மது போதையில் பெண்ணை பலாத்காரம் செய்தபாஜக நிர்வாகி தலை மறைவு!
திண்டுக்கல் மேற்கு மாவட்ட பாஜகவின் தொப்பம்பட்டி ஒன்றிய பார்வையாளரும், மாவட்ட சொயலாளருமான வயலூர் பகுதியை சேர்ந்தவர் மகுடீஸ்வரன்”
இவரது மனைவி தொப்பம்பட்டி ஊராட்சி மன்ற தலைவராக உள்ளர்.
08/05/2024 காலை 8 மணி அளவில் தொப்பம்பட்டி அரசுதொடக்கப் பள்ளிக்கு ஊராட்சி மன்ற தலைவி கணவர் பாஜக நிர்வாகி மகுடீஸ்வரன் மது போதையில் சென்றுள்ளார்.
பள்ளியில் இருந்த பெண் சத்துணவு அமைப்பாளரை அழைத்து எத்தனை குழந்தைகளுக்கு சமையல் செய்கிறீர்கள் என்று கேட்டுள்ளார் அந்த சத்துணவு பெண் அமைப்பாளர் 35 குழந்தைகளுக்கு இன்று சமையல் செய்கிறோம் எனக் கூறியுள்ளார் அப்படி என்றால் 35 குழந்தைகளுக்கு சமையல் செய்த வாங்கிய பொருள்களை காண்பிக்குமாறு சமையலறைக்கு அழைத்துள்ளார் மகுடீஸ்வரன். அந்தப் பெண் சத்துணவு அமைப்பாளரும் ஊராட்சி மன்ற தலைவி கணவர் அழைக்கிறார் என்று சமையலறைக்கு சென்றுள்ளார் சமையலறைக்குள் சென்றவுடன் கதவை மூடியுள்ளார் மகுடீஸ்வரன் உடனே பெண் சத்துணவு போல் கதவை மூடாதீர்கள் என கதவைத் திறந்து உள்ளார் ஆனால் மது போதையில் இருந்த பாஜக நிர்வாகி மகுடீஸ்வரன் பெண் சத்துணவு அமைப்பாளரை கட்டிப்பிடித்து பலாத்காரம் செய்ய முயற்சி செய்துள்ளார்.
உடனே பெண் சத்துணவு அமைப்பாளர் வெளியே ஓடி வந்து சத்தம் போட்டு உள்ளார்.. உடனே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்ததும் போதையில் இருந்த மகுடீஸ்வரன் இரண்டு சக்கர வாகனத்தில் தப்பி ஓடிவிட்டார். பாதிக்கப்பட்ட பெண் சத்துணவு அமைப்பாளர்
பழனி சாமிநாதபுரம் தாலுகா காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரைப் பெற்றுக் கொண்டு வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவாக இருந்த பாஜக நிர்வாகி மகேஸ்வரனை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். இது சம்பந்தமாக பாதிக்கப்பட்ட பெண் பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டி அளித்த போது தனக்கு நடந்த கொடுமையை கண்ணீர் மல்க கூறினார்.பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட பாஜக நிர்வாகி
மகுடீஸ்வரனை” பாஜக கட்சியின் அனைத்து பொறுப்பில் இருந்து விடுவிப்பதாக மேற்கு மாவட்ட பாஜக தலைவர் கனகராஜ் அறிவிப்பு. மேலும் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் யாரும் அவருடன் தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டாம் எனவும், அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கவும் மாநிலத் தலைவருக்கு பரிந்துரை செய்தும் கடிதம் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட பாஜக நிர்வாகி
மகுடீஸ்வரனை” பாஜக கட்சியின் அனைத்து பொறுப்பில் இருந்து விடுவிப்பதாக மேற்கு மாவட்ட பாஜக தலைவர் கனகராஜ் அறிவிப்பு. மேலும் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் யாரும் அவருடன் தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டாம் எனவும், அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கவும் மாநிலத் தலைவருக்கு பரிந்துரை செய்தும் கடிதம் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.