மது போதையில் கீழே தள்ளிவிட்டு கல்லை தூக்கி மார்பில் போட்டதில் உயிரிழந்த சோக சம்பவம்! கொலை வழக்கு பதிவு செய்துள்ள வாடிப்பட்டி காவல்துறை!
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி காவல் நிலையத்திற்குட்பட்ட செமினிப்பட்டி காலணியில் 01.09.24 ந்தேதி 15.00மணிக்கு பாண்டியன் வயது 34/சின்னச்சாமி செமினிப் பட்டி என்பவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த சேகர் ஆகியோர் மது போதையில் ஏற்பட்ட மோதலின் போது சுரேஷ் வயது36 தபெ.பெரியசாமி காமராஜபுரம் காலனி ஜெமினிபட்டி வாடிப்பட்டி மதுரை மாவட்டம் என்பவர் தனது உறவினர் சேகருக்கு ஆதரவாக பாண்டியனை கீழே தள்ளி விட்டு கல்லை தூக்கி மார்பில் போட்டதால் படுகாயம் அடைந்த பாண்டியனை வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலை 6:30 மணிக்கு உயிரிழந்து விட்டார்.
இது சம்பந்தமாக 1/9 /24ஆம் தேதி 16 .30 மணிக்கு வாடிப்பட்டி காவல்துறையினர் பதிவு செய்த மோதல் வழக்கை கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டுள்ளது. கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள சுரேஷ் தற்போது மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இச்சம்பவத்தால் ஜெமினி பேட்டி காலணியில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.