மருத்துவத் துறையில் வேலை
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணி !
விருதுநகர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தொற்று தடுப்பு பணிக்காக ஆறுமாதம் தற்காலிக தொகுப்பூதியத்தில் துணை மருத்துவ பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற உரிய கல்வி சான்றிதழுடன் அனுப்ப வேண்டும்.
இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் விருதுநகர் மருத்துவ கல்லூரி முதல்வர் அலுவலகத்திற்கு நேரிலோ தபால் மூலமோ 4/8/ 2021 தேதிக்குள் விண்ணப்பிக்க விருதுநகர் மாவட்ட ஆட்சியாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.