.
இந்தியாவில் போக்குவரத்து குற்றங்கள் மற்றும் அபராதங்கள் மீதான புதிய திருத்தங்கள்:
ஒரு வாகனம் போலீசாரால் சோதனை செய்யப்படும்போது
சாலை விதிகளை ஏரி இருந்தால் ஆயிரம் ரூபாய் அபராதம்
அதிகாரிகளுக்குக் கீழ்ப்படியாமல் இருப்பது
2 ஆயிரம் ரூபாய்
உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுதல் 5 ஆயிரம் ரூபாய்
அதிக வேகம்
4 ஆயிரம் ரூபாய் வரை
அவசரமாக வாகனம் ஓட்டுதல்
6 மாதங்கள் முதல் 1 வருடம் வரை சிறைத்தண்டனையுடன் 5 ஆயிரம் ரூபாய் வரை அபராதம்
குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால்
2 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் 15 ஆயிரம் ரூபாய் வரை அபராதம்.
தலைக்கவச விதி மீறல்
3 மாதங்களுக்கு உரிமம் ரத்து செய்யப்பட்டதோடு ஆயிரம் ரூபாய் அபராதமும்
குற்றங்கள் செய்யும் குழந்தைகளின் பாதுகாவலர்களுக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனையுடன் சேர்த்து 25 ஆயிரம் ரூபாய் அபராதம்.
காப்பீடு இல்லாமல் வாகனம் ஓட்டுதல்
4 ஆயிரம் ரூபாய் அல்லது 3 மாதங்கள் வரை சிறைத்தண்டனை
ஆவணங்கள் தொடர்பான குற்றங்கள்
குற்றங்கள்
பிரிவு
தண்டனை
ஆர்.சி இல்லாத வாகனம்
எஸ். 39 ஆர்/டபிள்யூ எஸ். 192
2 ஆயிரம் ரூபாய்
செல்லுபடியாகும் உரிமம் இல்லாத ஒருவருக்கு வாகனத்தை அனுமதித்தல்.
எஸ். 5 ஆர்/வாட் எஸ். 180
ஆயிரம் ரூபாய் (அல்லது 3 மாத சிறைத்தண்டனை)
முறையான ஆவணங்களை எடுத்துச் செல்லவில்லை.
பிரிவு 130(3) ஆர்/டபிள்யூ பிரிவு 177
100 ரூபாய்
செல்லுபடியாகும் அனுமதி இல்லாமல் வாகனம் ஓட்டுதல்
S. 130 r/w S. 177
5 ஆயிரம் ரூபாய் வரை
செல்லுபடியாகும் உடற்தகுதி இல்லாமல் வாகனம் ஓட்டுதல்
S. 130 r/w S. 177
5 ஆயிரம் ரூபாய் வரை
4.போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு மின்னணு சலான்கள் வழங்கப்படும். பு
திய போக்குவரத்து விதிமுறைகளின்படி, ஆவணங்களின் நகல்களை கொண்டிருப்பது கட்டாயமில்லை. உங்கள் வாகனம் தொடர்பான அனைத்து ஆவணங்களின் டிஜிட்டல் நகலை நீங்கள் எடுத்துச் செல்லலாம்.
இந்தியாவில் சாலைப் பாதுகாப்பைப் பராமரிக்கவும் விபத்துகளைக் குறைக்கவும் போக்குவரத்து விதிகள் மற்றும் ஒழுங்கு முறைகள் முக்கியம். இந்த விதிகளைப் பின்பற்றுவதற்கு அரசாங்கம், சட்ட அமலாக்க நிறுவனங்கள் மற்றும் குடிமக்களின் கூட்டு முயற்சி தேவைப்படுகிறது. பொறுப்பான சாலை நடத்தையை ஊக்குவிப்பதில் கல்வி மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. கூடுதலாக, போக்குவரத்துச் சட்டங்களை கடுமையாக செயல்படுத்துதல், வழக்கமான கண்காணிப்பு மற்றும் மீறல்களுக்கு கடுமையான தண்டனைகள் ஆகியவை இணக்கத்தை உறுதி செய்வதற்கு அவசியம்.
ஆனால் மோட்டார் வாகன சட்ட விதிகளை காற்றில் பறக்க விட்டு மதுரை மாநகர் போக்குவரத்து காவலர்கள் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் கண்டுகொள்ளாமல் கல்லா கட்டி வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மதுரை மாநகரில் பொது போக்குவரத்துக்கு அரசு பஸ்கள் மட்டுமே இயங்கி வருகின்றன.
மதுரை மாநகரில் மக்கள் தொகை அதிகரித்து விட்டதால் மாற்று போக்கு வரத்துக்கான தேவை அதிகளவில் உள்ளது. இதனால் பொது மக்கள் ஷேர் ஆட்டோக்களை அதிகளவில் பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஷேர் ஆட்டோக்கள் மூலம் நல்ல வருவாய் கிடைப்பதால் ஒவ்வொரு தனி நபர்களும் 10 முதல் 30 ஷேர் ஆட்டோக்கள் வரை வாங்கி அதை ஆட்டோ டிரைவர்களுக்கு ரூ.500 வீதம் நாள் வாடகைக்கு விடுகின்றனர்.
மதுரை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் மட்டும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில், நூற்றுக்கும் குறைவான ஆட்டோக்களுக்கு மட்டுமே ‘ஷேர் ஆட்டோ’ பர்மிட் உள்ளன என்றும்
இந்த ஆட்டோக்களில் 5 பேர் மட்டுமே ஏற்றிச் செல்லலாம் என்ற சட்ட விதிகள் இருக்கிறது. ஆனால் 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட ஆட்டோக்கள் போக்குவரத்து சட்ட விதிமுறைகளை மீறி ஷேர் ஆட்டோக்களாக மாற்றப்பட்டு, பயணிகளை அடைத்துச் செல்கின்றன. அப்படி செல்லும் அந்த ஆட்டோக்களிலே மிகப்பெரிய எழுத்தில் 3 பேர் மட்டுமே அமர வேண்டும். மீறினால் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு தகவல் கொடுக்கலாம் என்று ஒரு குறிப்பிட்ட டோல் ப்ரீ தொலைபேசி எண் குறிப்பிட்டுள்ளனர்.
அந்த எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தாலும் எந்த நடவடிக்கையும் எந்த அதிகாரிகளும் எடுப்பதில்லை என்பதுதான் வேதனை.
அதைவிட அதிர்ச்சியான தகவல் என்னவென்றால் மதுரை மாநகரில் ஓடும் பல ஆயிரக்கணக்கான ஆட்டோக்களுக்கு எப்சி, இன்சூரன்ஸ், பர்மிட் இல்லை என அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர்.
மதுரை மாநகரில்
சிக்கனல்கள், சாலைகளில் மூலைக்கு மூலை நின்று ‘ஹெல்மெட்’ போடாவிட்டால் துரத்திப் பிடித்து அபராதம் விதிக்கும் மதுரை மாநகர் போக்குவரத்து காவல் துறையினர் தங்கள் கண் முன்பே சட்ட விதிகளை மீறி பள்ளிக் குழந்தைகள், பெண்கள், பெரியவர்களை அடைத்துச் செல்லும் ஆட்டோக்களை கண்டும், காணாமல் கடந்து செல்கின்றனர். இதற்கெல்லாம் என்ன காரணம் என்ன என்று அப்பகுதி மக்களிடம் விசாரித்தால் மதுரை மாநகரில் ஓடும் ஆயிரக்கணக்கான ஆட்டோக்கள் மதுரை நகர் போக்குவரத்து மற்றும் சட்ட ஒழுங்கு காவலர்கள் தங்களது பினாமிகள் பெயர்களில் ஆட்டோக்களை வாங்கி வாடகைக்கு விட்டு சம்பாதித்து வருவதாகவும் அதேபோல் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் உள்ள ஊழியர்கள் தங்களது உறவினர்கள் பெயரில் ஆட்டோக்களை வாங்கி வாடகைக்கு விட்டிருப்பதாகவும் அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.
.போக்குவரத்து நெரிசல் மிகுந்த பெரியார் பஸ் நிலையம், காளவாசல், சிம்மக்கல், கோரிப்பாளையம், அண்ணா நிலையம், கீழவாசல், பைபாஸ் ரோடு, குரு தியேட்டர், தெற்குவாசல், காமராஜர் சாலை, பரவை உள்ளிட்ட பகுதிகளில் பஸ் நிறுத்தங்களி லேயே நெடுநேரம் ஆட்டோக்களை நிறுத்தி பயணி போக்குவரத்திற்கும் இடையூறு செய்கின்றனர்
மேலும் சாலை குறுகலாக உள்ள வில்லாபுரம், அவனியாபுரம் சிக்கந்தர் சாவடி, முடக்குசாலை, தெப்பக்குளம் போன்ற பகுதிகளில் ஷேர் ஆட்டோக்களால் கடும் போக்குவரத்து மெர்சல் ஏற்படுத்துவது மட்டுமல்லாமல்
விதிமீறல்கள் அதிகரித்து வருவதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மதுரையில் ஷேர் ஆட்டோக்கள் ஏன் இப்படி புற்றீசல் போல் பெருக்கெடுத்தன. எப்படி எந்தவித கட்டுப்பாட்டுக்குள்ளும் வராமல்
இதனால் ஷேர் ஆட்டோக்களில் செல்வோர் ஒருவித அச்சத்துடன் செல்ல வேண்டி உள்ளது. நினைத்த இடத்தில் இறங்கிக் கொள்ளலாம் என்ற வசதி இருப்பதால் தான் பொதுமக்களும் ஷேர் ஆட்டோக்கள் நாடி செல்கின்றனர். இதனால் மற்ற வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
மதுரை நகரில் ஆட்டோக்களில் 3 பேருக்கு பதில் 10 பேரை ஏற்றி பயணிகளிடம் மரண பயத்தைக் காட்டும் அபாய பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
ஆனால் இதையெல்லாம் மதுரை நகர் போக்குவரத்து காவல்துறையினர் கண்டும் காணாமலும் கல்லா கட்டி வருவதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மதுரை நகரில் குறுகிய அளவிலான சாலைகளே அதிகளவில் உள்ளது. இதில் ஷேர் ஆட்டோக்கள் நடுவழியில் நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்குவதால் கடும் போக்கு வரத்து பாதிப்பு ஏற்படுகிறது.இதனால் வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்படுவதுடன் விபத்து அபாயமும் உள்ளது.குறிப்பாக ஷேர் ஆட்டோக் களில் அரசு நிர்ணயித்த அளவைக் காட்டிலும் அதிகளவில் ஆட்களை ஏற்றிச் செல்வதை சர்வசாதாரணமாக காணலாம்.
ஆட்டோக்களில் முகப்பு விளக்கு, இன்டிகேட்டர், ஹாரன்களை பராமரிப்பதில்லை. அதனால், கார் ஓட்டி வருகிறவர்கள், அதிகம் பாதிக்கப்படுகின்றனர். கார்களை இடித்துவிட்டு ஆட்டோக்காரர்கள் தப்பி விடுகின்றனர். ஓட்டுநர்கள் சீருடை, பெயர் விவர ‘பேட்ஜ்’ அணிவதில்லை. இதனாலேயே ஏதாவது விபத்து சம்பவங்கள் நடந்தாலும் கூட ஆட்டோ ஓட்டி வந்தவர்களை போக்குவரத்து காவல்துறையினர் பிடிக்க முடியவில்லை என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
மதுரை மாவட்டத்தில் செல்லுபடியாகும் அனுமதியுடன் 16,199 ஆட்டோ ரிக்ஷாக்கள் உள்ளன. ஆனால், மதுரை மாநகரில் மட்டும் எவ்வளவு ஆட்டோ ரிக்ஷாக்கள் உள்ளன என்பது பற்றிய அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் இல்லை. இருப்பினும், மதுரை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்படுவதாக ஒரு செய்தி உள்ளது.
மேலும், மதுரை மாநகரில் ஆட்டோக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், புதிய ஆட்டோக்களுக்கு அனுமதி வழங்கக் கூடாது என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.விதிமீறல்களில் ஈடுபடும் ஷேர் ஆட்டோ டிரைவர்கள் மீது மதுரை மாநகர் காவல் ஆணையர் அவர்கள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் அதுமட்டுமில்லாமல் மோட்டார் வாகன சட்ட விதிகளை மீறி இயங்கும் ஆட்டோக்கள் அனைத்தையும் பறிமுதல் செய்ய வேண்டும் .வாழ்க்கை பாதுகாப்பாகவும், பயணம் பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும் எதிர்காலத்தை நோக்கி நாம் அனைவரும் பாடுபடுவோம்.
என்பது தான் பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
பொறுத்திருந்து பார்ப்போம் மதுரை மாநகர் காவல் ஆணையரின் நடவடிக்கையை….