இளைஞர்கள் இரண்டுபேர் கள்ளச் சாராயம் வியாபாரிகளால் வெட்டிப் படுகொலை!
காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட பெரம்பூர் காவல் நிலைய பெண் காவல் ஆய்வாளர் நாக வள்ளி காரணமா!?..
நடந்தது என்ன?

மயிலாடுதுறை முட்டம் இளைஞர்கள் படுகொலைக்கு

பெரம்பூர் பெண் காவல் ஆய்வாளர் நாக வள்ளி கள்ளச்சாராய வியாபாரிகளுக்கு உடந்தையாக செயல்பட்டதனால் தான் கொலையில் முடிந்ததாக சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு!


மாநில மனித உரிமை கமிஷன் டி.எஸ்.பி.,யாக பணிபுரிந்த சுந்தரேசன்,



மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப்பிரிவுக்கு
மாற்றப்பட்டு 2024 நவம்பர் 25 ஆம் தேதி பொறுப்பேற்றுக்கொண்டார் அப்போது பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசிய சுந்தரேசன்
மயிலாடுதுறை மாவட்டத்தில் கஞ்சா மற்றும் சட்டவிரோத மது விற்பனை முற்றிலுமாக ஒழிக்கப்படும் என புதிதாக பொறுப்பேற்றுள்ள மதுவிலக்கு துணை காவல் கண்காணிப்பாளர் சுந்தரேசன் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து, மாவட்டத்தில் கஞ்சா, சட்டவிரோத மது மற்றும் சாராய விற்பனையை தடுக்க அவர் கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். கடந்த சனிக்கிழமை அன்று ஒரேநாளில் சட்டவிரோத மது மற்றும் சாராய விற்பனையில் ஈடுபட்ட 8 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து கடத்தல் மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மதுவிலக்குத் துணை காவல் கண்காணிப்பாளர் சுந்தரரேசனின் மேற்பார்வையில் மாவட்டம் முழுவதும் மதுவிலக்குப் பிரிவு காவல் ஆய்வாளர்கள் அன்னை அபிராமி, ஜெயா, உதவி ஆய்வாளர்கள் கோவிந்தராஜன், சேகர், காயத்ரி மற்றும் மதுவிலக்கு காவல்துறையினர் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
அதில், எலந்தங்குடி, கிளியனூர், முட்டம், ஆத்தூர், மாதிரிவேளூர், புத்தூர், அகரஎலத்தூர், திருமுல்லைவாசல், சீர்காழி உள்ளிட்ட ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், 92 மதுப்பாட்டிகள், 29 பாண்டி சாராயப்பாட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், இதில் தொடர்புடைய பெண்கள் 3 பேர் உள்பட 12 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், செந்தில்குமார் (51), தங்கதுரை (27), மணி (80) ஆகிய 3 பேர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். மேலும் கைது செய்யப்பட்ட ஜெயக்குமார் (24), மணிவண்ணன் (26), அன்புமணி (40), சுரேந்தர்(25), வெங்கட்ராமன் (46) பாரதி(38), டெய்சி (58), அமுதா (36) ஆகிய 8 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் வெளி மாநில மது, சாராயம் விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபடுவோர் மீது தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், இந்த சோதனை தொடரும் எனவும், மயிலாடுதுறை மாவட்டத்தில் இதுபோன்ற குற்றச்சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் அதனை கைவிட்டு, திருந்தி வாழ வேண்டும் என டிஎஸ்பி சுந்தரேசன் எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மயிலாடுதுறை மாவட்டம், பெரம்பூர் காவல் சரகம், முட்டம் கிராமம், வடக்கு தெருவில் வசிக்கும் மூவேந்தன் வயது 24
மூவேந்தனின் அண்ணன் தங்கதுரை (28 வயது) மற்றும் உறவினர் ராஜ்குமார் (34 வயது) ஆகிய இருவர் மீதும் மதுவிலக்கு காவல்துறையினர் பிப்ரவரி முதல் வாரத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். சிறையில் இருந்து வெளியே வந்த பின்பு மீண்டும்
சட்டவிரோதமாக சாராயம் விற்பனை செய்துள்ளனர்.
அதே பகுதியைச் சேர்ந்த தினேஷ் மற்றும் அவரது நண்பர்களான கல்யாண்குமார் மகன் ஹரிஷ் (25 வயது), பாலமுருகன் மகன் ஹரி சக்தி (20 வயது), அஜய் (19 வயது) ஆகிய மூன்று பேரும் சாராயம் விற்பனை செய்த
தங்கதுரை, ராஜ்குமார், மூவேந்தன் ஆகியோரை தட்டிக் கேட்டுள்ளனர்.
ஆனால் மதுபோதையில் இருந்த மூன்று பேரும் அஜய்
ஹரிஷ் ஹரி சக்தி ஆகிய மூன்று பேரையும்
கத்தியால் தாக்கி உள்ளனர். அதில் ஹரிசுக்கு வயிற்று பகுதியிலும், சக்திக்கு முதுகு பகுதியிலும் காயம் ஏற்பட்டது. அஜய்க்கு கையில் காயம் ஏற்பட்டுள்ளது. மூவரையும் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் வழியிலேயே ஹரிஷ், மற்றும் சக்தி இருவரும் இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறிய பின்பு இரண்டு பேர் உடலையும் மருத்துவ பிரோத பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால் அந்த உடலை வாங்க மறுத்து
கொலை செய்யப்பட்ட மாணவர்களின் உறவினர்கள்
சாராய வியாபாரிகளான ராஜ்குமார், மூவேந்தன் ஆகியோர் வீடுகளுக்கு தீ வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது .
இருவரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது .
ஆனால் இந்தப் படுகொலைக்கு
காவல்துறையினர் உடந்தையாக இருப்பதாகக் கூறி, உயிரிழந்தவர்களின் உடல்களை வாங்க மறுத்து
மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் முட்டம் கிராம பொதுமக்கள் 200 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையின் முன்பு போராட்டம் நடத்தினர்.

அதன் பின்னர்
சம்பவ இடத்தில் நேரில் வந்த மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின்
கொலை செய்யப்பட்ட மாணவர்களின் உறவினர்கள் மற்றும் ஊர் கிராம பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது
கொலை செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கைது செய்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உறுதியளித்தார்.
அதனைத் தொடர்ந்து இந்த படுகொலை குறித்து பெரம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய சாராய வியாபாரிகள் 3 பேரைத் தீவிரமாகத் தேடி வந்தனர். இதனையடுத்து மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இரண்டு இளைஞர்கள் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒருவரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆனால் இது சம்பந்தமாக பகுதி மக்கள் கூறிய போது
முட்டம் கிராமத்தில் வடக்குதெரு பகுதியில் ராஜ்குமார், தங்கதுரை, மூவேந்தன் ஆகியோர் தொடர்ந்து கள்ளச்சாராயம் விற்பனை செய்து வந்ததாகவும் இதுகுறித்து பெரம்பூர் காவல் நிலையம் மற்றும் மயிலாடுதுறை மதுவிலக்கு காவல்துறையினர் 8-க்கும் மேற்பட்ட புகார்கள் அளித்துள்ளதாகவும் ஆனால்,

பெரம்பூர் காவல்நிலைய ஆய்வாளர் நாக வள்ளி கள்ளச்சாராய வியாபாரிகளிடம் கையூட்டு பெற்றுக் கொண்டு புகார் கொடுக்கும் மக்களை மிரட்டுவது, வழக்குப் போடுவது என கள்ளச்சாராய வியாபாரிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்ததாகவும்
அதுமட்டுமின்றி புகார் அளிப்பவர்கள் குறித்த விபரங்களை சாராய வியாபாரிகளிடமும் தகவல் கூறி வந்துள்ளார். சாராய வியாபாரிகளும் புகார் கொடுத்தவர்களை தாக்குவது, கொலை மிரட்டல் விடுவது என வாடிக்கையாக வைத்திருந்ததாகவும்
இந்த படுகொலை சம்பவம் முன்விரோதமே காரணம் என மாவட்ட காவல்துறையினர் சார்பில் அளித்துள்ள விளக்கம் இப்பகுதியில் நடக்கும் கள்ளச்சாராய வியாபரத்தை மூடி மறைக்கவும், இதற்கு சட்டவிரோதமாக உடந்தையாக இருந்த காவல்துறை அதிகாரிகள் மற்றும் மதுவிலக்கு துறை அதிகாரிகளை பாதுகாக்க கூடிய செயலாகும்.
எனவே, இந்த படுகொலையில் ஈடுபட்ட கள்ளச்சாராய வியாபாரிகள் அனைவரையும் காவல்துறையினர் கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்கள் சார்பில் 8-க்கும் மேற்பட்ட புகார்கள் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் கள்ளச்சாராய வியாபாரிகளுக்கு உடந்தையாக இருந்த பெரம்பூர் காவல்நிலைய ஆய்வாளர் நாக வள்ளி மற்றும் காவல் துறையினர், மதுவிலக்கு பிரிவினர் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
இந்த சம்பவத்தில் மேலும் இரண்டு நபர்களை கைது செய்ய வேண்டும். இதில் இரண்டு பெண் சாராய வியாபாரிகளுக்கும் தொடர்பு இருக்கிறது. அவர்களையும் முதல் தகவல் அறிக்கையில் சேர்க்க வேண்டும்.
இறந்த இரண்டு கல்லூரி மாணவர்களின் குடும்பத்திற்கு தலா ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் அவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்
தமிழகத்தில் கள்ளச்சாராய விற்பனையை முற்றிலுமாக ஒழிப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்
என கோரிக்கை வைத்துள்ளனர். முன்னாள் பெரம்பூர் பெண் காவல் ஆய்வாளர் நாக வள்ளியை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
