மன்னிக்க மனமில்லாமல் கல்லூரி மாணவனின் வாழ்க்கையில் விளையாடிய மனிதநேயமற்ற ஈவு இரக்கமற்ற குடியாத்தம் பெண் காவல் ஆய்வாளர்!மாணவனின் நலன் கருதி கல்லூரி படிப்பை தொடர வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுப்பாரா!
தமிழக முழுவதும் கனிம வள கொள்ளை தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று சொன்னால் அதை யாராலும் மறுக்க முடியாது என்பதுதான் நிதர்சனமான உண்மை! குறிப்பாக வேலூர் மாவட்டத்தில் இரவு, பகல் என பார்க்காமல் வெடி வைத்து தகர்த்து தினசரி சுமார் 1000 டாரஸ் லாரிகளில் பினாமி பெயரில் சட்ட விரோதமாக கல் குவாரியில் இருந்து கிராவல் மணல் மற்றும் மண் சட்ட விரோதமாக கனிம வளங்களை சூறையாடி வருவதுடன் இதுவரை ரூ.200 கோடி அளவுக்கு கனிமவள கொள்ளை நடந்துள்ளதாகவும் அரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக இயங்கி வரும் கல்குவாரிகளை தடை செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கும் வேலூர் மாவட்ட கனிமவளத்துறை வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினர் தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அத்துடன் ,
சட்ட விரோதமாக‘150 அடி ஆழத்துக்கு மண் அள்ளியும், கற்களை வெட்டி எடுத்தும் விற்பனை செய்த மணல் மாபியா கும்பலுக்கு ஆதரவாக செயல்படுகிறீர்களா என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஆனால் வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில் கனரக டாரஸ் லாரிகளில் சட்ட விரோதமாக அரசு அனுமதிக்கப்பட்டதை விட அளவுக்கு அதிகமாக கனிம வளங்களை எடுத்துச் செல்வதற்கு கையூட்டு பெற்றுக் கொண்டு கண்டும் காணாமல் குடியாத்தம் தாலுகா பெண் காவல் ஆய்வாளர் சாந்தி அன்றாட பிழைப்புக்கு 200 300 ரூபாய்க்கு இரு சக்கர வாகனத்தில் மணல் எடுத்துச் செல்பவர்களை தடுத்து நிறுத்தி ஈவு இரக்கமின்றி அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நேர்மையான போண்டு அப்பாவி மக்களை குறிவைத்து அவர்களது வாழ்க்கையிலேயே சீரழித்து வருகிறார் என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். அதற்கு உதாரணமாக வேலூர் மாவட்டம், குடியாத்தம் தாலுகாவுக்கு உட்பட்ட ஆலத்தூர் கிராமத்தைச் சேர்ந்த . எடிஷன் என்ற மாணவன் பிபிஏ கல்லூரியில் படித்து வருகிறார். விவசாய குடும்பத்தில் பிறந்த மாணவனின் தந்தைஆற்று மணலை சேகரித்து இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்று விற்பனை செய்து அதில் வரும் வருமானத்தில் தன் மகனை கல்லூரியில் படிக்க வைத்துள்ளார்.இந்தக் கல்லூரி மாணவன் தனது கல்வி கட்டணம் செலுத்தவும், தனது தேவையை நிறைவேற்றிக் கொள்ளவும் விடுமுறை நாட்களில் தந்தையுடன் ஆற்று மணல் எடுக்கச் செல்வது வழக்கம். இந்நிலையில் இருசக்கர வாகனத்தில் மணல் அள்ள தந்தையுடன்
கல்லூரி படிக்கும் மகன் சென்றுள்ளார். அப்போது குடியாத்தம் தாலுகா காவல் ஆய்வாளர் சாந்தி வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த கல்லூரி மாணவன் எடிசன் மற்றும் அவரது தந்தை இருவரையும் நிறுத்தி சோதனை செய்த போது இருசக்கர வாகனத்தில் மணல் வைத்திருந்ததால் கல்லூரி மாணவன் மற்றும் அவனது தந்தை ஆகிய இருவரையும்
காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்ற
குடியாத்தம் தாலுகா காவல் நிலைய பெண் காவல் ஆய்வாளர் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளார். அப்போது தந்தை மற்றும் அந்த ஊரைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் எடிசன் கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவன் அவன் மீது வழக்குப் பதிவு செய்தால் அவனது எதிர்காலமே கேள்விக்குறியாகி விடும் எனவே மாணவனின் கல்வி நலன் கருதி மன்னித்து அவனை விட்டு விடுங்கள் தந்தை மீது மட்டும் வழக்குப் பதிவு செய்து கைது செய்து கொள்ளுங்கள் என்று பெண் காவல் ஆய்வாளர் சாந்தி இடம் கெஞ்சி கேட்டுள்ளனர் ஆனால் மன்னிக்க மனமில்லாமல் மனிதநேயமற்ற முறையில் வக்கிர புத்தியுடன் நடந்து கொண்ட குடியாத்தம் தாலுகா காவல் நிலைய பெண் காவல் ஆய்வாளர் சாந்தி கல்லூரி படிக்கும் மாணவன் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிபதியின் உத்தரவின் பேரில் சிறையில் அடைத்து தான்தோன்றித்தனமாக நடந்து கொண்ட விளைவின் காரணமாக கல்லூரி படிக்கும் மாணவன் எடிசன் சிறையில் இருப்பதை தெரிந்து கொண்ட கல்லூரி நிர்வாகம் மாணவனை கல்லூரியில் இருந்து நிரந்தரமாக நீக்கம் செய்து விட்டுள்ளனர். தற்போது அந்த மாணவன் தனது கல்விக் கனவை தொடர முடியாமல் தன் வாழ்க்கையே கேள்விக்குறியாகி விட்டதால் செய்வதறியாமல் சாலைகளில் சுற்றித் திரிந்து வருவதைப் பார்க்கும் அப்பகுதி மக்கள் அந்த மாணவனுக்கு ஆறுதல் மட்டுமே கூறி வர முடிகிறது என்கின்றனர்.கடமை கண்ணியம் கட்டுப்பாடுடன் காவல்துறை பணி செய்து வருவதாக வெளியில் தன்னைத் தானே பெருமையாக காட்டிக் கொள்ளும் இந்த அமைதிக்கு பெயர் தான் சாந்தியா!? என அப்பகுதி மக்களிடம் பெண் காவலர் சாந்தியை பற்றி விசாரித்த போது பல அதிர்ச்சி தரும் திடிக்கிடும் தகவல்களை கூறினார். அது என்னவென்றால் குடியாத்தம் தாலுகா காவல் நிலையத்துக்கு காவல் ஆய்வாளராக சாந்தி பொறுப் பேற்றதிலிருந்து மணல் வண்டிகளுக்கு வாரம் ரூபாய் ஐந்தாயிரம், டிப்பர் லாரிகளுக்கு வாரம் ரூபாய் 10 ஆயிரம், டாரஸ் லாரிகளுக்கு ரூபாய் 20000 என்று ஒவ்வொரு வாகனங்களுக்கும் தரம் பிரித்து வசூல் வேட்டை நடத்தி வருகிறார். இருசக்கர வாகனங்களுக்கு தலா ரூபாய் 2000 என வாரந்தோறும் சனிக்கிழமைகளில் இவருக்கு செலுத்தி விட வேண்டும். இது எழுதப்படாத சட்டமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. எந்த வாகனங்களின் உரிமையாளர்கள் மாமுல் கொடுக்கவில்லையோ அந்த வாகனம் மற்றும் வாகனத்தின் உரிமையாளரை கொண்டு வந்து வழக்குப் பதிவு செய்து ஈவு இறக்கமின்றி சிறைக்கு அனுப்புவதை வழக்கமாகக் கொண்டுள்ளார் இந்த கடமை தவறாத பெண் ஆய்வாளர். அத்துடன் யார் இவரிடம் பேசினாலும் இவர் தனது போலீஸ் வாகனத்தில் இருந்து கீழே இறங்காமல் தனது இருக்கையில் அமர்ந்து கொண்டு பேசுவதையே வழக்கமாகக் கொண்டுள்ளார். அத்துடன் காவல் நிலையங்களுக்கு புகார் கொடுக்கவோ விசாரணைக்கு வருபவர்களையோ கிட்டத்தட்ட 20 மீட்டர் தூரத்தில் நிற்க வைத்து உரக்கப் பேசு சாப்பிட வில்லையா என்று விசாரணை என்ற பெயரில் அவர்களை மிரட்டுவது மற்றும் ஒருமையில் பேசுவது விரட்டுவது என்று கடமை கண்ணியம் கட்டுப்பாடு எல்லாவற்றையும் காற்றில் பறக்க மனிதநேயமற்ற முறையில் பணியை தொடர்ந்து வழக்கமாக செய்து வருகிறார் இந்த பெண் காவல் ஆய்வாளர் சாந்தி என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். இவர் பெயரில் தான் சாந்தி உள்ளது. செயல்களில் கொடூரமும், மனிதநேயமற்ற செயலும் தான் தோன்றித்தனமாக செயல்படுவதாக பொதுமக்கள் அதிர்ச்சி தகவலை தெரிவிக்கின்றனர். குடியாத்தம் தாலுகா காவல் நிலையத்தில் நடக்கும் அவலங்கள் வேலூர் மாவட்ட காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு தெரியுமா? தெரியாதா? என்பது தெரியவில்லை. தனிப்பிரிவு தலைமை காவலர்கள், தனிப்பிரிவு உதவி ஆய்வாளர்கள், தனிப்பிரிவு ஆய்வாளர்கள் என யாரும் இவர் மீது புகாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர், வேலூர் சரக காவல்துறை துணைத் தலைவர் ஆகியோருக்கு அனுப்பினார்களா? இல்லையா? என்பது தெரியவில்லை. இவர் மீது துறை ரீதியான நடவடிக்கையை விரைந்து எடுக்க வேண்டும் என்பதே குடியாத்தம் தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வாழும் பொது மக்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக மாறியுள்ளது. அத்துடன் 50 ஊராட்சிகளை இந்த காவல் நிலைய எல்லைக்குள் வைத்துக்கொண்டு என்னென்ன சமூக விரோத செயல்கள் உள்ளதோ அவற்றையெல்லாம் பயன்படுத்தி இவர் அதை வருமானமாக பெருக்கி தனது பாக்கெட்டில் போட்டுக்கொண்டு செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். இப்படி இவர் மீது அடுக்கடுக்கான புகார்கள் ஓராண்டிற்குள்ளாக குவியத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆதலால் இவர் உடனடியாக போர்க்கால அடிப்படையில் குடியாத்தம் தாலுகா காவல் நிலையத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட வேண்டும் என்பதே இந்த பகுதி வாழ் மக்களின் ஒட்டுமொத்த வேண்டுகோளாக கோரிக்கையாக மாறியுள்ளது .இதற்காக அவர்களும் திடீர் போர்க் கொடித் தூக்க ஆரம்பித்து விட்டனர் என்பதே குறிப்பிடத்தக்கது. அதற்குள் காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் தமிழ்நாடு காவல்துறை டிஜிபி ஆகியோர் குடியாத்தம் தாலுகா காவல் நிலைய பெண் காவல் ஆய்வாளர் சாந்தி மீது சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கூறும் குற்றச்சாட்டு உண்மையா என
வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேர்மையான காவல்துறை அதிகாரிகளை வைத்து விசாரணை மேற்கொண்டு குடியாத்தம் தாலுகா காவல் நிலைய காவல் பெண் ஆய்வாளர் சாந்தி மீது துறை ரீதியான விசாரணையை நடத்தி ஒழுங்கு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி போன்ற அதிகாரிகள் பொதுமக்களுக்கு சேவை செய்ய எப்போதுமே முன்வர மாட்டார்கள் என்கின்றனர் குடியாத்தம் பகுதி பொதுமக்கள். பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் தமிழக காவல்துறை டிஜிபி அவர்களின் நடவடிக்கையை!?