இலவச மருத்துவ முகாம்
மதுரை வட மலையான் மருத்துவமனை சார்பாக
மதுரை வட மலையான் மருத்துவமனை சார்பாக
வாடிப்பட்டி அருகே இலவச மருத்துவ முகாம்! பலன்பெற்ற 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் !

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே ராமையன்பட்டி சமுதாய கூடத்தில் மதுரை வட மலையான் மருத்துவமனை சார்பாக இலவச இருதயம் மற்றும் பொது மருத்துவ முகாம் நடந்தது.

இந்த மருத்துவ முகாமில் உடல் எடை உயரம் ரத்த பரிசோதனை ரத்த அழுத்தம் சர்க்கரை அளவு, இ.சி.ஜி உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள்
செய்யப்பட்டது.
இந்த முகாமில் ராமையன்பட்டி, சொக்கலிங்கபுரம், பூச்சம்பட்டி, கச்சைகட்டி, குட்லாடம்பட்டி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த

நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு மருத்துவ சிகிச்சை பெற்று
பலனடைந்தனர்.
அனைத்து ஆண்-பெண் இருபாலருக்கும் இரத்த அழுத்தம் பரிசோதிக்கப்பட்டது. மேல் சிகிச்சை தேவைப்படும் நபர்களுக்கு உரிய ஆலோசனை வழங்கப்பட்டது.
இந்த இலவச மருத்துவ முகாம் ஏற்பாடுகளை வட மலையான் மருத்துவமனை நிர்வாகமே சிறப்பாக செய்திருந்தனர் .